2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஞாயித்துக்கிழமை நைட்லாம் நானும், பங்கஜாவும் தூங்கவே இல்லை , உடனே நீங்களா ஏதேதோ கற்பனை பண்ணிக்காதீங்கோ. இந்த வருஷ கொலு அமக்களத்தை மூணே பதிவுல முடிச்சிடணும்னு மெனக்கெட்டு சொன்னேனா, இதுல கடைசி நேரத்துல இந்தப் பய பெரிய டென்ஷனை உண்டாக்கிட்டான்.
பையன் விஷயம் என்னாச்சு, என்னாச்சுனு மக்கள் போட்டு குடையறா., அது வம்புனு சொல்ல வரலை பாவம் இவ்வளவு அன்யோன்யமான தம்பதிகளுக்கு அவா பையன் என்ன பிராப்ளம் பண்ணப் போறானோனு ஆதங்கம்தான்.
திங்கள் முதல் நாள் கொலு, பங்கஜா 3.30 மணிக்கே எழுந்துண்டுட்டா, என்னடி செத்த படுத்துக்கோ மழை பேஞ்சது எனக்கு கொஞ்சம் குளிர்ரதுன்னேன். அதுக்கு நான் என்ன பண்றது போர்வையை இழுத்துப் போத்திண்டு தூங்குங்கோ, நான் குளிச்சிட்டு பிரம்ம மூர்த்தத்துல படில பொம்மை வைக்கணும்னு போயே போய்ட்டா.
வெளியே சொல்லலைன்னாலும் அவ டென்ஷன்லயேதான் இருக்கா. கொஞ்சம் அப்படி இப்படி புரண்டு படுத்தாலும் இனிமே தூக்கம் வராதுனு தெரிஞ்சது. சரி படில பொம்மை வைக்க பங்கு தனியா கஷ்டப்படுவாளேனு எழுந்துட்டேன். வெளியே வந்து பாத்தா பங்கஜம் அந்த கொலு படிகள் முன்னால சப்பளிக்க உக்காந்துண்டிருக்கா. அவ ரெண்டு கையால அவளோட அந்த ஃபேவரைட் பிள்ளையாரை கட்டிப் பிடிச்சிண்டு, கண்ல ஜலம் தாரை தாரையா கொட்டறது. நான் பதறிப் போயிட்டேன்.
“என்னடி பங்கு செல்லம், சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி கலங்கறே, உலகம் இப்ப எப்படி போயிண்டிருக்கு தெரியுமா, உன் பையன் நல்ல வேளையா ஒரு பொண்ணை கூட்டிண்டு வரேன்னுதானே சொல்லி இருக்கான்.”
“ போங்கோன்னா உங்களுக்கு எப்பவும் குதர்க்கமாதான் தோணும்”
“ அதில்லைடா பங்கு, பேப்பர்ல தினம் படிக்கறோமே, பொண்ணும் பொண்ணும் சேந்து வாழறது, ஆம்பளை பையன் ஆம்பளை பையனை கல்யாணம் பண்ணிண்டான்னு.”
சட்னு தன் கையால என் வாயை பொத்தினா, “ நல்ல நாளும் அதுவுமா தத்து பித்துனு பேசாதீங்கோ.எங்கேயோ ஃபாரின் கண்ட்ரில இதெல்லாம் நடக்கும். நம்ம பாரத நாட்டு கலாசாரம் அப்படி வளக்கலை குழந்தைகளை.”
“ அப்பறம் ஏன் கலங்கி உக்காரறே,உன் பையன் அப்படி ஒண்ணும் நிச்சயமா சொல்லலையே, அப்படியே இருந்தாலும் நல்ல பொண்ணாதான் உன் பையன் செலக்ட் பண்ணி இருப்பான்.”
“ அதில்லைன்னா என் டி.நகர் அண்ணா பொண்ணு நிஷாதான் நம்ம ஆத்துக்கு மருமானு எத்தனை வருஷமா முடிவு பண்ணி இருக்கோம் அவளும் கம்மியா என்ன நடிகை திரிஷா மாதிரி அவ்வளவு அழகு, பெங்களூர்ல நல்ல கம்பெனில வேலை பாக்கறா, இங்கே வந்தா கூட அத்தானுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்னு செஞ்சு கொடுப்பாளே. அவளை விட்டுட்டு யாரையாவது கூட்டிண்டி வந்து கட்டி வை எனக்குன்னா பக்னு இருக்காதா, அந்த நிஷாக் குழந்தை மனசுல கனவுகளை வளத்துட்டு இப்ப எப்படிஅவ முகத்துல முளிப்பேன்.”
மனசுல இருந்ததை எல்லாம் கொட்டி முடிச்சா. எனக்கும் கொஞ்சம் மன வருத்தம்தான், என்ன செய்ய ஆப்டரால் ( after all) சேந்து வாழற குழந்தைகள்தானே முடிவு பண்ணணும்.
அந்த ஏழுமலையான் விட்ட வழினு எங்க மனசை சமாதானப் படுத்திண்டோம். ஒரு வேளை சுரேஷ் கூட்டிண்டு வரப் போற பொண்ணு அவனுக்கு பெர்பெக்ட் மேச் ஆற பொண்ணா கூட இருக்கலாம். சாயந்தரம் வரை வெய்ட் பண்ணலாம் அவனுக்கு மட்டும் ரசனை இருக்காதா என்ன, நல்ல பொண்ணாதான் செலக்ட் பண்ணி இருப்பான்.
சுரேஷ் கிளம்பும் போது, பங்கஜா அவன் கைல லன்ச் டப்பாவை கொடுத்துட்டு “பாத்துடா என் தங்கம், ஜாக்கிரதையா போயிட்டு வா.”
“சரிம்மா போயிட்டு வரேன், 6 மணிக்கெல்லாம், என் பிரண்டோட வந்துடுவேன். வீட்டை கொஞ்சம் ராணி(வேலைக் காரப் பொண்ணு) கிட்ட சொல்லி நல்லா சுத்தமா கிளீன் பண்ண சொல்லு. முக்கியமா என் ரூமை. அலமாரில லவெண்டர் ரூம் ஃபிரெஷ்னர் இருக்கு ஸ்பிரே பண்ணச் சொல்லு.”
அவன் பைக்கை கிளப்பிண்டு போயிட்டான், பங்கஜாவை பாவம் டென்ஷன்ல வச்சிட்டு.ஏதோ பண்ணினோம் ஏதோ சாப்பிட்டோம்,
4 மணில இருந்து ஒத்தொருத்தரா கொலு பாக்க வந்ததுனால கொஞ்சம் மனசு லேசானது. அடுத்த தெரு அலமேலு தன் குட்டி பேத்தியை அழகா அலங்காரம் பண்ணி கூட்டிண்டு வந்திருந்தா.அதுவும் பாடத் தெரியுமானு கேட்டவுடனேயே பளிச்னு பாடித்து,
“ பிரம்மம் ஒகடே, பரப்பிரம்மம் ஒகடேனு” அந்த இனிய குரலும் அந்த குழந்தையோட ஸ்பஷ்டமான உச்சரிப்பும் எல்லோரையும் கட்டிப் போட்டது.
ஆறு மணி வாக்குல தடதடனு பைக் சத்தம் கேட்டப்ப பதறிப் போய் எழுந்திருந்தா பங்கஜம்.கதவை திறந்து எட்டிப் பாத்தா சுரேஷ்தான், பின்னால கருப்பா குரோஷா டிரஸ்ல முகத்தில இருந்து பாதம் வரை மூடிண்டு கண்ணு மட்டும்தான் தெரியறாப்பல அந்த பெண்.
நான் பின்னால நின்னு தாங்கி பிடிச்சதால பங்கஜம் கீழே சாயல்லை.
சுரேஷ் தைரியமா அந்த பொண்ணோட சிவந்த கைகளை பிடிச்சிண்டு உள்ளே வந்தான். “அம்மா, அப்பா இது நிரோஷா பேகம் என் பிரண்டு நம்மாத்து கொலு பாக்க கூட்டிண்டு வந்தேன்.”
நான் மெதுவா, “ கொலு பாக்க மட்டும்தானே”
சுரேஷ் அதை விட மெதுவா, “ இப்போதைக்கு அது மட்டும், அப்பறம் மத்ததை பேசுவோம்”
பங்கஜா பேசவே இல்லை. அந்தப் பொண்ணு நிதானமா கொலு பொம்மைகளை பாத்தா, சுரேஷ், “ சரி வா என் ரூமுக்குனு” பறக்கறான், இவனும் செப்டம்பர் பார்ன்தான்.
பங்கஜா,”என்னடா உன் பிரண்ட் முகத்தை கூட பாக்க கூடாதா”
“இல்லைம்மா மத்த ஆண்கள் இருக்கறப்ப முகத் திரையை விலக்க மாட்டா, என் ரூமுக்கு நீயும் வாயேன் நன்னா பேசுவா, நன்னா சமைப்பா தெரியுமோ” அந்த பொண்ணை கூட்டிண்டு உள்ளே போயிட்டான்.
கரஹரபிரியா ராகத்தை இழுஇழுனு இழுத்து “ பக்கலா நிலபடினு”
ரசிச்சு பாடிண்டிருந்த பர்வத மாமி வீட்டுக்காரர் சோமு ஐய்யர் இந்த கருப்பு முக்காட்டு பொண்ணை பாத்துட்டு டக்னு பாட்டை நிப்பாட்டினார். யார் முகத்தையும் பாக்கமலயே, “அப்ப நாங்க புறப்படறோம்னு” புறப்பட்டார். பர்வதம் மாமி முகவாய்க் கட்டையை தோள்ல இடிச்சிண்டு போனா.இப்ப எல்லோரும் ஒவ்வொத்தரா நழுவிட்டாங்க.
சட்னு கொலு ஹால் நிசப்தமானது. நான், பங்கஜாவை,”வா பாப்போம் உன் மருமகள் முகத்தைனு” கூப்டேன். அவ கண்ல பொங்கின கண்ணீரோட தலை அசைச்சா.
அதுக்குள்ளே சுரேஷே வெளியே வந்தான்.
“அம்மா வாங்கம்மா, அப்பா நீங்களும் வாங்க, நிரோஷா பேகம் உங்களோட ஏதோ பேசணும்ன்றா.”கை பிடிச்சு இழுக்காத குறையா கூட்டிண்டு போனான். எங்களை அங்கே இருந்த கட்டில்ல உக்கார வச்சிட்டு, பாத்ரூமை பாத்து குரல் கொடுத்தான், “ பேகம் பாகர் ஆயியே, பேரண்டஸ் ஆகயா” ன்னான்
சட்டென பாத்ரூம் கதவு திறந்தது, “அத்தை” னு கத்திண்டு கருப்பு டிரெஸ்ஸை கைல வச்சிண்டு, நிஷா பங்கஜாவை ஓடி வந்து கட்டிண்டா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings