2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இந்த புரட்டாசி மாசம் வந்துட்டாலே எனக்கு கொஞ்சம் புரட்டும். அதுக்கு ஏகப்பட்ட காரணங்கள் உண்டு, அதுல ஒண்ணு கொலு வைக்கறதுன்ற ஒண்ணு.
என் மனைவி எப்பவும் போல எனக்கு இந்த வருஷமும் ஆவணி மாசத்துலயே ஒரு ரிலீஃப் கொடுத்தா.
“இந்த தடவை தாம்தூம்னு கொலு ஒண்ணும் பண்ண வேண்டாம். போன தடவையே நீங்கதான் பெரிசா இழுத்து விட்டேள்.”
நான் இதுல என்ன பண்ணினேன் யோசிச்சு பாத்தேன், ஒண்ணுமே பண்ணின ஞாபகம் வரலை, சரி எதுக்கு வம்புனு பேசாம கேணத்தனமா சிரிச்சு வச்சேன்.
பங்கஜமே பேசினா, “சிறுசா 3 படி வச்சா போறும், மரப்பாச்சி பொம்மைகள் ரெண்டு, ஸ்வாமி பொம்மைகள் அஞ்சாறு அவ்வளவு போறும். அப்படி பாக்காதீங்கோ உங்களுக்காக அந்த மதுரை கோவில் கடைல வாங்கின ம்யூசிஷியன் செட், புதுசா வாங்கின குடை ராட்டிணம் போறுமா,என்ன கிரிக்கெட் செட் உங்க ஃபேவரைட் ஆச்சே அதை வைக்கணுமா? என்னவோ பண்ணுங்க.உங்க அக்கா கொடுத்த அஷ்ட லக்ஷ்மி செட் வைக்கலேன்னா அவ வந்து தாம்தூம்னுவா அதுதானே .சரிப்பா உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம், அஞ்சு படிக்கு மேலே வேண்டவே வேண்டாம், ஹால் பூரா அடைச்சிக்கறது சரியா.
நான் வாய் திறக்கவே இல்லை, 25 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்னா சும்மாவா.கொஞ்ச நேரம் சும்மா இருந்த என் பார்யாள்,
“என்ன வாய்ல கொழுக்கட்டையா வச்சிருக்கேள் கரடியா கத்தறேன் பிடிச்ச பிள்ளையாராட்டம் உக்காந்திருக்கீங்களே.மணியன் பயலை கூப்பிட்டு அட்டத்துல இருக்கற கொலுப்படி பொம்மை டப்பாக்களை இறக்கச் சொல்லுங்கோ 3 நாள் கூட இல்லை இன்னம்”
.(மணியன்றது சொசைடில எல்லா ஃபிளாட்லயும் எடுபிடி வேலை செய்யற பையன்ற 48 வயசு ஆள்)
“ஏன் நம்ம சுரேஷ் கிட்ட சொன்னா டக்னு எடுத்துப் போடுவானேன்னு வீண் வாதம் பண்ணாதீங்கோ. உங்க பையன்தானே உங்க மாதிரியே வளத்து வச்சிருக்கேள். போம்மா வேற வேலை இருக்கும்பான்”.(ஸ்கூல், காலேஜ்ல ஏதாவது சின்ன கப் ஜெயிச்சா கூட என் வளப்பு சோடை போகுமா என் பிள்ளையாச்சேன்னு பீத்திப்பா அது வேற கதை)
மணியன் கூப்பிட்டா அவ்வளவு சீக்கிரம் வந்துடுவானா எல்லா பிளாட்லயும் அட்டத்துல இருந்து கொலுப் படி, பொம்மை டப்பா இறக்கி கொடுக்கறது, ஒட்டடை அடிச்சு கிளீன் பண்றது அவன் வேலைதானே.கார்த்தால இருந்து நாலு தடவை அவன் மொபைல்ல கூப்பிட்டாச்சு “இதோ வரேன் சார்” இதுதான் ரெடிமேட் பதில்.
பங்கஜத்துக்கு பரபரப்பு இப்பவே இறக்கணும் எல்லாத்தையும்.
“ஏன்னா நீங்க 65 வயசுலயும் சிக்னு சின்ன பையனாட்டம் நன்னாதானே இருக்கேள், மளார்னு அந்த அலுமினியம் போல்டிங் ஏணி வச்சு ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் இறக்கி போட்டுட மாட்டேளோ.”
“ ஆமாண்டி மடக்கின முழங்காலை நீட்ட முடியலை சின்ன பையனாம், சின்ன பையன், விட்டா ஒரு கல்யாணம் கூட பண்ணி வச்சிடுவே போல இருக்கே.”
முனகலான குரலில் “ கிழவனுக்கு ஆசையைப் பாரு” சற்றே உரத்த குரலில் ” ஆமான்னா எந்த பொண்ணும் கண்டேன், கண்டேன்னு உங்களை பண்ணிப்பாளே” மீண்டும் முனகல் குரல்,
“ பண்ணிண்டாலும், குறட்டையைத்தான் கேக்கணும், வேற என்ன”.
எப்படியோ குழையடிச்சு படிகள், ரெண்டு கொலுப் பெட்டியை இறக்கியாச்சு.கீழே இருந்து மேற்பார்வை பாத்த பங்கஜா, “மீதி பெட்டியையும் இறக்கிடுங்கோ.”
“மூணு படி, அஞ்சு படின்னே ரெண்டு பெட்டிலயே இவ்வளவு பொம்மை இருக்கே”
“ இதுதான் உங்க கிட்ட, எதுக்கெடுத்தாலும் எதிர் வாதம். கொலுல வச்சாதானா, வருஷம் ஒரு தடவை எல்லா பொம்மையும் துடைச்சாவது வைக்கணுமா இல்லையா”
எல்லா பொம்மை பெட்டியையும் இறக்கி வச்சிட்டேன்.அப்பாடின்னு ஈசிசேர்ல சாஞ்சா, காலிங் பெல் சத்தம்.முக்கி முனகி எந்திரிச்சு கதவை திறந்தா பல்லை காட்டிண்டு மணியன்,” கொலுப் பெட்டி, படிகளை அட்டத்தில இருந்து இறக்கணும்னீங்களே”
“ நீ வந்து இறக்கி நாங்க கொலு வச்ச மாதிரிதான், நானே இறக்கிட்டேன்”
“ சாரி சார், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, நான் எல்லா பொம்மையும் பிரிச்சு துடைச்சு வைக்கறேன்னு” சொல்லிண்டே உள்ளே வந்துட்டான்.நூறோ இருநூறோ கிடைக்குமே. நைட்,டைட் ஆறதுக்கு போறுமே.
பங்கஜம்“ மணியன் வந்துட்டானா, சரி நீங்க போய் ரெஸ்ட் எடுங்கோ, ரெண்டு சின்ன கொலுப் பெட்டியை இறக்கறதுக்குள்ளே பாடா படுத்திட்டேளே.”
மூணு, அஞ்சுனு சொல்லிட்டு ஏழு படியையையும் வச்சிட்டயேனு கேட்டதுக்கு, “கஷ்டப் பட்டு எல்லா பெட்டியும் இறக்கிட்டோம் (இப்ப மட்டும் இறக்கிட்டோம்னு கூட்டு சேந்துப்பா) பொம்மைகளையும் தொடைச்சாச்சு திரும்ப பெட்டில வைக்கறதுக்கு பதில் படில உக்கார வச்சாச்சு.இதுல உங்களுக்கென்ன கஷ்டம்.?”
“ இதைப் பாருங்கோ இந்த வருஷம் தாம்தூம்னு பண்றதா இல்லை, அக்கம் பக்கம் அஞ்சாறு பேரை கூப்டு தாம்பூலம் தரப் போறேன் அவ்வளவுதான்.”
“ஆமாம்டி அதை செய், மாமிகளோட மாமாக்களும் வந்து நானும் பாடுவேன்னு பாடாப் படுத்தறதுகள் ஒவ்வொரு தடவையும்.”
“ சரி நீங்க பிராட்வே போய் நல்ல சாமானா ரிடர்ன் கிஃப்ட் வாங்கிண்டு வந்துடுங்கோ”
“ வெறும் தாம்பூலம்னே”
“ சரியான கஞ்சம்பெட்டி நீங்க, வருஷம் ஒரு தடவை நாலு பேருக்கு ஏதாவது பண்ணினாதான் என்ன”
“ இல்லை நீதானே சொன்னே சிம்பிளானு அதனால கேட்டேன்.சரி அஞ்சாறு செட் ஒரு நூறு நூத்தம்பது ரூபாய்க்குள்ளே வர மாதிரி போறுமா”
“ அஞ்சாறா, பைத்தியமா என்ன உங்களுக்கு, ஒரு நாளைக்கு பத்து பேர்னா கூட 90 ஆச்சே குறைஞ்சது நூறு ஐட்டம் வேணும், அப்பறம் சுண்டலுக்கு பயறு வகைகள், தேங்கா ஒரு மூட்டை, சாத்துக்குடி சீப்பா கிடைச்சா ஒரு நூறு, குழந்தேள் வந்தா அவாளுக்கு ஏதாவது தனியா இதெல்லாம் உங்களுக்கே தெரியும் நான் சொல்லவே வேண்டாம்.”
இப்படியாக இந்த வருஷ நவராத்திரி சிம்பிளா பண்ணப் போறோம். எல்லோரும் வாங்கோ, பங்கஜம் தரப்புல நான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings