2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நள்ளிரவு வந்த அலைபேசி அழைப்பு…. அசந்து தூங்கிக் கொண்டிருந்த ‘ஆறுமுகம்’ மற்றும் அவர் மனைவி ‘சாந்தா’ ஆகியோரத் தட்டி எழுப்பியது ….கட்டிலிலிருந்து எழுந்து கண்ணாடியை மாட்டிக்கொண்டு அலைபேசியைப் பார்த்தார்….அழைத்தது அமெரிக்காவிலிருக்கும் தனது மகன் ‘அருண்’.
“என்னப்பா அருண் …இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க”
“அப்பா…. ‘திவ்யா’… பொண் கொழந்த பெத்திருக்கா”
“அத ஏண்டா சோகமா சொல்ற….. மஹாலட்சுமி பிறந்திருக்கா…. சந்தோசமா சொல்ல வேண்டாமா….,”
“நாங்க நாளைக்கு சென்னை வரோம்”.
“என்னடா சொல்ற ….?இப்பதான் கொழந்த பொறந்து இருக்கு…..திவ்யாவுக்கு ஒய்வு வேண்டாமா…? இங்க வரோம்ன்னு சொல்ற…? நீங்க ரெண்டுபேரும் டாக்டர் தானே …?”
“சரிப்பா… எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்” என்று சொல்லிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
ஆறுமுகத்திற்கு ….ஏதோ தவறாகப்பட்டது …..”அருண் பிற்போக்குவாதி இல்ல… பெண் கொழந்தை பொறந்ததுக்கு வருத்தப்படற ஆளில்ல…..திவ்யா கேரளத்து பெண் என்றாலும்….. இருவரும் விரும்பியதால்…..திவ்யா வீட்டு எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து வைத்தேன் ….இருவரும் மகிழ்ச்சியா வாழறாங்க …எப்பவும் நல்லா பேசுறவன் …இன்னிக்கி ஒரு மாதிரியா பேசுறானே…? என்னவாயிருக்கும் …?”குழப்பத்தால் கண்ணை இறுக்கிய தூக்கமும் தூரப்போனது.
மறுநாள்…..
விமான நிலையத்திருந்து ஒரு வாடகை காரில் வந்திறங்கினான் அருண் கையில் பச்சிளங் குழந்தையுடன்….. வாசலிலேயே காத்திருந்த ஆறுமுகமும் சாந்தாவும்….இருவர் மட்டுமே இறங்குவதைப் பார்த்து….
“எங்க …திவ்யா?”’ என்று கேக்கும்போதே ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது ……அதன் கதவைத்திறந்து படுக்கையில் கிடத்தபட்ட திவ்யாவை கீழே இறக்கினர்.
சாந்தா….. “அய்யோ….என்னயிது கோலமெனக் கத்த?”
அருண்…..“அம்மா….திவ்யா ….பிரசவ நேரத்துல அதிக வலியால ….மைய நரம்பு மண்டலத்துல பாதிப்பு ஏற்பட்டு ஆழ்மயக்கத்துக்கு போயிட்டா ….புரியும்படி சொல்லனும்னா “கோமா” நிலை.நாங்க டாக்டரா இருந்தாலும் மருந்து மாத்திரையால் மட்டும் இத குணப்படுத்த முடியாது ……சில குடும்ப உறுப்பினர்களின் உணர்வுபூர்வமான கவனிப்பே குணப்படுத்தும்…..நான் அங்க என்ன பண்ண முடியும்? அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்?”
அருண் பேசியதில் சற்று வெளிச்சம் தெரிவதாய் உணர்ந்த ஆறுமுகம்….
“அருண் ….நாம எல்லோரும் நாளைக்கே ….பொள்ளாச்சி பக்கத்துல இருக்குற நம்ம “சின்னவீராம்பட்டி” கிராமத்துக்கு போகலாம்”…..என்றார் .
“அங்க எதுக்குபா?”
“இடமாற்றம்……மனமாற்றம்” என்று சொன்னார்.
மறுநாள் அனைவரும் கிராமத்துக்கு சென்றனர்….
இயற்கையான சூழலில்….. இடைவிடாது மூவரும்……தோட்டத்தில் இருப்பவர்களும் கனிவுடனும் கவனமுடனும் திவ்யாவை கவனித்து வர…..சில மாதங்களில் மெல்ல மெல்ல திவ்வியாவின் கண் இமைகள் அசையத் தொடங்கின…..கைகள் கால்கள் அசைந்தன…..உதடுகள் துடித்தன …நாட்கள் செல்ல செல்ல உணர்வுகள் அதிகரித்து …கண்ணின் கருவிழிகள் இங்கும் அங்கும் பார்க்கத் தொடங்கின ….அருகில் குழந்தை அழும் சத்தம் கேட்கும்போதெல்லாம் காது மடல்கள் சிலிர்த்தன.
ஒரு நாள்….
அருண் திவ்வியாவை சக்கர நாற்காலியில் அமர வைத்து வீட்டினுள் சுற்றிவரும் பொது…..சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஓவியத்தின் மீது திவ்யாவின் பார்வை கூர்மையானது…..கண்களில் நீர் கசிந்தது ….அந்த ஓவியத்தில் இருப்பது வேறு யாருமல்ல…..திவ்யாவும் அருணும் தான்.
திவ்யாவின் வீட்டில்…. இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்…..ஆறுமுகமே திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தார்…..திவ்யாவின் குடும்பத்தினர் யாரும் வராத பொழுது….திருமணத்திற்கு முன் நடைபெறும் புகைப்பட படப்பிடிப்பு காட்சி அது……அருண்…..திவ்யாவை குளத்து நீரில் இறங்க அழைப்பது போலவும்…..திவ்யா வெட்கமும் பயமும் கலந்து காலை நீரில் வைப்பது போலவும் ஒரு காட்சி ….இந்த புகைப்படத்தை…தன் தங்கை “ஓவியா”வுக்கு அனுப்பி வைத்தாள் திவ்யா…..ஓவியா வரைந்தது திருமணப் பரிசாக…. யாருக்கும் தெரியாமல் அனுப்பிவைத்த ஓவியமது….
இதையெல்லாம் கவனித்த ஆறுமுகம்…..அருணிடம் திவ்வியாவின் பெற்றோர்களின் அலைபேசி எண்களை வாங்கி…..சுமார் இரண்டு மணிநேரம் பேசினார் ….என்ன பேசினார் என்று தெரியவில்லை ….அடுத்த நாள் காலையில் அனைவரும் வந்து சேர்த்தனர்.
திவ்யாவைப் பார்த்து அனைவரும் கண்ணீர் சிந்தி அழுதனர் …திவ்யாவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது…..ஆறுமுகம் மட்டும் புன்முறுவல் பூத்து நின்றார்.
அவருக்கு தெரியும் அன்பு ஒன்றுதான் அமிர்தமான மருந்தென்று ….அவருள் மிகப்பெரிய நம்பிக்கை…..திவ்யா வெகு விரைவில் “மீட்சி” அடைவாள் என்று.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings