in ,

உள்ளங்கையில் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

இணையத்தில்  உலகத்தை  இழுத்து  வந்தே

     இல்லத்தில்  அமர்ந்தபடி  காணு  கின்றோம்

புனைகதையில்  படித்துநாமும்  வியந்து  நின்ற

   பிறக்கோளில்  கால்பதித்தே  ஆயு  கின்றோம் !

முனைப்பாகச்  செயற்கைக்கோள்  பறக்க  விட்டே

   மூடியுள்ள  புவிவளங்கள்  அறியு  கின்றோம்

துணையாக  அறிவியலைச்  சேர்த்துக்  கொண்டு

   துலங்காதப்  புதிர்களினை  விடுவிக்  கின்றோம் !

 

கல்விதனைத்  தொழிர்நுட்பக்  கணினி  மூலம்

    கற்கின்ற  முன்னேற்றம்  நாமும்  பெற்றோம்

பல்துறையின்  அறிவுபெற்றே  தொழிலின்  கூடம்

    பார்க்கின்ற  இடமெங்கும்  இயங்க  வைத்தோம் !

வெல்லுகின்ற  மின்னியலின்  சாத  னங்கள்

    வீட்டிற்குள்  குடிசைத்தொ  ழில்போல்   செய்தோம்

பல்விதமாய்  உற்பத்தி  செய்தே  ஊரின்

    பாதையோரம்   விற்பனைக்குக்  குவித்து  வைத்தோம் !

 

நீர்தடுத்தே  அணைகட்டிப்  பசுமை  செய்தோம்

   நீரணுவில்  மின்சாரம்   பிரித்தெ  டுத்தோம்

பார்வியக்க   மூலிகையில்  எரிநெய்  காய்ச்சிப்

    பதைபதைக்கும்  எய்ட்சுக்கும்  மருந்தைக்  கண்டோம் !

ஊர்தோறும்  புதுமைகளைத்  தொடங்கி  வைத்தே

    உள்கையில்  உலகத்தை  வைத்த  நாமோ

போர்க்களமாய்ச்  சாதிமதப்  பகையால்  வெட்டிப்

     பெருக்குகின்ற  குருதியிலே  சாயு  கின்றோம் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வயல்வெளி (சிறுகதை) – ஜெயந்தி.M

    வீட்டோட மாப்பிள்ளை (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்