in , ,

புத்தாண்டில் பூக்க வேண்டும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

நிலவினிலே  கால்வைத்தோம்  செயற்கைக்  கோளை

          நீல்வானில்  பறக்கவிட்டோம்!  கண்ணால்  செவ்வாய்

நிலம்பார்த்துக்  காலூன்றி  இறங்க  வேண்டும்

          நிறைந்துள்ள  வளங்களினை  அறிய  வேண்டும் !

புலம்பெயர்ந்தே  அடுத்தகோளில்  வாழ  வேண்டும்

          புரியாத  இயற்கைபுதிர்  புரிய  வேண்டும்

நலமாக  இவையெல்லாம்  இருபத்  தொன்றாம்

          நல்லபுது  ஆண்டினிலே  மலர  வேண்டும் !

 

வான்முட்டும்  தொழிற்சாலை  அணைகள்  என்றே

          வளம்பெருக்கும்  தொழிற்புரட்சி  நாட்டில்  செய்தோம்

தேன்சுவையாய்  வாழ்வினிக்க   விஞ்ஞா  னத்தால்

          தேவையெனும்  கருவிகளை  ஆக்கிக்  கொண்டோம் !

வான்படல  ஓசோனின்  துளையும்  நீங்கி

          வற்றாத  கங்கைநீர்கா  விரியில்  சேர்ந்து

மேன்மேலும  முன்னேற்றம்  இருபத்  தொன்றாம்

          மேன்மையுடை  புத்தாண்டில்  நடக்க  வேண்டும் !

 

வீட்டிற்குள்  இணையத்தால்  உலகை  வைத்தோம்

          வீதிக்குள்  சாதிகளால்  பகைமை  வைத்தோம்

நாட்டிற்குள்  பதவிகளால்  சண்டை  வைத்தோம்

          நன்நெஞ்சுள்  தன்னலத்தால்  நஞ்சை  வைத்தோம் !

கேட்டிற்கே  துணையாம்இக்  கீழ்மை  நீங்கிக்

          கேடகன்று  மனத்தினிலே  மனித  நேயக்

கூட்டுறவால்  வாழ்வெல்லாம்  மகிழ்ச்சி  தம்மில்

          கூடுமின்பம்  புத்தாண்டில்  பூக்க  வேண்டும் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாடு நம்ம குடும்பம் (ஒரு கிராமத்து குடும்பக் கதை) – தெனாலி ராமன்

    பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 7) – பவானி உமாசங்கர்