2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹலோ நான் பங்கஜா ராமன் பேசறேன் இதுவரை எங்காத்துக்காரர் ஏதேதோ எழுதிண்டிருந்தார். பல பேர் பாராட்டினீங்க, நன்றி யாரோ ஒத்தர் அச்சானியமா கூட சொன்னார்.என்னை என்ன வேணா சொல்லுங்கோ அவரை யாரும் தப்பா பேசக் கூடாது சரியா?
நான் சின்னவ ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோங்கோ”.
நீங்க ரெஸ்ட் எடுங்கோ நான் மீதி கொலு பத்தி எழுதறேன்னு சொல்லிட்டேன்.நீயா எழுதப் போறேன்னார்.ஏன் நான் எழுத மாட்டேனா, சவாலாஅவரளவு சொல்லத் தெரியுமா தெரியாது , முயற்சி பண்றேன் படிங்கோ. சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்னு பெரியவா சொல்லியிருக்காளோன்னோ, நானும் நாலஞ்சு தடவை எழுதினா தானா வர்ரது இதென்ன ராக்கெட் சயின்சா?
அவர் சும்மா இன்ஜினயரிங் முக்கி முக்கி பார்டர்ல பாஸ் பண்ணியிருக்கார். நான் எம்.எஸ்சி, எம்.ஃபில் ஆக்கும். எனக்கு வராதா என்ன, படிச்சிட்டு நீங்க கமென்டினா சாருக்கு என் அருமை தெரியும்.என்ன கொலுப் படி வைக்கறது வரை சொன்னாரா?
எப்பவும் போல ஏழு ஸ்டெப்தான். கலர் துணியெல்லாம் போட்டு அமக்களம் பண்ணியாச்சு. எங்காத்து மாமா அந்த மாம்பழக் கலர் பட்டுப் புடவையை போடலாண்டின்னார். முதல்ல கொடுத்துட்டேன். அப்பறம் ஞாபகம் வந்தது, கும்மோணத்துல முதமுதல்ல இவர் என்னை பாக்க வந்தப்ப கட்டிண்டது. என்ன இருந்தாலும் ஒரு சென்டிமென்ட், தகரப் படில பட்டு எங்கேயாவது கிழிஞ்சிட்டா. திரும்ப பிடிங்கி வச்சிண்டுட்டேன்.யாரு ‘ஷாரதா ஐய்யரா”, கேட்டேளாமே மாம்பழக் கலர் புடவை என்னாச்சுனு.பொம்மனாட்டி உங்களுக்கு தெரியாதா அந்தப் புடவையை எவ்வளவு பத்திரமா பாதுகாக்கறேன்.
உள்ரூம்ல கட்டில் மேல இந்த 9 அட்டைப் பெட்டிகள். எப்படி 9 பெட்டி சேந்தது சிம்பாலிக்கா நவராத்திரி 9 பெட்டியா. எல்லாம் அவர் எடுத்து வச்சது, சும்மா சொல்லக் கூடாது அழகா ஒவ்வொரு பொம்மையையும் பபிள் பேப்பர்லயோ துணிலயோ சுத்தி அழகா பேக் பண்ணியிருக்கார்.அதுலயும ஒவ்வொரு பெட்டிலயும் என்ன செட் இருக்குனு எழுதி டப்பா மேல ஒட்டியிருக்கார்.
சரி பிரிச்சு இடம் பாத்து அடுக்கறது தனியாளா முடியுமா? இன்னொரு பெட்ரூம்ல ஹாயா கால்மேல கால் போட்டு படுத்துண்டே ஃபோனை நோண்டிண்டிருக்காரே.
கண்ணாடி போட்டுண்டு ஃபோனை பாத்தா என்னவாம். வயசான தோற்றம் வந்துடுமாம். கண்ணு மட்டுமா வயசை காட்டும், மத்த பாகங்களை எங்கே மூடி வச்சிப்பேள்னா கோபம் வரும்.
“ஏன்னா நான்தான் சொன்னேன்னா, இரக்கமே இல்லாம இங்கே வந்து படுத்துட்டேளே, வாங்கோ பொம்மைகளை வச்சிடுவோம்.லைட்டிங், கிய்ட்டிங்லாம் உங்க பையன் பாத்துப்பான்.”
சமத்துக்குட்டின்னா என் ஆத்துக்கார்ர்தான், டக்னு எழுந்து வந்துட்டார். “ சொல்லு இப்ப என்ன செய்யணும்”
“ஆமாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி கேளுங்கோ, ஒவ்வொரு பெட்டியா பிரிக்கணும் பொம்மையை எடுத்து அடுக்கணும்”
“ இவ்வளவுதானே செஞ்சிட்டா போச்சு, சரி வச்சி முடிச்சா என்ன கிடைக்கும்”
“ உங்களுக்கு ஸ்ட்ராங்கா காபி கலக்கித் தரேன் ஓகேயா”
இந்த ஆளு விஷம்மான ஆளு ஜாக்கிரதையா பேசணும், எதுக்கோ அடி போடறார், தெரியாதா என்ன.
“ காபிதான் எப்பவும் கொடுப்பயே”
“ வேற என்ன வேணும் இன்னிக்கு மாளய அமாவாசை, ஏதாவது அசட்டு பிசட்டுனு பேசாம வேலையை பாருங்கோ, கல்யாண வயசுல பையன் இருக்கான்றதே மறந்துடறது அப்பப்ப”
“இல்லை அந்த மாம்பழக் கலர புடவையை இன்னிக்கு கட்டிக்கறையா”
“ பொம்மை அடுக்கறப்ப இது என்ன புடவை சஜெஷன்”
“ இல்லை அந்த புடவைல உன்னை பாக்கணும் போல இருக்கு”
“ போறும் வழியாதேங்கோ, தசரா அன்னிக்க கட்டிக்கறேன், போறுமா”
“இன்னும் பத்து நாளா?”
“ சரி பொம்மையை படில வைங்கோ, காபி கலக்கிண்டு வரேன், எதுத்தாப்பல நின்னா வேலை ஓடாது உங்களுக்கு”
எனக்கு சிரிப்பும் வெக்கமும் சேந்து வந்தது.இந்த மாதிரி அன்பும் ஆசையும் உள்ள ஆம்படையான் லக்ஷத்துல ஒத்தருக்குதான் அமைவா.இந்த செப்டம்பர் பார்ன் ஆட்களே கொஞ்சம் ரொமான்டிக் டைப்தான் எங்கேயோ படிச்சிருக்கேன்.
பால் குக்கர்ல ஊத்தி அடுப்புல ஏத்தறேன் அதுக்குள்ளே, ஏய் பங்கஜானு ஹால்ல இருந்து இவர். அஞ்சு நிமிஷம் விட மாட்டாரே.
“என்னாச்சு காபி கலக்கிண்டு வரேன்னுதானே போனேன்.”
“ இல்லை இந்த கல்யாண செட் எங்கே வாங்கினோம் ஞாபகம் இருக்கா? அப்ப கல்யாணம் ஆகி ஆறு மாசம்தான் இருக்கும் இல்லை”
“ இப்ப என்ன உங்களுக்கு மலரும் நினைவுகளா? அடுத்து என்ன சொல்வேள்னு எனக்கு தெரியும். எப்பப் பாரு இதே நினைப்பு” பொங்கி வந்த சிரிப்பை அடக்கிண்டு சமையலறைக்கு ஓடிட்டேன்.
எனக்கும் அந்த தினங்கள் ஞாபகம் இருக்கு, அப்ப இவர் கொடைக்கானல்ல வேலை பாத்திண்டிருந்தார். எனக்கு குளிர் தாங்காது,அதனால நான் இவர் கூட போகலை கும்மோணத்துலயே அம்மா கூட இருந்துட்டேன்.தாங்குமா இவருக்கு, வா வானு நச்சி எடுத்துட்டார்.எனக்கு குளிர் ஒரு நாள் கூட ஒத்துக்காதுன்னா எங்கே கேக்கறார்.
கொடைக்கானல் இல்லை வேற இடம்னு மதுரைக்கு கூட்டிண்டு போனார். அங்கே கவர்ன்மென்ட் கெஸ்ட் ஹவுஸ்ல ரூம் எடுத்துண்டு …போங்கப்பா எல்லாத்தையும் கேட்டுண்டு.அப்ப மீனாட்சி கோவில் கடைல வாங்கினது கல்யாண செட்.
பொம்மை எடுத்து வைக்கறப்ப இவர் எதுத்தாப்பல நிக்கக் கூடாது.ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு கதை இருக்கு. ஸவாரஸ்யமாதான் இருக்கும் ஆனா எல்லாத்தையும் எழுத முடியுமா என்ன? அவர்னா கூச்சமில்லாம எதை வேணா எழுதுவார்.பொம்மனாட்டியால அப்படி முடியுமோ.
எல்லாம் சூப்பரா வச்சவுடனே பையன் வந்து பாத்துட்டு, சூப்பரா வச்சிட்டேம்மான்னான்.
அவர், “ ஏண்டா இடுப்பொடிய ரெண்டு நாளா பாடு பட்டு வச்சது நானு, பாராட்டு அவளுக்கா?”
அவன்,” போங்கப்பா தாஜ்மஹாலை கட்டினது கொத்தனார், ஆனா ஷாஜஹானைத்தானே கொண்டாடறா”
நான் இல்லாத காலரை ஸ்டைலா தூக்கி விட்டுண்டு அவரைப் பாத்து சிரிச்சேன்.
பையன் சந்தடி சாக்குல ஒரு பிட் போட்டான்,” அம்மா என் பிரண்டை கூட கூப்டிருக்கேன் இந்த தடவை ஓகேயா?”
“யாருடா மங்களம் பையன் மகேஷ்தானே?”
“ போம்மா ஆம்பளைப் பசங்களை யாராவது கூப்பிடுவாளா”
“என்னடா குண்டைப் போடறே யார்ரா அது, நம்மவாளா, உன் கூட வேலை பாக்கறாளா?”
“ நாளைக்கு பாருங்கோளேன் ரெண்டு பேரும்னு” சொல்லிண்டே உள்ளே நடந்துட்டான்.
“ஐய்யோ இப்பவே கதங் கதங்னு இருக்கே யாரை கொண்டு வந்து நிறுத்தப் போறானோ.”
சரி அவா அவா தலையெழுத்து நாம என்ன மாத்தவா முடியும்,என்னென்னல்லாம் எழுதியிருக்கோ நடந்துதானே தீரும்.பொம்மையெல்லாம் படி மேல தற்காலிகமா வச்சிருக்கு நாளைக்கு கார்த்தால ஒரு ஃபைனல் டச். நாளைல இருந்து நவராத்திரி கலச பூஜையோட ஆரம்பம் எல்லோரும் வாங்கோ
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings