2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அடித்து பிடித்து முதல் ஆளாக இடத்தை பிடித்து விட்டேன்…
பிடித்து என்ன புண்ணியம் இன்னைக்கு 150 டோக்கனுக்கு மட்டும் தான் பணம் கொடுப்பாங்க, காலையிலே 130 க்கு கொடுத்து விட்டாங்க நான் வயற்காட்டு வேலைக்கு போனதால் எனக்கு தெரியலா, அதான் மதியம் ஓடி வந்தேன்……..ஏற்கனவே 130 டோக்கனுக்கு கொடுத்துட்டாங்களா போச்சு… போ…அக்கா
நமக்கு நாளைக்கு தான் கொடுப்பாங்க வா வீட்டிற்கு போவோம்…..
எதற்கு வீணாக இங்க உட்கார்ந்து இருக்க….
செத்த பொறு….. ரேஷன் கடைக்காரரிடமே கேட்டுட்டு போயிருவோம்….
நீ சொன்ன கேட்க மாட்டா அவன் வந்த மட்டும் உனக்கு பணத்தை கொடுத்து விடுவானா….
நான் போறேன் வீட்டுக்கு நாளைக்கு வந்து வாங்கிறேன் அக்கா….
மரத்தின் மேல ஒரு காக்கா அமர்ந்து கா…..கா…..கா….. வென கரைந்தது….
பார்வதிக்கு கடுமையான பசி வேறு….. பசியால் மயக்கமே வந்துவிடும் போல, அந்த கடையில் வாங்கி இரண்டு வடையை, ஒரு காகிதத்தை வைத்து பிழிந்து பிறகும் மீதமிருக்கும் எண்ணெய் கை, கால்களில் தேய்த்து காகாத்தை விரட்ட முயன்றால் “பார்வதி”
மரத்திலிருந்து காக்கா கீழே இறங்கி பார்வதியின் அருகில் வந்து நின்று கத்தியது…. அதுக்கும் ஏதோ பசி போல் அதான் இப்படி விடமா நம்மால தூரத்து போல, பிறகு அவற்றிற்கு வேறு சில வடை துண்டுகளை பிச்சு எறிந்தாள், அதை அது மெதவாக கொத்தி கொத்தி தின்றது….
அருகிலுள்ள டீ… கடைக்கு சென்று தண்ணீர் வாங்கி குடித்து விட்டு மீண்டும் அவளுடைய இடத்திற்கே வந்து அமர்ந்தாள்….
அந்த காக்கா மறுபடியும் அவளிடம் வந்தது…. இதோட ஒரே தொந்தரவா போச்சு….
இந்த ரேஷன் கடைக்காரர் வேற, எப்ப வருவருன்னு தெரியலா? அவர் வந்த இந்த டோக்கன் தருவீங்க இல்லா தர மாட்டிங்களா? கேட்டு போயிலாம் பார்த்த இந்த காக்கா வேற என்ன தொந்தரவு பண்ணிட்டே இருக்கு….
அந்த காக்கா அவளையே உற்று….உற்றுப் பார்த்தது….
உனக்கு என்ன வேண்ணும் எதுக்கு என்னாயவே சுத்தி சுத்தி வர….. ஒரு வேலை அந்த சாமியார் சொன்ன மாதிரி எனக்கு சனீஸ்வரன் சரி இல்லாமா இருக்குன்னு சொன்னாரே….
அதற்காக தான் இந்த காக்கா என்னைவே சுத்தி சுத்தி வருது போல, இது என்ன கடவுகளே! எனக்கு வந்த சோதனை ….
முதலில் அவர் சொன்ன குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு போய் இரண்டும் காகாத்தின் பொம்மைகளை வாங்கி வைக்க சொன்னாரு அதற்கு உணவிட்டு வணங்கினால் நல்லது என்று சொன்னார்…..
அதை முதலில் செய்ய வேண்டும்…
என்று மனத்திற்குள்ளே புலம்பி தீர்த்து கொண்டாள் “ பார்வதி”….
எந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட அசையாது கரைந்து…. கரைந்து….. அவளின் வெறுப்பை பெற்றது….. வேறு வழியில்லாமல் அருகில் இருந்த குச்சியை எடுத்து விரட்டினாள்….
அப்படியும் அது அசையாது அவள் அருகிலேயே நின்றது… ரேஷன் கடைக்காரர் வந்தார்…..
தம்பி இன்னைக்கு டோக்கன் கொடுக்குறங்கன்னு சொன்னங்கப்பா …. இப்ப நீ அதா கொடுத்த நல்லருக்கும் தம்பி….
வயற்காட்டிலா நிறைய வேளையை கிடப்பிலா போட்டு வந்துருக்கேன் தம்பி…. பால்காரர் வேற பால் பீச்ச…. வந்துருவாரு…. கொஞ்சம் பார்த்து எடுத்து கொடு தம்பி……
உனக்கு புண்ணியமா போகட்டும்…..
போம்மா உனக்கு வேற வேலை இருந்த அதா போய் பாரு நாளைக்கு தான் தருவேன்…இன்னைக்கு டோக்கன் முடிஞ்சு போச்சு…. என்று கடிந்துரைத்தான்….
எதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தாள்…. ரேஷனுக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் வாங்கி சென்றனர்….
பொருளை எடுத்துக் கொடுப்பவரிடம் சென்று பார்வதி தம்பி…. தம்பி….. என அழைத்தாள்…..
பொறுங்க அக்கா ….. கடைசியா கொடுக்க சொல்றேன்…. நீங்க போய் அமைதி உட்கார்ந்து இருங்க அக்கா…..
சரிப்பா தம்பி….. என கூறி மரத்தடி நிழலில் உட்கார்ந்து இருந்தாள்…. வெயிலின் தாக்கமானது சற்று குறைய ஆரம்பித்தது….
நா…. ஓரே வறட்சியாக இருந்தது…. மறுபடியும் அந்த டீ கடைக்காரரிடம் சென்று தண்ணீர் வாங்கி குடித்தாள்….
அந்த இடத்தில் காக்கா மறுபடியும் வந்து கரைய ஆரம்பித்தது…. இது என்ன வம்பா போச்சு?
மறுபடியும் வந்துட்டா? உனக்கு என்ன தான் வேண்ணும் ஏதுக்கு இப்படி கத்திக் கிட்டே இருக்கா?
அவள் கையில் இருந்த தண்ணீரால் முகத்தை சற்று கழுவினாள் …. பிறகு அந்த தண்ணீரை பார்த்து தான் அந்த காக்கா கத்தியது….
என்பதை உணர்ந்தாள் பார்வதி ஒரு சிறிய பள்ளத்தில் தண்ணீரை ஊற்றினால் பிறகு அந்த காக்கா அந்த தண்ணீரை மீதம் வைக்காமல் குடித்து முடித்தது….
அடா! இதுக்கு தான் என் பின்னாலேயே வந்தியா அது புரியலா உன்ன ஏதேதோ பேசிட்டேன்…..
சற்று நேரம் கழித்து அது அந்த மரத்திலேயே போய் அமர்ந்தது…..
மாலை 4 மணிக்கு மேல் ஆனது அவள் அவர்களிடம் போய் டோக்கன் இருந்தா கொடுப்பா என்றாள்…..
அனைத்து முடிந்து கடையை மூடப் போறேன் இப்ப வந்து டோக்கன் கேட்குறீயே உனக்கே இது நியாயமா இருக்கம்மா? என்றான்….
பிறகு தம்பி… தம்பி…. கொடுப்பா என்று அவளுடைய குடும்ப கஷ்டத்தை அவனிடம் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்….
சரி உன்ன பார்க்கவும் பாவ தாம்மா இருக்கு யார் கிட்டேயும் சொல்லி விட்டுதீங்க…. அப்படியே ஒவ்வொரு ஒருத்தரா கிளம்பி வந்துருவாங்க….
அதெல்லாம் சொல்ல மாட்டேன் தம்பி….. முகவரியை குறித்துக் கொண்டு டோக்கனைக் கொடுத்தான்….
சரி… தம்பி ரொம்ப சந்தோஷம் தம்பி….
டோக்கனை வாங்கி கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள்…. அந்த மரத்திலிருந்து காக்கா அவளையே பார்த்தது ….. அடுத்து யாராவது நமக்கு இது போன்று செய்வார்களா…. செய்ய மாட்டார்கள்….
என ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு உயிர்கள் காத்துக் கொண்டிருக்கிறது…. நாம் பெரிதாக செய்யவில்லை என்றாலும் நம்மால் முடிந்தளவு உதவினாலே போதுமானது…
பணமில்லை என்றாலும் “நல்ல மனம்” இருந்தால் போதும் யாரும் யாருக்கும் உதவலாம்…..
“ பார்வதியின் தர்மமானது என்றாவது ஒரு நாள் அவளுக்கு அது கை கொடுக்கும் போது அதை உணர்வாள்” அனைத்து உயிர்களுக்கும் பசியென்பது ஒன்றே தாகமென்பது ஒன்றே…..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings