எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாடா, வா சீதா நல்லா இருக்கீங்களா?
நல்லா இருக்கேன் மா
ஏய் வாடா.. என்னடா சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க
ஆமாமா எங்க ரெண்டு பேத்துக்கும் ஒன்னா லீவு கிடைச்சது, நான் போன் பண்ணி கேட்டேன் சரி நானும் வரேன்னு அண்ணன் சேகர் சொன்னான் மா, அதனால ரெண்டு பேரும் சேர்ந்து கிளம்பி வந்துட்டோம் என்றான் சின்னவன் ரகு.
வா மா கலா எப்படி இருக்க?
நல்லா இருக்கேன் அத்தை.
ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
சரிமா சந்தோஷப்பட்டது போதும், உங்க கையால சாப்பிடணும்னு ஆசையா இருக்கு அந்த பூண்டு குழம்பு வைப்பீங்களா அதை மட்டும் கொஞ்சம் செஞ்சு கொடுங்கம்மா, அப்படியே கொஞ்சம் இந்த பருப்பு துவையல் அரைச்சு குடுங்க அப்பதான் நல்லா இருக்கும் சாப்பிட என்றான் பெரியவன்.
அதுக்கு என்னடா வச்சிட்டா போச்சு, இதற்காகத்தான் நான் தவமாய் இருக்கிறேன் என்றார்கள் அம்மா.
அம்மா, எனக்கு பருப்பு தொவையலும் வேணும் வடகமும் பொறிச்சு கொடும்மா என்றான் சின்னவன் .
என்னப்பா ரெண்டு மருமகளும் வாயை தொறக்காம இருக்கீங்க, உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்க செய்து தரேன்.
அத்தை இன்னைக்கு முதல்ல அவங்களுக்கு செஞ்சு கொடுங்க, நாளைக்கு நாங்க சொல்கின்றோம். அப்புறமா செஞ்சு குடுங்க என்றார்கள் இரண்டு மருமகள்களும்.
இதுல எலுமிச்சம் பழம் ஜூஸ் இருக்கு நாலு பேரும் குடிச்சுக்கோங்க, இந்த முறுக்கு பாக்கெட் இருக்கு இதை பிரித்து சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நான் அதுக்குள்ள சமைச்சுட்டு உங்கள கூப்பிடுறேன் என்றாள் அம்மா கமலம்.
பெட்ரூமில் மகன்களும் மருமகளும் நாலு பேரும் போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இளநீரை பறித்து ஒரு பையில் போட்டு வந்து கொடுத்து மகன்களுக்கு மருமகளுக்கும் கொடுப்பதற்காக அறைக்கு சென்றாள் தாய் கமலம்.
உள்ளே வீட்டைப் பற்றிய பேச்சு குரலின் சத்தத்தை கேட்டு என்ன பேசுகிறார்கள் என்று ஓரமாக ஒதுங்கி நின்று கேட்டாள் தாய் கமலம்.
எப்படியாவது இந்த வீட்டை விற்று விடனும், நல்ல விலைக்கு வருது இந்த அம்மாவுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு, இந்த வீட்டை வித்துட்டு அந்த அம்மாட்ட கொஞ்சம் காசை கொடுத்து விடுங்க, அவங்க வாடகை வீட்டில் இருக்கட்டும் என்றாள் பெரிய மருமகள்.
ஆமாக்கா நானும் அதைத்தான் எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இந்த அம்மா இவ்வளவு பெரிய வீட்டை வச்சுகிட்டு என்ன பண்ண போகுது, அதுவும் இந்த கிராமத்துல யாரும் வாடகைக்கு வர மாட்டாங்க அப்படியே வந்தாலும் ஒரு ஆயிரம் ரூபா தான் கொடுப்பாங்க, அதுக்கு மேல ஒரு பைசா கொடுக்க மாட்டாங்க, அதனால வீட்ட விற்று விடுவது தான் பெஸ்ட் என்றாள் சின்ன மருமகள்.
அண்ணே, நீங்கதான் அம்மாகிட்ட எப்படியாவது பேசி சம்மதம் வாங்கணும், எனக்கு அவ்வளவா பேச தெரியாது நீங்க என்ன பண்ணாலும் எனக்கு சந்தோசம் தான் என்றான் சின்னவன்.
மெதுவாக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற தாய் கமலம் இந்தாப்பா நமது வீட்டு இளநீர் இருக்கு, நாலு பேரும் குடிச்சுக்கங்க என பையை கீழே வைத்தாள் தாய் கமலம்.
அம்மா சமைச்சிட்டீங்களா மா எனக் கேட்க,
ஓ…சமைத்து விட்டேனே நீங்கள் சாப்பிடும் போது வடகம் மட்டும் போட்டால் போதும் என்றாள் தாய்.
கொஞ்சம் உட்காருங்கம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என பெரியவன் கேட்க
என்னப்பா விஷயம்? என கீழே அமர்ந்தாள் தாய் கமலம்.
இவ்ளோ பெரிய வீட்டை வைத்து என்னமா பண்ண போறீங்க, வீட்ட வித்திடலாமா என பெரியவன் கேட்க
நான் இருக்கும் வரை இந்த வீட்டை விற்கக் கூடாது. நானும் உங்க அப்பாவும் இரவு பகலாக உழைத்து எங்களுடைய வியர்வையில் கட்டின வீடு. அதனால் நான் வீட்டை விற்க முடியாது. நான் போனதுக்கப்புறம் நீங்க என்னமோ பண்ணிக்கோங்க என ‘பட்’ என சொல்லி விட்டு , வீட்ட விக்கிற நெனப்போட இங்க இனிமேல் வராதீங்க, எப்பயாவது இங்க வரிங்களா நான் என்னால முடிஞ்சத சமைச்சு போடுறேன் சாப்பிட்டுட்டு அமைதியா போய்க்கிட்டே இருங்க என்றால்தாள் தாய் கமலம்.
உங்க அப்பா போட்டோ நகை எல்லாம் கேட்டு வாங்கிட்டு போயிட்டீங்க, இருக்கிறது இந்த வீடு மட்டும் தான், இனிமேலு இந்த நெனப்போட இங்க வராதீங்கன்னு சொல்லிவிட்டு தாய் கமலம் தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாள்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings