in ,

படிப்பில் பாலியல் (சிறுகதை) – காவ்யா சரவணன்

தூரத்தில பெல் அடிக்கிற சத்தம் கேட்டதும், ஐயோ………..நேரமாயிட்டே-னு வேகமா ஓடி வந்து கேட்டுக்கு வெளில நின்னு எட்டி பார்க்க பிரயர் ஆரம்பிச்சிட்டு.

அப்டியே மெதுவா யாருக்கும் தெரியாம படில பேக்க வச்சுட்டு வரிசையில வந்து நின்னா யமுனா.

என்ன யமுனா வழக்கம் போல இன்னைக்கும் லேட்டா-னு முன்னாடி நின்ன ராதிகா கேக்க ஆமா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே தூங்கிட்டேன்-னு யமுனா சொல்ல இரண்டு பேரும் பிரயர் முடிஞ்சதும் படில இருந்த பேக்க எடுத்துட்டு கிளாசுக்கு போறாங்க.

யமுனா ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு ஆனா கொஞ்சம் வாலு. ப்ரண்ட்ஸ்-னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்கூல யார்கிட்ட யமுனா-வ பத்தி கேட்டாலும் தெரியாது-னு சொல்லவே மாட்டாங்க. அந்த அளவுக்கு எல்லார்கிட்டையும் ரொம்ப சுலபமா ப்ரண்ட் ஆகிடுவா.

ராதிகாவும் நல்லா படிக்கிற பொண்ணு தான் ஆனா, அவ ரொம்ப பயந்த சுபாவம் கொண்டவ.

யமுனாவும் ராதிகாவும் பொறந்ததில இருந்தே ஒன்னாவே வளர்ந்தவங்க. அதனாலயே இரண்டு பேரும் ஒருத்தர்கொருத்தர் அன்பாவும் அக்கறையாவும் இருப்பாங்க.

ஆமா இன்னைக்கு முத ப்ரீடு என்னது ராதிகா?.

ம்ம்……..மேக்ஸ்.

என்னது மேக்ஸா……..?.

சரி, அப்ப வா கேண்டீனுக்கு போயிட்டு பொறுமையா கிளாசுக்கு போலாம்-னு யமுனா கூப்ட.

என்னது கேண்டின் போகனுமா………?.

அப்ப-னா கிளசுக்கு போறது லேட் ஆயிறுமே…….!.

லேட்டா போகனும்-னு தான கேண்டினுக்கே கூப்டுறேன்.

ம்ம்………..

என்னால்லாம் முடியாது!.

லேட்டா போனா டீச்சர் திட்டுவாங்க. நீயும் கேண்டீனுக்குலாம் போக வேண்டாம் கிளாசுக்கே வா-னு ராதிகா யமுனாவ கூட்டிட்டு கிளாசுக்கு போக 

யமுனாவும் இனி வெளில போனா மாட்டிப்போம்னு சொல்லி கிளாசுக்குள்ளேயே உட்கார்ந்துட்டா.

எப்டியோ ஒரு வழியா ஸ்கூல் முடிய…….

சரி, வா ராதிகா நம்ம கடைக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம்.

கடைக்கா…….? என்னது வாங்க போற……….!.

என்ன………! என்னது வாங்க போறியா……….?. நேத்து தான உங்கிட்ட சொன்னேன் ப்ரெண்ட்ஷிப்-டே வர போது ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஒரே மாதிரி ரிங் எடுப்போம்னு.

அட ஆமா…………!.நா மறந்தே போய்ட்டேன்.

சரி, வா வீட்டுக்கு போய்ட்டு டியூசனுக்கு போன் பண்ணி நான் இன்னைக்கு வர மாட்டேனு சொல்லிட்டு அப்டியே கடைக்கு போய்ட்டு வரலாம்.

என்னது……….. வீட்டுக்கு போய்ட்டு வரனுமா………? என்னப்பா நீ இப்டி இருக்க?.

ஸ்கூல் முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு தான் போனும் இப்டி வெளில சுத்தக்கூடாதுன்னு ராதிகா சொல்ல வேற வழியில்லாம அவ கூட வீட்க்கே போறா யமுனா.

ராதிகாவோட அப்பா ஒரு நல்ல சம்பளத்தோட பெரிய உத்யோகத்துல இருக்காங்க. ராதிகாக்கும் அப்பா மாதிரியே நல்லா சம்பாதிக்கனும்னு ஆசை. தான் சம்பாதிக்கிற பணத்த வச்சு ஒரு பௌண்டேஷன் உருவாக்கி அது மூலமா நிறைய பேருக்கு உதவனும்னு ஆசை

யமுனாவுக்கு அப்பா கிடையாது. அவளோட அம்மா ஒரு சின்ன தள்ளுவண்டி கடை வச்சு அதுல வர காச வச்சு தான் அவள படிக்க வைக்குறாங்க அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போது மருந்து மாத்திரை வாங்க கூட அவங்க அம்மா கையில பணம் இல்லை. 

சரியான நேரத்துக்கு மருந்து வாங்கி கொடுக்காததால தான் உடம்பு ரொம்ப மோசமாக ஆரம்பிச்சுது. அப்டியே இறந்தும் போய்ட்டாங்க. அப்ப மட்டும் கொஞ்சம் பணம் இருந்தா உங்க அப்பாவ காப்பாத்திருக்கலாம்-னு அவங்க அம்மா அடிக்கடி சொல்லி அழுவாங்க.

தன்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு நினைச்சு டாக்டருக்கு படிச்சு எல்லாருக்கும் இலவசமா வைத்தியம் பார்க்கனும்னு ஆசப்பட்டா யமுனா.

இரண்டு பேரும் கடைக்கு போய் ரொம்ப அழகான மோதிரத்தை வாங்குனாங்க.

கடைக்கு போய்ட்டு வர வழியில யமுனா-னு யாரோ கூப்ட இரண்டு பேரும் திரும்பி பார்க்க.

கூப்டது யமுனாவோட அத்தை. ரெண்டு பேரும் எப்டி இருக்கீங்கனு? நலம் விசாரிக்க.

ம்ம்………… நாங்க சூப்பர்-னு! இரண்டு பேரும் ஒரே மாதிரி பதில் சொன்னாங்க.

சரி……… யமுனா சீக்கிரம் வீட்டுக்கு போய் கிளம்பு இன்னைக்கே நாம ஊருக்கு போறோம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் ஊர்ல தங்கிட்டு மறுநாள் நானே கூட்டிட்டு வந்து விட்டுறேன். உங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். 

யமுனா ஆச்சரியமா பார்க்க…….. என்ன அப்டி பார்க்கிற……..!. நான் தான் ஏற்கனவே சொன்னேனே திருவிழாவுக்கு நீ கண்டிப்பா வரனும்-னு.

யமுனா திரும்பி ராதிகாகிட்ட சம்மதம் கேட்க அவளும் சிரிச்சிகிட்டே

போ போய் ஜாலியா இருனு சொல்ல

யமுனாவும் ஊருக்கு கிளம்பி போறா.

மறுநாள், ஸ்கூல்ல எல்லாரும் வேகமா ரெக்கார்ட் எழுத

ஏப சீக்கிரம் போய் எல்லாரும் நோட்ட திருத்துவீங்களாம். சார் கூப்டுதாறு-னு கத்திகிட்டே வந்தான் சந்துரு.

ஏல் ஏம்ல கத்துத? பொறு போறோம்னு எல்லாரும் எந்திரிச்சு திருத்த போக.

ராதிகா மட்டும் அப்டியே உட்கார்ந்துருக்கா.

ஏப, நீ! மட்டும் ஏன் போவாம இருக்க?. 

இன்டெக்ஸ் எழுதல

திருப்பி திருப்பி பார்த்து எழுதுனா டைம் ஆகும்.

இந்தா! என் நோட்ட பார்த்து எழுது-னு நீட்ட

அவளும் வாங்கி எழுத ஆரம்பிக்கிறா!.

ஏல! சந்துரு பெறென்ன பேசிட்ட போல……!.

ஏல் சும்மா இருங்கள கேட்டா கோவபடுவாள வாங்கல அங்க போய் பேசுவோம்-னு சந்துரு அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு தள்ளி போய்டான்.

ஓய் ராதிகா சீக்கிரம் போய் திருத்துவியாம். சார் சொன்னாங்க.

ஆன்………… இதோ வந்துட்டேன்-னு வேகமா உள்ள போய் திருத்துனா.

அதுவரை சிரிச்சுட்டு இருந்த ராதிகா வெளில வந்தவுடனே ரொம்ப வித்தியாசமா தெரிய.

அவசரத்துல கீழ போட்டு போன சந்துரு நோட்ட எடுத்து அவன்கிட்ட குடுத்து நன்றி சொல்லிட்டு திரும்ப 

ஏன் ரொம்ப வித்தியாசமா இருக்க? 

என்னாச்சு-னு சந்துரு கேக்க இல்ல ஒன்னுலனு சொல்லிட்டு அமைதியா அங்க இருந்து போய்டா.

மறுநாள் யமுனா ஸ்கூலுக்கு வர ராதிகா வரல.

ஆமா, அவ ஏன் ஸ்கூலுக்கு வரல?.

ஒரு நாள் லீவு போட்டாலே டீச்சர் திட்டுவாங்கனு பயப்படுறவளாச்சே…….?.

சரி, நாளைக்கு வரட்டும் கேட்டுகலாம்-னு அப்டியே விட.                                                       

மறுநாளும் ராதிகா வரல.

ரெண்டு நாளா அவ வராதத கவனிச்ச சந்துரு யமுனாகிட்ட ராதிகா ரெண்டு நாளைக்கு முன்னாடி ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சா-னு சொல்ல.

வீட்டுக்கு விட்டதும் நேரா வீட்டுக்கு போய் அவளுக்கு கால் பண்ண காலகட் பண்ணி விட்டுட்டே இருந்தா ராதிகா.

வீட்டுக்கு போனா அவ என்கிட்ட கூட எதுவும் சொல்ல மாட்டிக்கா. ரூம விட்டே வெளில வர மாட்டிக்கா ரொம்ப பயப்புடுறா, கோவப்படுறா, அழுறா, கத்துறா என்ன பண்ணணு எங்களுக்கே தெரியலனு அவங்க அம்மா சொல்லி கவலபட

ஏய்! ராதிகா கதவ திறனு யமுனா கதவ தட்ட அவளை திட்டி அங்க இருந்து போக வச்சிட்டா ராதிகா.

இப்டியே ஒரு வாரம் போக அவ ஏன் இப்டி இருக்கா-னு யோசிச்சிகிட்டே யமுனா நடந்து வர

அவ வீட்டுக்கு முன்னாடி ஒரே கூட்டம் 

என்ன-னு போய் கேட்க ராதிகா தற்கொலை பண்ணிகிட்டானு சொல்ல

யமுனா அந்த இடத்திலயே கதறி கதறி அழுக ஆரம்பிக்கிறா.

ஒரு வாரமா யமுனா ஸ்கூலுக்கு போகல அவளால ராதிகா இல்லங்கிற விசியத்தை தாங்கிக்கவே முடியல.

பரிட்சை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு உங்க பிள்ளைய ஸ்கூலுக்கு வர சொல்லுங்கனு சொன்னதால வேற வழியில்லாம போக மனசே இல்லாம ஸ்கூலுக்கு போறா.

ப்ரக்டிக்கல் பரிட்சை தான் முத வருங்கிறதுனால எல்லாரும் லேபுக்கு போய் ப்ரக்டிக்கல் செய்ய ஆரம்பிக்காங்க.

எல்லாரும் சீக்கிரம் பண்ணி முடிச்சுட்டாங்க. ஆனா, யமுனாவால கவனம் செலுத்த முடியல. அதனால, அவ மட்டும் கடைசில தனியா நிக்கிறா.

அவளும் ப்ரக்டிக்கல் முடிச்சுட்டு லேப விட்டு வெளில வந்துட்டா. 

ஸ்கூல் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போகாம அவங்க அம்மாவோட கடைக்கு போய் நீ ஏன் கூட வானு அவங்க அம்மாவ கூட்டிட்டு போறா யமுனா.

ஏய்! எங்கடி கூட்டிட்டு போற?.

கடைய வேற அப்டியே போட்டுட்டு வந்துருக்கேன் வியாபாரம் வேற பாதிலையே நிக்குதுனு கத்த!.

இங்க தான் கூட்டிட்டு வந்துருக்கேன் உள்ள வானு யமுனா முன்னாடி போக

ஏய்! உனக்கு இங்க என்ன வேளை?.

மேம்…….! நான் ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கனும்.

எங்க ஸ்கூல்-ல வேலை பாக்குற ஒரு சார் எனக்கு ஒரு ப்ரக்டிக்கல் சொல்லிகொடுத்தாங்க.

ஆனா…………….

ஆனா…… அது பாடம் சம்பந்தமான ப்ரெக்டிக்கல் இல்ல.

இத கேட்ட அந்த பெண் போலீஸ் அவள பாக்க.

அந்த ப்ரக்டிக்கலால அமிலம் தெரிச்சுது. அந்த அமிலம் ரெண்டு பேரு மேலையும் பட்டுது ஆனா, அமிலத்தால பாதிப்பு ஏற்பட்டது என்னவோ எனக்கு மட்டும் தான்னு சொல்லிட்டு

அங்க நடந்தத நினைச்சு கோவத்துல கைகள இறுக்கி மடக்கியும் கண்கள்ல கண்ணீரோடையும் திரும்பி நின்னபடியே 

அதுமட்டுமில்ல, என் ப்ரெண்ட் ராதிகாகிட்டையும் அவரு இப்டி தான் நடந்துகிட்டாரு. அவ தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு அவர் தான் காரணம்.

இது லேப்-ல எனக்கு கிடைச்ச அவளோட மோதிரம்-னு கைக்குட்டைல பொதிஞ்சு வச்சிருந்த அவளோட மோதிரத்தை எடுத்து நீட்ட,

கண்கள்-ல இருந்த கண்ணீர்களாலயே கைகுட்ட ஈரமாய்ட்டு.

அவ குடுத்த கம்ப்ளைண்ட்-அ மகளிர் காவல் நிலையத்துல எடுத்துக்கிட்டு அவளுக்கும் ஆலோசனை குடுத்து பத்திரமா வீட்டில கொண்டுபோய் சேர்க்க.

வேகமா போய் கதவ அடச்சு

ஏண்டி……. ஏண்டி இப்டி பண்ண?.

எதுக்காக ஸ்டேஷன் வரைக்கும் போய் சொன்ன-னு? கோவமா கேட்க…….

நான் என்னமா தப்பு பண்ணேண் 

இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் அதிகமா வளரதுக்கு காரணம் நம்ள மாதிரி ஆளுங்கெல்லாம் அமைதியா இருக்குறது தாம்மா.

நீ என்ன சொன்னாலும் பெத்த மனசு ஏத்துக்காது. இந்த விசியம் வெளில தெரிஞ்சா உன்ன தான் தப்பா பார்ப்பாங்க.

நீ தானம்மா சொன்ன! நம்ம விருப்பமில்லாம நமக்கு என்ன கெட்டது நடந்தாலும் அதுக்கு நம்ம பொறுப்பில்ல-னு.

படிக்கனும்னு ஆசையோட தானமா ஸ்கூலுக்குள்ள போறோம் பாடம் நடத்துறவங்களே பால் பாகுபாடு பாக்காங்களேம்மா-னு சொல்லி அழுகைய அடக்க முடியாம கதறி அழ ஆரம்பிக்கிறா.

இந்த விசயம் ஊர் முழுக்க பரவ ஆரம்பிச்சுது.

அவ குடுத்த கம்ப்ளைண்ட்-அ வச்சு அவர ஜெயில்ல போட்டு தண்டனையும் வாங்கி கொடுத்தாச்சு.

எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு-னு ஆயிரம் பேரு உபதேசம் கொடுத்தாலும் அத மறக்குற நிலைமையில அவ இல்ல.

டாக்டர் ஆகனும்-னு இருந்த அவளோட கனவையே அடியோட அழிச்சிட்டா.

ராதிகா மாதிரி எத்தணையோ பேரு இந்த வழிய தாங்க முடியாம இருக்காங்க.

அங்களுக்கெல்லாம் நான் ஒரு முன்னுதாரனமா இருக்கபோறேன்.

ஒரு சிறந்த மனநல ஆலோசகரா மாறி மனிதர்கள மனிதர்களா மாத்தபோறேனு முடிவெடுத்து அந்த பாதையில பயணிக்க ஆரம்பிக்கிறா யமுனா.

…………………………. *சுபம்* ………………………….

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 24) – முகில் தினகரன், கோவை

    சிவப்பூ (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு