2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
யுவன்: பேச்சுத் திறனற்ற ஒரு மாணவன், சுருட்டை முடி, கருத்த தேகம், சுமாரான உயரம். பயன்படுத்தக்கூடியதாக்கும் கருவியின் உதவியால் டைப் செய்வதை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்து பேசுபவர்.
பிரியா: மெல்லிய, உயரமான, கருத்த தேகம் கொண்ட மாணவி. யுவனின் நெருங்கிய தோழி. விளையாட்டுப் பிள்ளை, விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானவள்
நந்தினி: சாதாரண உயரம், சாந்தமான குணம், கருத்த தேகம், சிரித்த முகம், பயந்த சுபாவமுள்ள மாணவி, படிப்பில் கெட்டி
குமுதா: உயரம் குறைவு, கோபக்காரி, வெளிர் நிறம், நல்ல குரல் வளம், படிப்பு சுமார்,
தாஸ்: முன்னாள் மாணவன், தற்போது ஒரு ரவுடி
கார்த்திக்: கருப்பு நிற மாணவன், நல்ல வேடிக்கையான ஆசாமி, படிப்பிலும் சுட்டி
ரமேஷ்: இன்னொரு சுட்டிப் பையன், சுமாராகப் படிப்பவன்
கமலவேணி: முன்னாள் மாணவி, தற்போது காவல் துறை ஆய்வாளர்
ஜெயா, கிரேஸி, ராமசாமி, உள்ளிட்ட பலர் ஆசிரியர்கள்
குமுதா முந்தின நாள் தாஸிடம் காதலைச் சொல்ல சென்ற போது நடந்த சம்பவங்களை யோசித்துக் கொண்டே வகுப்பறையில் உட்கார்ந்திருந்தாள்.
நந்தினிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் தனியாகக் கலந்தாலோசனை வழங்கப்பட்டது.
“என்ன சார் நினைச்சிகிட்டு இருக்கீங்க? இது பள்ளிவளாகம், உங்க இஷ்டப்படி ஆளுங்கள கூட்டிட்டு வந்து அடிதடில எல்லாம் ஈடுபடக்கூடாது!”
“மன்னிக்கணும் மேடம், இனிமே அப்படி நடக்காது!”
“உங்க பொண்ண பாருங்க! எவ்ளோ பயந்து போய் இருக்கா? இந்த மாதிரி சூழ்நிலைகள்ல நீங்க தான் சார் முன்னுதாரணமா நடந்துக்கணும், நீங்களே இப்படி அடியாள கூட்டிட்டு வர்றது, ச்சே சே, ரொம்ப மோசம் சார்!”
”தப்பு தானுங்க மேடம், இனிமே அப்படி நடக்காது!”
“தினமும் இனிமே பள்ளிக்கூடம் தொடங்குறதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே வந்துடணும், நந்தினிக்குப் பள்ளிக்கூடத்துல நாங்க கவுன்சிலிங் கொடுப்போம், அவ சகஜ நிலைக்கு வர்றதுக்கு சில நாட்கள் ஆகும்!”
“சரிங்க மேடம்! மன்னிச்சிடுங்க!”
“பரவாயில்ல சார், இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கோங்க!”
நந்தினி நடுங்கிக் கொண்டே பள்ளி தலைமையாசிரியர் அறையில் இருந்து வெளியேறி தன் வகுப்புக்குச் சென்றாள்
அன்று பள்ளி முழுவதும் தாஸ் குறித்து தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். மற்ற மாணவர்களுக்கு தாஸ்-நந்தினி-குமுதா விஷயம் தெரியாதது நல்லதாய்ப் போய்விட்டது. ஆய்வாளர் கமலவேணியிடம் இருந்து பெற்ற தகவல்களைப் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார் ஜெயா டீச்சர்.
“தாஸ் நம்ம பள்ளிக்கூடத்துல தான் ரொம்ப வருஷம் முன்னாடி படிச்சான். படிக்கும்போதே சிகரெட்டு, கஞ்சானு பல கெட்ட பழக்கங்களுக்குள்ள போயிட்டான். நல்ல வசதியான குடும்பத்தில இருந்து வந்திருந்தாலும், இன்னைக்கு அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போற ஒரு நரக வாழ்க்கை அவனுக்கு. அவன் தப்பு பண்ணாலும், பண்ணாட்டியும் போலீஸ் முதல்ல அவன தான் சந்தேகப்படுவாங்க. அதுக்குக் காரணம் படிக்கிற காலத்துல அவன் தேர்ந்தெடுத்த தவறான முடிவுகள் தான். இதெல்லாம் ஒரு பாடமா எடுத்துகிட்டு, நீங்க தான் நம்ம பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்” என்றார் ஜெயா டீச்சர்
”ஏன் மிஸ்! உயிரியல் கடைசி வகுப்பு எடுக்காததால தான் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் ஏற்படுதுனு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது!” என்று கிடுக்குப்பிடி கேள்வி கேட்டான் கார்த்திக்
“டேய்! அதுல என்னடா இருக்கு, இந்தப் பிரச்சனைய தீர்க்க!”
“இல்ல மிஸ், இந்த வருஷம் கண்டிப்பா கடைசி பாடம் எடுத்தே ஆகணும், அப்போ தான் நாங்க அடுத்த வகுப்புக்குத் தெளிவா போக முடியும்!” என்று ஆமோதித்தான் யுவன்
மாணவிகள் அனைவரும் எதுவும் சொல்லாமல் சிரித்தனர்.
ஜெயா டீச்சர் வகுப்பை விவிட்டு வெளியே சென்று தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார். அங்கே பிற உயிரியல் வகுப்பு ஆசிரியர்களுடன் வெகுநேரமாக கலந்தாய்வு நடந்துகொண்டு இருந்தது. அங்கு என்னதான் நடந்துகொண்டு இருக்கிறது என்பதை மாணவர்கள் குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தனர். கலந்தாய்வு ஒரு வழியாக முடிந்தது. ஜெயா மிஸ் அங்கிருந்து வந்தார்.
மாணவர்களைப் பார்த்து புன்முறுவலோடு, “நாளைக்கு அந்தப் பாடம் நடத்தப்படும்!” என்றார்
மாணவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினார்கள். பெண் பிள்ளைகளுக்கோ வெட்கம் தாங்கவில்லை.
பள்ளி முடிந்ததும் குமுதாவும் பிரியாவும் பேசிக்கொண்டே வெளியே நடந்து சென்றுகொண்டு இருந்தனர். குமுதா தனது கையால் தன் முடியை கோதிக்கொண்டே “இந்த தாஸ் பற்றி என்ன நினைக்கிற?” என்று கேட்டாள்
“ஓ அவனா! அவன் ஒரு காலத்துல நம்ம பள்ளிக்கூடத்துல தான் படிச்சான், பெரிய பசங்க கூட சேர்ந்து அடிதடி, சண்டைனு எல்லாத்துக்கும் போவான், அது ஒரு கெத்துனு நினைச்சிட்டு இருந்தான்!”
“அது கெத்து தான டீ!” என்றாள் குமுதா
“அட நீ வேற, எல்லாம் ஆரம்பத்துல நல்லா தான் இருக்கும். படிப்படியா அவனுகளோட பழக்க வழக்கம் எல்லாம் கத்துகிட்டான், நிறைய போதைப்பொருள், சரக்கு, இன்னும் நிறைய!” புள்ளிமான் போல துள்ளிகுதித்துக்கொண்டே நடந்தாள் பிரியா
“இன்னும் நிறையவா? அப்படினா வேற என்னல்லாம் டி?”
“10வது படிக்கும்போது பக்கத்து ஸ்கூல் பொண்ணுங்க ஒரு சிலர லவ் பண்றேன்னு திரிஞ்சான், ஒருத்தி மாத்தி ஒருத்தியா எனக்குத் தெரிஞ்சு ஒரு 4 பேர லவ் பண்ணிருப்பான்!”
“4 பேரா? உனக்கெப்படித் தெரியும்?”
“எங்க பெரியம்மா பொண்ணும் அதுல ஒருத்தி, ஆனா அவங்க யாருமே இவன லவ் பண்ணல!”
“ம்ம்ம்! ஒருவேள அவன் வாழ்க்கையில ஒரு நல்ல பொண்ணு வந்தா திருந்துவானோ என்னவோ!” என்றாள் குமுதா
தன் உருட்டைக் கண்ணை உருட்டி குமுதாவை ஏற இறங்க பார்த்தாள் பிரியா
“அப்படித் திருந்தி எவனையும் இதுவரைக்கும் நான் பார்த்ததில்ல! எல்லாம் கொஞ்ச நாளுக்கு நடிப்பானுக, பிறகு அவனோட பழைய புத்திக்கே திருந்திடுவானுக!” என்றாள் பிரியா
“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்றாள் குமுதா. தாஸை விட்டுக்கொடுக்க இன்னும் அவளுக்கு மனம் வரவில்லை.
“இப்படித்தான் காலேஜ் படிக்கிற ஒரு அக்கா அவன லவ் பண்ணாங்க!”
“என்னது, காலேஜ் படிக்கிற அக்காவா?” திடுக்கிட்டாள் குமுதா
“ஆமாம், ஒரு திருட்டு கேஸ்ல அவன் 2 வருஷம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பிறகு ஒரு அக்காவ லவ் பண்ணான், அவங்களும் இவன் கூட சுத்தாத இடம் இல்ல, இரண்டு பேரும் ஊர விட்டு ஓடிப்போய் ஒன்னா வாழ்ந்தாங்க, இவனோட டார்ச்சர் தாங்காம அவங்க அப்பா அம்மாகிட்டயே திரும்பி வந்துட்டாங்க!”
“என்னடி சொல்ற? இவ்ளோ நடந்திருக்கா?”
“ஆமாம், இந்த மாதிரி ஆம்பளைங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கிறது அவங்களோடத பார்க்கிங் பண்றதுக்கான ஒரு பார்க்கிங் ஸ்பேஸ் அவ்ளோ தான். இவன்கிட்ட ஏமாந்த அந்த அக்கா யார் தெரியுமா?”
“யாரு டி! நம்ம டீச்சர் யாருமா?”
“அட, இல்ல டி, நம்ம கமலவேணி இன்ஸ்பெக்டர் தான்!”
ஆச்சரியத்தில் உறைந்து போனாள் குமுதா
அடுத்த நாள் பள்ளி தொடங்கியது. மாணவச் செல்வங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உயிரியல் வகுப்புக்கான மணி ஒலித்தது.
“எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு டா!” என்றான் கார்த்திக்
“கொஞ்சம் மூடிக்கிட்டு இரு!” என்று யுவனின் ஸ்பீக்கர் ஒலித்தது
“ச்சீ, நீ இன்னும் வயசுக்கே வரலைனு நினைக்கிறேன், அங்க பாரு! என் தலைவன் ரமேஷ் நோட்ல ஐஸ்வரியா ராஜேஷ் படம்” என்றான் கார்த்திக்
“டேய்! மூடிட்டு இருடா, மிஸ்ஸுக்குத் தெரிஞ்சா நோட்ட கிழிச்சிடுவாங்க” பதறினான் ரமேஷ். நடிகர் நடிகை படம் போட்ட நோட்டுகளைக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பான ஆணை இருந்தது அவர்களுடைய பள்ளியில்
“கவலப்படாத மச்சி! ஐ ஆம் யுவர் பெஸ்ட் பிரெண்ட் யூ நொ!” என்றான் கார்த்தி
வகுப்பே சலசலத்துக்கொண்டு இருந்தது. ஜெயா மிஸ் அவருடன் ராமசாமி சாரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ராமசாமி சார் 12ஆம் வகுப்பு உயிரியல் ஆசிரியர், ஜெயா மிஸ் 10ஆம் வகுப்பு உயிரியல் ஆசிரியர்.
“ஓகே ஸ்டூடெண்ட்ஸ், இன்னைக்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் கல்விச் சுற்றுலாவுக்குப் போய் இருக்காங்க, அதனால 10ஆம் வகுப்பு பாய்ஸ் எல்லாரும் 12ஆம் வகுப்பு அறைக்குப் போங்க, மாணவிகள் மட்டும் இங்கேயே இருங்க. நீங்க கேட்டுக்கிட்ட பாடத்த பாய்ஸுக்கு ராமசாமி சாரும், கேர்ள்ஸுக்கு நானும் எடுப்பேன்!” என்றனர்
“மேடம்! இதெல்லாம் போங்காட்டம், நாங்க கோ-எஜுகேஷன்ல படிக்கிறோம், ஒன்னா தான் பாடம் எடுக்கணும்” என்று கத்தினான் கார்த்திக்
“அதிகப்பிரசங்கித்தனமா பேசாத கார்த்திக், நீ என்ன பொம்பள பிள்ளைங்க ரெஸ்ட் ரூமுக்கா போற, இல்லைல, அதனால இந்தப் பாடமும் தனியா தான் எடுப்போம்! விருப்பம் இல்லைனா இந்தப் பாடத்த வேணா ஸ்கிப் பண்ணிடலாமா?” என்று ராமசாமி சார் கேட்டார்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings