நூலின் பெயர் : முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா
நூலின் ஆசிரியர் : ஏற்காடு இளங்கோ
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பர் காற்று இல்லாத இடம் உண்டு உன் புத்தியில் ஏற்றிக்கொள் அங்கு உன் கொடி ஏற்ற கற்றுக்கொள்
கதைகள் பல சொல்லி விண்ணைப் பார்த்து உண்ட குழந்தை நாளை விண்ணுக்குச் சென்று சொல்லும் உலகம் உருண்டை மண்ணை ஆண்டான் மன்னன் விண்ணை ஆண்ட என் அண்ணன் ராகேஷ் சர்மா இந்தியன்பெருமை கொள்வோம்.
மண்ணை ஆளும் மன்னனையும் விண்ணை ஆளத்துடிக்கும் விந்தை மனிதர்களையும் தெரிந்துகொள்வோம் நூல் பல கல் நாளைய உலகில் நிமிர்ந்து நில்
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பாடல் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது மாணவர்களுக்கு வீரத்தை ஊட்டி வளர்க்க இந்த நூல் பயன்படும்.
முதல் இந்திய விஞ்ஞானி வீரர் ராகேஷ் சர்மா இந்த நூல் 19 தலைப்புகளை தன்னுள்ளே கொண்டுள்ளது
பிறப்பும் இளமை கல்வியும்
இந்திய வம்சாவளி கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இரண்டு பேரும் விண்வெளி சென்றவர்கள் தான் ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்
ராகேஷ் ஷர்மா அவர்கள் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 13 பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா என்னும் இடத்தில் பிறந்தார். கல்வியை ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ஆகும் 1966 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சி பெற்றார். 1970இல் பைலட் அதிகாரி பதவி வழங்கப்பட்டது மிக்(MIG) இராணுவ விமானம் ஓட்டுவதில் திறமை பெற்றவர் 1971 இல் பாகிஸ்தானுக்கு எதிரான நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்.
விண்வெளி பயிற்சி
ராகேஷ் ஷர்மா மற்றும் ரவீஸ் மல்கோத்ரா இருவரும் ரஷ்யாவின் மாஸ்கோ சென்றனர் 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்வு ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி முடிந்து காத்திருந்தனர் சோயுஸ் T-11 மின்கலம் புறப்படுவதற்கு நேரம் அறிவிக்கப்பட்டது ஆனால் வீரர்கள் யார் யார் என்பது 24 மணி நேரத்திற்கு முன்பு வரை அறிவிக்கப்படவில்லை ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது 2 சோவியத் ரஷ்ய வீரர்கள் ஒருவர் இந்தியர்
வீரர்கள் கமாண்டர் யூரி மாலிகேஷ் மின்கல பொறியாளர் கென்னடி ஸ்டீகலோவ் ஆராய்ச்சி வீரர் ராகேஷ் ஷர்மா மாற்றுவீர்கள் இருந்தனர்.
சொயுஸ் T-11
விண்கலத்தில் ஒரு அடையாள சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ஜூபிட்டர் ஆகும். இந்த விண்கலம் 181 நாட்கள் 21 மணி 48 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தது
சல்யூட் 7 என்பது ஆய்வு நிலையத்தில் கடைசி ஆய்வு நிலையமாகும் மிர் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு முன்னோடி.
ஆய்வு சல்யூட் 7 பல ஆராய்ச்சிகள் செய்தனர் ஹார்டுவேர் ராகேஷ் ஷர்மா ஆய்வு செய்தார் புவி அறிவியல் உயிரி மருத்துவம் உலோகவியல் இம்மூன்று ஆய்வுகளை மேற்கொண்டார்
*யோகா* விண்வெளியில் யோகா செய்த முதல் யோகி ராகேஷ் சர்மா ஆவார்
*பிரதமருடன்* பேசுதல்
அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் தொலைபேசியில் உரையாடினார்
பூமி திரும்புதல் பூமி திரும்பியவுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார் பின் இந்திய வருகையில் உற்சாகமான வரவேற்பை ஏற்றுக்கொண்டார் .
விருது 1984 அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
பதவி
விங் கமாண்டர் பதவி கிடைத்தது விண்வெளி அனுபவங்கள் பற்றிய பேட்டியில் எனக்கு லாட்டரி விழுந்தது போல் தான் இருந்தது விண்வெளியில் பெரிய அளவில் நான் ஒன்றும் சாதிக்க வில்லை என்றார் அவரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது விண்வெளியும் சுற்றுச்சூழலும் பற்றி உரையாடிய போது சூரியனிலிருந்து ஊதா நிற கோடுகள் தோன்றி ஏழு வண்ணங்களாக மாறுவதாக அவர் கூறினார்.
பூமியில் அவருக்குப் பிடித்த இடம் சிங்கப்பூர் ஆஸ்திரேலியா பிரிட்டன் மற்றும் அமெரிக்கா
*பள்ளி* *விழா* 2008-ஆம் ஆண்டு சென்னை வேலம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
நிறை
மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் கருத்துக்கள் நிறைந்திருந்தது.
குறை
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்ன தகுதிகள் தேவை அங்கே என்னென்ன விதமான உணவுகள் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன என்பதை விளக்கமாகக் கூறி இருக்கலாம்.
*நன்றி*
வாசிப்பை நேசிக்கும்……..
ச.பூங்குழலி
வடசேரி
தஞ்சாவூர் மாவட்டம்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings