2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
உங்களுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டீர்களா என ராம் தன்னுடைய அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
என் கிட்ட என்னப்பா நாலு முழ வேஸ்டி 4, சட்டை நான்கு தானே, எடுத்து வைத்துக் கொண்டேன். வேற ஒன்னும் இல்லப்பா என்றார் அப்பா சங்கர்.
இதெல்லாம் கட்ட பையில் எதுக்கு வச்சிருக்கீங்க, உங்க சூட்கேஸ் ஒன்னு இருந்ததில்லை, அதில் எடுத்து வச்சுடுங்க, பணம் கொடுத்தால் சூட்கேஸ்ல வச்சுக்கோங்க, என பீரோ மேல் இருந்த பழைய சூட்கேஸ் ஐ எடுத்து சுத்தம் செய்து கொடுத்தான் ராம்.
எனக்கு சூட்கேஸ் எல்லாம் வேண்டாம் பா, இந்த கட்ட பையை போதும் என மறுத்தார் அப்பா.
சரி அப்புறம் உங்க இஷ்டம், காப்பி குடித்துவிட்டீர்களா எனக் கேட்டான் ராம்.
ராமின் மனைவி சுஜாதா இந்தாங்க மாமா காபி என்று என்றும் இல்லாத ஆசையோடு மருமகள் கொடுத்ததை வாங்கி பருகினார் சங்கர்.
உடம்பு பத்திரமா பாத்துக்கோங்க, உங்க பேரன் 12 ஆம் வகுப்பு படிக்கின்றான். எப்படியாவது நன்றாக படித்து உயர்ந்தநிலைக்கு அவன் வரவேண்டும். அவனை கவனித்துக் கொள்வதால் உங்களை சரியாக கவனிக்க முடியாது. இந்த ஒரு வருட மட்டும் முதியோர் இல்லத்தில் இருங்கள், அவனை கல்லூரியில் சேர்த்த பிறகு உங்களை அழைத்துக் கொள்கிறோம் எனக் கூறினாள் மருமகள் சுஜாதா.
அதனால் என்னம்மா பரவால்ல, உன் பையன் படிப்பு முக்கியம், எனக்கென்ன வயதாகிவிட்டது, எங்கேயோ ஒரு பக்கம் இருந்தால் சரி என்றார் சங்கர்.
அப்பா ஆட்டோ வந்துவிட்டது, வாங்க போகலாம் என சொல்ல சங்கர் கிளம்பும்போது பேரன் பள்ளியில் இருந்து வந்தான்.
தாத்தாவை எங்க கூட்டிட்டு போறீங்க என கேட்க உடனே அம்மா, உள்ள வாடா, போகும்போது எங்கே போறீங்கன்னு கேட்கக்கூடாது என சொல்ல சங்கர் தன்னுடைய வேட்டியில் மடித்து வைத்திருந்த ரூபாய் 5000த்தை எடுத்து பேரன் கையில் கொடுத்து இதை வைத்துக் கொள் என சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவும் முதியோர் இல்லத்தை நோக்கி சென்றது. நீங்க ஒரு ஆறு மாசம் மட்டும் இருங்க. பிறகு நான் அழைத்துக் கொள்கிறேன் என்றான் மகன் ராம்.
ஒன்னும் அவசரம் இல்லை. அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே முதியோர் இல்லமும் வந்துவிட்டது.
முதியோர் இல்லத்தில் உள்ளே சென்று அவர்கள் கொடுத்த படிவத்தை நிரப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ராம். அப்போது முதியோர் இல்லத்தின் நிர்வாகி அவர்களிடம் அப்பா பேசிக் கொண்டிருந்தார்.
அரை மணி நேரம் ஆகியும் அப்பா வருவதாக இல்லை. பிறகு சங்கரே சென்று நிர்வாகிக்கு வணக்கம் சொல்லிவிட்டு அப்பாவை அழைத்துச் சென்று அவருடைய அறையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் சங்கர்.
மீண்டும் முதியோர் இல்லத்தின் நிர்வாகியிடம் வந்து எங்க அப்பாவை முன்னமே உங்களுக்கு தெரியுமா? ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார்களே எனக் கேட்டான் ராம். .
உன்னிடம் சொல்லக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கினார் உங்க அப்பா. இருந்தாலும் உன்னிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
35 வருடங்களுக்கு முன்பு உங்க அப்பா இங்கே தான் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்தார். குப்பைத் தொட்டியில் குப்பையை போடும் போது பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை குப்பைத்தொட்டியில் கிடந்தது. அந்த பச்சிளங் குழந்தையை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்தார்.
சங்கருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை கிடையாது, இந்த குழந்தையை நான் வளர்த்துக் கொள்கிறேன் என்று எடுத்துச் சென்று கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் குழந்தையின் வளர்ச்சியை கண்டு பூரிப்படைந்தார் சங்கர். அவருடைய மனைவி திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போக இறந்து விட்டார். இரவும் பகலும் ஆக வேலை பார்த்து அந்தக் குழந்தையை படிக்க வைத்தார். அந்தப் பையனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
அந்தப் பையன் வேறு யாரும் இல்லை, குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை நீ தானடா.. குப்பைத் தொட்டியில் அனாதையாக கிடந்த உன்னை எடுத்து வளர்த்தவர் வேற யாரும் இல்லை, அவர் வீட்டில் இருப்பதால் இடைஞ்சல் என்று இப்போது முதியோர் இல்லத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறாயே, உன்னுடைய அப்பா சங்கர் தான் என்று சொல்லி முடித்தார் நிர்வாகி.
இதைக் கேட்ட ராம் நடைபிணமாக , மனவலியோடு வீடு வந்து சேர்ந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings