எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
விடிந்து கொண்டிருக்கும் காலை பொழுதொன்றில், காபியுடன் காலைப் பத்திரிகையுடன் அமர்ந்திருந்தார் ‘கதிர்வேல்’. அன்று வெள்ளிக்கிழமை. தவறாமல் வெள்ளிக்கிழமை தோறும் அவர் மௌன விரதம் இருப்பது வழக்கம். ஆனால், அதற்கான காரணம் என்னவென்று இதுவரைக்கும் அவர் யாருக்கும் சொன்னத்தில்லை, யாரும் அவரை வற்புறுத்தி துளைத்து எடுப்பதுமில்லை.
இன்றுதான் சரியான நாளென்று கதிர்வேல் அவரின் மகள் வந்து அருகில் அமர்ந்து, “அப்பா… நான் ஒருவரை காதலிக்கிறேன் … அவரையே திருமணம் செய்துக்கப் போறேன்” என்றாள் .
லேசாகத் திடுக்கிட்டார் கதிர்வேல். “காதலிக்கும் அளவுக்கு, நம்ம ‘குழந்தை’ வளர்ந்து விட்டது” பற்றியதான அதிர்ச்சியாக இருக்கலாம். புன்னகையுடன் தலையாட்டினார். மகிழ்ச்சி துள்ள மகள் வீட்டிற்குள் ஓடினாள்.
உள்ளே வந்த கதிர்வேல் எதிர்வருகின்ற வளர்பிறை முகூர்த்த நாளை பார்க்க நாட்காட்டியினை எடுத்தார். வைகாசி மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்தம் என்று இருந்தது. அன்றைய ஆங்கிலத் தேதி 06-06 என்று இருந்தது.
அந்த 06-06 என்பது அவரைத் தட்டிவிட… நாட்காட்டியின் நினைவலைகள் 30 வருடங்கள் பின்னோக்கிப் போகத் தொடங்கின. அந்த நாள் வெள்ளிக்கிழமை.
கதிர்வேல் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் முதலில் படிக்க விரும்பிய பாடம் காதல் பாடம். ‘விஜி’ … உடன்படிக்கும் மாணவி .அதைவிட அன்பாய் அக்கறை எடுத்துக் கொள்ளும் ஒரு தோழி. இருவரின் பழக்கம் நாளும் வளர்ந்தது…அது காதலா என்றும் தெரியவில்லை .
கல்லூரி இறுதிநாள் பிரியும் நேரம் கதிர்வேல் விஜிடம் சென்று.. “நாம ரெண்டுபேரும் கல்யாணம் செஞ்சிக்கலாமா?” என்றார் .
விஜி… யாதார்த்தமுடன் … “நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா சோறு? இருக்க வீடு ? ,செலவுக்குப் பணம்? எல்லாம் உங்க அப்பா அம்மா தருவார்களா ? என்று கேட்டார் .
இன்றைய கால இளைய தலைமுறையினர் போல் … “நீ மட்டும் இல்லேன்னா நான் செத்துடுவேன் அல்லது … எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது …” இது போல எந்த விபரீத எண்ணங்கள் எதுவும் கதிர்வேலுக்குத் தோன்றவில்லை …மாறாக விஜியின் பேச்சு வாழ்வின் யதார்த்தை உணர்த்தியது.
மௌனம் சிறிது நேரம் குடி கொண்டது. இருவரும் பிரித்திடும் நேரம்… விஜி சொன்னதோ “பறவைகள் கூடு கட்டிய பிறகுதான் முட்டை இட்டு குஞ்சு பெற்றுக் கொள்கின்றன”.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விஜியை ஒரு திருமணத்தில் சந்தித்தார் …அப்பொழுது விஜிக்கு இரண்டு பெண்கள் என்றும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்றும் தெரிந்துக் கொண்டார் கதிர்வேல்.
இன்று கதிர்வேல் அவர்களின் மகள் அழிக்கமுடியா கல்வியும் நிலையான வேலையும் பெற்று இருக்கிறார் . அவர் தேர்நதெடுத்த மணமகனும் அவருக்கு நிகரானவரே .
கதிர்வேல் நாட்காட்டியை சுவரில் மாட்டிவிட்டு புன்னகைத்தார் .
மனத்துள் எண்ணினார் “ நம்மைவிட நம் பிள்ளைகள் புத்திசாலிகள்”.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings