எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னங்க, ஏன் என்னவோ போல இருக்கீங்க?”
“இல்ல மேகலா. அப்பா இல்லாம வீடு வெறுமையா இருக்கு. அவர் இருந்தவரைக்கும் ஏதாவது பேசிட்டே இருப்பாரு. அப்போ அது பெரிய இடைஞ்சலாத் தோணிச்சு. ஆனா இப்போ அவர் குரலைக் கேட்காம மனசு பாரமா இருக்கு.
அப்பா உயிரோட இருந்தப்போ அவர் ஏதாவது கேட்டுட்டே இருப்பாரு. அப்போ அதைத் தொந்தரவா நினைச்சேன். அவர் நம்ம நல்லதுக்கு சொன்ன நிறைய விஷயங்கள் கசப்பா இருந்துச்சு. ஆனா அவர் இறந்தபிறகு இந்த ஒரு மாசமாத்தான் அவரோட அருமை தெரியுது. அவர் என் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தார்னு இப்போ புரியுது.
ஒவ்வொரு விஷயத்தையும் சரியான முறைல செய்யணும்னு அவர் சொல்லும்போது அதை ஏத்துக்க முடியல. ஆனா இப்போ அப்படிச் சொல்றதுக்கு யாருமே இல்லாம ரொம்ப வெறுமையா இருக்கு. அப்பாவோட பாசத்தை அவர் இருக்கும்போது சரியாப் புரிஞ்சுக்காம அவரை நோகடிச்சுட்டேன்.”
பாசத்தில் கண் கலங்கினான் ரகு.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings