2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
எதிர் வீட்ல புதுசா வந்து இருக்காங்களே யாருமா, உங்க கிட்ட பேசினார்களா என கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த மகன் தினேஷ் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
நேத்திக்கு வந்து என்னமோ வந்து கேட்டாங்கா, அவங்களுக்கு தமிழ் சுத்தமா வரல, வடநாட்டுக்காரங்க போல இருக்கு, ஹிந்தில தான் பேசினாங்க. எனக்கு எதுவுமே புரியல, அவங்க பொண்ணு இங்கிலீஷ்ல வந்து பேசினா, எனக்கு என்ன இங்கிலீஷா தெரியும்? திரு திருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன்.
அப்புறம் ஒரு பேப்பரும் பென்சிலும் கொண்டு வந்து ஒரு படத்தை போட்டு வரைந்து காமிச்சா, அந்தப் படத்தை பார்த்த பிறகு தான் மளிகை கடைய தான் கேட்டு இருக்காங்க போல இருக்கு, என நான் கதவை பூட்டிட்டு அந்த பொண்ண கடைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.
நமக்கே ஒன்னும் தெரியல, கடைக்காரருக்கு என்ன தெரியப் போகுது, இன்னைக்கு அவர் பாடு கொஞ்சம் கஷ்டம் தான் என நினைத்துக் கொண்டு மளிகை கடைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்க சென்ற பிறகுதான், மளிகை கடைக்கார அண்ணாச்சி அவங்க ஹிந்தியில சொல்ற பொருள் எல்லாத்தையும் டக்கு டக்குனு எடுத்து கொடுக்கிறார். எனக்கு ஒண்ணுமே புரியல, அண்ணாச்சிய பாத்தா எதுவுமே தெரியாத மாதிரி இருக்குது, இந்த போடு போடுறாரே அப்படின்னு மனசுல ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த பொண்ணு எல்லாமே வாங்கி முடித்த பிறகு, என்ன அண்ணாச்சி, ஹிந்தியில இவ்ளோ அழகா பேசுறீங்க, எப்படி அண்ணாச்சி இதெல்லாம் கத்துக்கிட்டீங்க, அஞ்சாம் கிளாஸ் தான் படிச்சேன்னு சொன்னீங்க, எனக்கு படிப்பு வரலைன்னு மளிகைக் கடைக்கு வேலைக்கு அனுப்பிச்சுட்டாங்க, எத்தனை தடவை என்கிட்ட புலம்பிக்கிட்டு இருந்தீங்க என தினேஷின் அம்மா மளிகை கடைக்காரர் அண்ணாச்சியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நீங்க இருக்கிற அப்பார்ட்மெண்ட் கட்டும் போது நிறைய பேரு வட இந்தியாவுல இருந்து வந்தவங்க தான் அந்த வீட்டில் வேலை பார்த்தார்கள். பக்கத்திலேயே சின்ன சின்ன குடிசை போட்டு சமைச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க.
அப்போது அதிகமாக கடைகள் எல்லாம் கிடையாது. இரண்டு மூன்று கடை தான் இருந்தது. கடைக்கு மளிகை பொருட்களை வாங்க வரும் போது அவங்க பேசுற ஹிந்தி ஒண்ணுமே புரியாம இருந்துச்சு.
அப்போது என்னுடைய மனைவியும் கடைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் தான் கடையை பார்த்துக் கொண்டிருந்தோம்.
கடையில இப்படி வியாபாரத்தை விட்டுட்டோம்னா, நம்மளால சம்பாதிக்க முடியாதுன்னு நானும் என் மனைவியும் இரவு 9 மணிக்கு மேல் ஹிந்தி டியூஷன் மாஸ்டர் ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து வீட்டிலேயே ரெண்டு பேரும் படித்து வந்தோம்.
அவர் ஆங்கிலமும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். எந்தத் தேர்வும் எழுதவில்லை. கிட்டத்தட்ட நானும் என் மனைவியும் ஒரு வருடம் ஹிந்தியை முழுமையாக பேச கற்றுக் கொண்டதன் பலன் இன்று அனைத்தையும் சமாளிப்பதற்கான தகுதியையும் கொடுத்திருக்கிறது என்று சொன்னார் மளிகை கடைக்கார அண்ணாச்சி.
ஒரு மொழியை படிக்கிறதனால தவறு கிடையாது, ஏதாவது ஒரு இடத்துல நமக்கு அந்த மொழி பயன்படும். நானும் எனது மனைவியும் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. ஆனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்கு ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவது எங்களுக்கு கைவந்த கலை.
படிக்கவில்லை என்ற வருத்தம் மனதில் இருந்தது, இப்போது அந்த வருத்தம் துளி கூட கிடையாது. படித்த என்னுடைய சகோதரர்களை விட இன்று நான் அதிக வசதியோடு வாழ்ந்து வருகிறேன்.
என் குடும்பத்தார் அனைவருக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறேன். என்னுடைய பையன் எம் பி ஏ படித்துக் கொண்டிருக்கிறான். படித்து முடித்தவுடன் அவனும் இந்த கடையைத்தான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இந்த மளிகை கடையை வைத்து நடத்திக் கொண்டிருப்பதால் தூக்கம் என்பது குறைவுதான். ஆனால் மனதளவில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என் குடும்பம். காரணம் ஒவ்வொருவரும் என் கடையில் வந்து பொருட்களை வாங்கிச் செல்லும்போது அனைவரிடமும் அன்பாக பேசும் போது ஒரு மனதிருப்பி கிடைக்கிறது.
அண்ணாச்சி, நீங்க பயங்கரமான ஆளு தான். என் பையன் கல்லூரி முடித்தவுடன் உங்க கடையில தான் வேலைக்கு சேர்க்க போறேன். அவனை நீங்களும் உங்களை மாதிரி ஒரு தொழிலதிபரா உருவாக்கணும் என்று சொல்ல, அழைச்சிட்டு வா தங்கச்சி கண்டிப்பா என்ன போலவே உன் பையன உருவாக்கி தருகிறேன் என்று சொல்ல மன மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி நடந்தார் தினேஷின் அம்மாவும் அந்த வடநாட்டு பொண்ணும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
வெகு சிறப்பு மா. வாழ்த்துகள்.