2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பையன்கள் 12ஆம் வகுப்பு அறைக்குள் சென்றனர். ராமசாமி சார் பாடத்தைத் தொடங்கினார்.
“தம்பிங்களா! இந்தப் பாடத்தைப் பற்றி உங்களுக்கெல்லாம் நிறைய ஆர்வம் இருக்கிறது எனக்குப் புரியுது, ஆனா இந்தப் பாடத்துக்கு முன்னாடி சில விஷயங்களை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தனும்” என்றார் ராமசாமி சார்
“சரிங்க சார்!” என்றனர் மாணவர்கள்
”Age innappropriate – அதாவது வயதுக்குத் தகாதது அப்படினா என்னனு தெரியுமா?”
“வயசுக்கு மீறின விஷயங்கள் சார்” என்று யுவனின் ஸ்பீக்கரில் இருந்து பதில் வந்தது
“அருமை! இந்தப் பாடத்தில அப்படி எந்த வயதுக்குத் தகாத விஷயங்களும் இல்ல, ஆனா நீங்க கேட்குற சந்தேகங்களுக்கான பதில்கள் சில அப்படி இருக்கலாம். அதனால, நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது, பாடம் சம்மந்தமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் அளிக்க முடியும்” என்றார் ராமசாமி சார்
தொடர்ந்து பேசிய அவர், “Consent, அதாவது ஒப்புதல் அப்படினா என்னணு தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் ராமசாமி சார்.
“சார், பெர்மிஷன் கொடுக்கிறது, அதாவது ஒரு பொண்ணு…” என்று கார்த்திக் இழுத்தான்
“ம்ம்ம், இந்தப் பாடத்துல உனக்கு இருக்கிற ஆர்வம் எனக்குப் புரியிது. இருந்தாலும் நான் என்னோட பதிலைச் சொல்லிடுறேன். Consent அப்படிங்கிற இந்த வார்த்தைக்கும் Pocso அப்படிங்கிற சட்டத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதாவது, 18 வயசுக்குக் கீழ உள்ள பெண் குழந்தை Consent கொடுக்க முடியாது, அதனால அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ, இல்ல அவங்க விருப்பம் இல்லாம தொட்டாலோ அப்படிப் பண்ண நபர ஜெயில்ல போட்டுடலாம்!” என்று விவரித்தார் ராமசாமி
மாணவர்களிடையே ஒரு பெருத்த அமைதி
“சரி, இப்ப பாடத்துக்கு வருவோம், பறவைகள் முட்டை போட்டு குஞ்சி பொறிக்குது, நாய் பூனை எல்லாம் குட்டிப்போடுது, செடிகள் கூட விதைகள் மூலமா செடிகளை உருவாக்குது, இதுக்கு எல்லாம் ஒரு பெயர் தரனும்னா இனப்பெருக்கம் என்று சொல்லலாம், அதே மாதிரி தான் மனிதர்களாகிய நாமும் நம்முடைய மனிதஇனத்தைப் பெறுக்குறோம், இந்த நடைமுறைய இனப்பெருக்கம் அல்லது ரீபுரொடெக்ஷன் அப்படினு சொல்றோம், புரிஞ்சிதா மக்களே!” என்றார் ராமசாமி
“புரிஞ்சிது சார்!” என்றனர் மாணவர்கள்
“இப்போ, இந்த மாதிரி இனப்பெருக்கம் செய்ய ஒரு வளர்ந்த ஆணுடைய உடலில் என்னென்ன இருக்கு, ஒரு வளர்ந்த பெண்ணுடைய உடல்ல என்னென்ன இருக்கு அப்படிங்கிறது தான் நம்ம பாடத்துல இருக்கு. உதாரணமா இனப்பெருக்க மண்டலம் பற்றி சொல்லி இருக்கு, ஆணின் உடலில் இருக்கிற விந்து அணுவின் வரைபடம் இருக்கு, பெண்ணின் கருமுட்டை படம் இருக்கு. விந்து பெண்ணுடைய கருமுட்டையை அடைந்த பிறகு என்ன நடக்கும்னும் விவரிச்சு இருக்கு”
“அருமை சார்! அந்த விந்து எப்படி சார் கருமுட்டைக்குப் போகுது, ப்ளீஸ் எக்ஸ்ப்ளெய்ன்” என்றான் கார்த்திக்
“சூப்பர் கார்த்திக், இப்ப நீ கேட்ட பார்த்தியா இது தான் என்னது?” என்றார் ராமசாமி
“வயதுக்குத் தகாதது சார்!” என்று பதிலளித்தான் ரமேஷ்
“ஆமாம், இது வயதுக்குத் தகாதது உனக்குக் கல்யாண வயசு நெருங்கும்போது இதெல்லாம் உனக்குத் தெரிய வரும், அப்போ இந்தக் கேள்வியைக் கேட்டா அது வயதுக்குத் தகுந்தது” என்று பதிலளித்தார் ராமசாமி
இவ்வாறாக பாடத்தை முழுவதுமாக நடத்தி முடித்தார் ராமசாமி சார்.
“மக்களே! உலகத்துல நடக்குற எல்லா வன்புணர்வுகளுக்கும் வாத்தியார் இந்தப் பாடத்த நடத்தாதது மட்டும் தான் காரணம்னு ஒரு பேச்சு சுத்திகிட்டு இருக்கு, ஆனா, உண்மை என்னன்னா, சக மனிதர்களா, குறிப்பா ஆண்கள் பெண்கள பொருளா பாக்குறது தான் இந்தத் தவறுகளுக்கு எல்லாம் காரணம். சும்மா, ஆண் உடல்ல என்ன இருக்கு, பெண் உடல்ல என்ன இருக்கு, குழந்தை எப்படி உருவாகுதுனு பாடம் படிச்சா மட்டும் போதாது மக்களே, ஒப்புதல்னா என்னன்னு படிங்க, வயதுக்குத் தகுந்தது என்னனு தெரிஞ்சிக்கோங்க, யாரையும் துன்புறுத்தகூடாது, யாரையும் தவறா நடத்தகூடாது, சரியான வயதுல நமக்குத் தேவையானது எல்லாம் தெரிஞ்சிக்க முடியும் அப்படிங்கிறத உணருங்க! மனசுக்குள்ள என்ன எண்ணங்கள் வந்தாலும் படிக்கிற காலம் முடியிற வரைக்கும் உங்க உடலால எந்த வயசுக்குத் தகாத விஷயங்கள்லயும் ஈடுபடாதீங்க!” என்று சொல்லி பாடத்தை முடித்து வைத்தார் ராமசாமி சார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings