2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என்னப்பா வாசல்லயே நின்னுகிட்டு இருக்க என மகன் ஹரி கேட்டான்.
இன்னைக்கு தேதி 28, பாட்டியை உங்க சித்தப்பா இன்னைக்கு நம் வீட்டில் வந்து விட்டு விடுவார். இப்போது வந்து விடுகிறேன் என்று சொன்னான். அவர்களைதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அப்பா கனகசபை.
வீட்டின் உள்ளே இருந்து ஹரியின் அம்மா ரேவதி சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.
ஏம்பா? அம்மா சத்தம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என தன் அப்பாவிடம் கேட்க பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் தானே, எப்போதுமே ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒருநாள் கூட தானே வருகிறது. உங்க அம்மாவை வைத்துக் கொள்வதற்கு ஏன் இன்னும் ஒரு இரண்டுநாள் வைத்திருந்து அனுப்ப வேண்டியதுதானே என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்றார் அப்பா.
அப்பா, நான் கொஞ்சம் பெரியவன் ஆனதும் வேலைக்கு செல்கிறேன். அப்போது பாட்டியை எங்கேயும் அனுப்ப வேண்டாம். பாட்டியை கடைசிவரை நாமே வைத்துக் கொள்ளலாம் என்றான் ஹரி.
என்னடா உங்க அப்பா கிட்ட பேசிகிட்டு இருக்கிறே என தாய் கேட்க, சட்டென்று கோபம் வந்து நாங்கள் எதையாவது பேசிக்கொள்வோம் நீங்க உங்க வேலைய பாருங்கம்மா என்றான் ஹரி.
உங்க பாட்டியை பற்றி தானே பேசிட்டு இருக்கீங்க, எப்போதுமே நமக்கு தானே ஒரு நாள் இரண்டு நாள் கூட வருகிறது பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் தானே வருகிறது ஒரு நாள் இரண்டு நாள் வைத்திருந்து அனுப்ப வேண்டியது தானே என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது, உங்கள் அப்பா மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்றாள் தாய் ரேவதி.
எதையாவது பேசிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதும் என்றான் மகன் ஹரி.
டேய் ஹரி, வாடா உங்க பாட்டி வந்துட்டாங்க என சொல்ல வெளியே வேகமாக ஓடி வந்தான் ஹரி.
வாங்க பாட்டி என அன்பான பேரன் கூப்பிட்டவுடன் பேரனின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் பாட்டி.
எங்கடா உங்க அம்மா? என பாட்டி கேட்க இதோ வந்து விட்டேன் என்று முந்தானையால் கையை துடைத்தபடியே தன்னுடைய மாமியாரை வரவேற்றாள் ரேவதி.
ஏங்க உங்க தம்பியை உள்ள கூப்பிடலையா என்ற கணவரிடம் ரேவதி கேட்க, வாடா என்று சொன்னேன் அவன் எனக்கு வேலை இருக்கிறது என கிளம்பிவிட்டான். அவன் இருக்கிற வசதிக்கு நம் வீட்டில் தண்ணி கூட குடிக்க மாட்டான் என்றார் கணவர்.
அம்மா நீங்க காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க, எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது நான் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்றார் கனகசபை.
பாட்டி காபி குடித்துவிட்டு தன்னுடைய சிறிய அறையில் படுத்த உடன் கண்ணயர்ந்து தூங்கி விட்டார்கள்.
ஹரி தன்னுடைய அம்மாவிடம் ஏம்மா பாட்டியை வைத்துக் கொள்வதற்கு அப்பாவிடம் சண்டை போடுகிறீர்கள் என மகன் ஹரி கேட்க உன்னுடைய அப்பாவுக்கு வருமானம் குறைவு, உங்க பாட்டிக்கு ஒரு நல்ல சாப்பாடு போட முடியாத நிலைமையில் இருக்கிறோம்.
உங்க சித்தப்பா வீட்டில் வசதிகள் அதிகம், நல்ல சாப்பாடு, நேரா நேரத்துக்கு காபி ஜூஸ் என கொடுக்கின்றார்கள். நம்மால் அதை எல்லாம் செய்ய முடியாது, உங்க பாட்டி எதுவும் சொல்வதில்லை, எதைக் கொடுத்தாலும் உங்க பாட்டி அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டு கொள்கிறார்கள்.
இருந்தாலும் மனசு சில நேரங்களில் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு இரண்டு நாட்கள் உங்க சித்தப்பா வீட்டில் இருந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடுவார்கள் என்ற ஆதங்கத்தில் தான் உங்க அப்பாவை சத்தம் போடுவது போல போடுவேன்.
மற்றபடி உங்கள் அப்பா, பாட்டி மேலே எனக்கு கோபமும் கிடையாது, வருத்தமும் கிடையாது. நல்ல வருமானம் இருந்தால் உங்க பாட்டியை உங்க சித்தப்பாவிடம் அனுப்பாமல் நானே வைத்து பார்த்துக் கொள்வேன் என்றாள் தாய் ரேவதி.
சரி பரவால்ல விடும்மா, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை சந்தோசமாக பாட்டிக்கு கொடுக்கிறோம் என சொல்லிக் கொண்டே அம்மாவை தவறாக நினைத்து விட்டோமே என ஹரிக்கு மனம் வேதனைப்பட்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings