in ,

ஓட்டப்பந்தயம் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

திங்கட்கிழமை.

அரக்கப் பறக்க அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த ‘அரவிந்தனின்’ அலைப்பேசி ஒலித்தது. திரையில் தெரிந்ததோ ‘வாசு’ என்ற பெயர், அரவிந்தன் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர்.

“வாசு எதுக்கு இப்போ கூப்பிடறான்?” என்று எண்ணியவாறு அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றிட

மறுமுனையில் வாசு “சார்… நான் வாசு பேசுறேன்”

“சொல்லுப்பா”

“சார் நான் இன்னிக்கு ஆபீஸ் வரமுடியாது, அதான் லீவ் சொல்ல ஃபோன் பண்ணேன் …”

“என்னாச்சு …?!”

“என் வீட்டுக்காரி சாப்பாடு போட மாட்டேங்கிறா …”

“ஏப்பா இதெல்லாம் ஒரு காரணமா …..நீ கிளம்பி வா நம்ம கேண்டீன் சாப்பாடு நல்லா இருக்குமே..இங்கே சாப்பிட்டுக்கலாம்”

“அதில்ல சார் ….”

“வேற என்னய்யா பிரச்சனை …?!”

“அது வந்து …”

“வாசு …புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் பிரச்சினை இருக்கும்… அதெல்லாம் நான் கேட்பது அநாகரிகம். எந்த பிரச்சினை என்றாலும் வீட்டிலேயே தீர்த்துட்டு ஆபீஸ் வரணும்”

“சார் …ஆயிரம் பிரச்சினை எல்லாம் இல்ல சார் ….ஒரே ஒரு பிரச்சினைதான் சார்…”

“சரி சொல்லு …என்னால் முடிஞ்சா தீர்த்து வைக்கப் பார்க்குறேன்”

“மதியச் சாப்பாடு கேரியரைத் தொலைச்சிட்டேன் சார்…”

“யோ ..இது உனக்கே நல்ல இருக்கா..? புதுசா ஒண்ணு வாங்க முடியாதா ..? இதுக்குப் போய்ப் பொண்டாட்டி சமைக்கல, சோறு கொடுக்கல அப்படின்னு புலம்பிக்கிட்டு ….பள்ளிக்கூடத்து பசங்க மாதிரி”

“சார் புதுசு வாங்குறது பிரச்சனை இல்ல சார்… என் மனைவி அதே கேரியர் தான் வேணும் என்று பிடிவாதம் பிடிக்கிறா”

“அப்படியன்ன அது சிறப்பு … வெளிநாட்டில் இருந்து வந்ததா?”

“அப்படி இருந்தா கூடப் பரவாயில்லை சார்”

“அப்புறம் ..?”

“அது… அவ பள்ளியில படிக்கும்போது ‘ஓட்டப்பந்தயம்’ போட்டியில் ஜெயித்து வாங்கியதாம் …அதே தான் வேணுமாம்”

“எப்பா வாசு …இது பெரிய பிரச்னை …என்னால தீர்க்க முடியாது ….ஒரு வாரம் வேணுமானாலும் லீவு எடுத்துக்க நீ ஓடியாவது கண்டுபிடித்து வெற்றியுடன் வா”

“ஓகே சார் ..”

“இப்படியெல்லாமா நடக்கும்….” என்று அரவிந்தன் மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டே தன் மனைவி தீபாவை அழைத்தார்.

“தீபா …..நேரமாகுது மா..இன்னுமா மதிய சாப்பாடு கட்டுற ….?”

“ஏங்க ..வீடு முழுசும் தேடிட்டேன் …சாப்பாடுக் கேரியரையே காணலேயே!…வெள்ளிக்கிழமை கொடுத்து விட்டேனே திரும்ப எடுத்து வந்தீங்களா ….?!”

அரவிந்தன் மனதுக்குள் … “ஆஹா …இது இவ ஓட்டப்பந்தையத்துல வாங்கியதாச்சே”….

“தீபா …அது ஆஃபீசிலேயே விட்டுட்டு வந்துட்டேன்ணு நினைக்கிறேன் …இன்னிக்கு கேன்டீலே சாப்பிட்டுகிறேன்”

“சாய்த்திறம் வரும்போது கேரியரோடு வாங்க”…

“ஆண்டவா கேரியர் ஆபீஸ்லேயே இருக்கணும் ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது” என்று  அரவிந்தன் வேகமாக ஓடினார் அலுவலகத்திற்கு.

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 2-மாயா மாளவ கௌளை) – சாய்ரேணு சங்கர் 

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 9) – கவிஞர் இரஜகை நிலவன்