in ,

மார்க்கு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பரிட்சை ஆரம்பமாகிவிட்டது. சுந்தர் முழுமூச்சாக படித்துக் கொண்டிருந்தான்.

அவனது அம்மா அஞ்சலை ஏற்கனவே சொல்லியிருக்கிறாள், ‘பாருடா… பத்மினியும் உன்கூடத்தான் படிக்கிறா. போன பரிட்சைல அவ தொன்னூறு பர்ஸன்ட் வாங்கியிருக்கா… நீ எண்பத்தெட்டுதான் வாங்கியிருக்கே… நீ அடுத்த பரிட்சைல அவ மார்க்கை முந்தனும்… ஞாபகம் வச்சுக்க…‘ என்று.

அவன் படிக்கும் அதே பள்ளியில்தான் அவளும் படிக்கிறாள். இருவருமே ஒரே க்ரூப்தான் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இருவரும் வெவ்வேறு செக்ஷன்கள். அவள் A செக்ஷன், இவன் C செக்ஷன்.

அவள் கொஞ்சம் நன்றாகவே படிப்பவள். ஒவ்வொரு தடவையும் இவனது அம்மா அவளை பாராட்டித்தான் பேசுவாள். ஆனாலும் சுந்தரை மட்டமாக பேசமாட்டாள்.  காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சல்லவா.

அவளது அப்பா காலேஜ் புரபொஷர், அம்மா ஹைஸ்கூல் டீச்சர், அதனால் படிப்பு வருகிறது என்று காரணம் சொல்லுவான் சுந்தர். ஆனாலும் இந்தத் தடவை அஞ்சலை சொல்லி விட்டாள், ‘எது எப்படியோ… நீ இந்தத் தடவை அவ மார்க்கை முந்தனும்… சொல்லிப்புட்டேன்…‘ என்று.

மும்முரமாகப் படிக்க ஆரம்பித்துவிட்டான் சுந்தர். முன்னைப் போல விளையாடவெல்லாம் போவதே இல்லை. வீட்டிலும் கூட, டீ.வி.பக்கம் வருவதுமில்லை. போனைத் தொடுவதுமில்லை. லேட்டாகத் தூங்கபோவான்.  அலாரம் வைத்து சீக்கிரம் எழுந்து கொள்வான்.

பரீட்சை ஆரம்பமானது.  காலையிலும் மாலையிலும் பாடங்களை எழுதி எழுதி பார்ப்பான். முக்கியமான கேள்விகள் என்று ஆசிரியர் குறித்துக் கொடுத்தவைகளை மட்டுமின்றி மற்ற கேள்விகளையும் பார்த்து படித்துக் கொள்வான்.

ஒவ்வொரு நாளும் பரிட்சை எழுதிவிட்டு வந்து, ‘அம்மா… எல்லா கேள்விக்குமே பதில் எழுதிட்டேன்மா… ஆனாலும் எவ்ளோ மார்க் போடுவாங்கன்னு தெரியலை… ‘ என்று புலம்புவான்.

‘எழுதியதைப் பத்தி கவலைப் படாதே… அடுத்தப் பரிட்சைக்கு படி… அதுதான் முக்கியம்… ‘ என்று ஊக்கம் கொடுப்பாள் அஞ்சலை.

ஒருவழியாக எல்லா பரிட்சைகளும் முடிந்தன. இதுவரை, தான் போட்டிப் போட்டுக்கொண்டு படித்ததைப் பற்றி பத்மினியிடம் அவன் ஒரு வார்த்தைக் கூட சொன்னதில்லை. சொன்னால் அவளும் அதேமாதிரி படித்து அவனை முந்த விட மாட்டாளே. அவனது அம்மாவும் சொல்லியிருக்க மாட்டாள் என்றே நம்பினான்.

பரிட்சை முடிய இரண்டு நாள் முன்னதாக, அம்மா சொல்லியிருந்தாள், ‘நீ ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தீயல்ல… கியர் வச்ச சைக்கிள் வேணுமின்னு, அவ மார்க்கை முந்திட்டா உனக்கு ஆறு கியர் வச்ச சைக்கிள் வாங்கித் தர்றேண்டா… ‘ என்று.

அவன் ரொம்பவும் குஷியாகிப் போய், இன்னும் நன்றாகத்தான் படித்தான், பரிட்சையும் எழுதினான். ஆனாலும் ‘நமது பேப்பர் யாருடை கையில் சிக்குகிறதோ, அவர்கள் மார்க்கு போடும்போது என்ன மனநிலையில் இருப்பார்களோ, என்ன மார்க்கு போடுவார்களோ… நாம் பத்மினியை முந்திவிடுவோமா… ‘ என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்தான்.

புதன்கிழமை ரிஸல்ட் தெரிந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள். அம்மாவும் மகனும் பதட்டத்துடன் காத்திருந்தனர்.

புதன் கிழமை மகனுக்காக் காத்திருந்தாள் அம்மா.  வீட்டுக்குள் வரும்போதே பரவசத்துடன், ‘அம்மா… நான்தான் கிளாஸ்லயே பர்ஸ்ட் ரேங்க்… ‘ என்று துள்ளியபடி வந்தான்.  அஞ்சலையும் பரவசமானாள்.

அதே நேரம் கையில் ஒரு தட்டுடன் அவனை இடித்துக்கொண்டு உள்ளே புயலாய் நுழைந்தாள் பத்மினி.

‘ஆண்ட்டி… எங்க செக்ஷன்ல இதுவரை நான் செகண்ட் ரேங்க்தானே எடுத்துக்கிட்டிருந்தேன்.  இந்தத் தடவை நான்தான் பர்ஸ்ட் ரேங்க்… உடனே எங்கப்பா எனக்கு பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்துட்டார்… ‘ என்றபடி சாக்லேட் டப்பாவை நீட்டினாள். இடது கையில் இருந்த பேனாவையும் அவளிடம் நீட்டினாள்.

‘வாழ்த்துக்கள்… ‘ என்றபடி சாக்லேட்டை எடுத்துக் கொண்ட  அஞ்சலை, பேனாவையும் வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, ‘நல்லாருக்கும்மா… அசத்தும்மா… ‘ என்றாள்.

இப்போது அஞ்சலைக்கு உள்ளுக்குள் ஒரு பயம். ஏற்கனவே சுந்தரிடம் அவளை முந்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள் அவள். அவனும் மார்க் சீட்டுடன் வந்துவிட்டான். இன்னும் அவன் மார்க் பற்றி சொல்ல ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இவள் முந்திக்கொண்டு வந்துவிட்டாள்.

இவளை முதலில் கேட்டுவிடுவோம்… என்று நினைத்தபடி, ‘ பர்ஸ்ட் கிளாஸ் சரிமா…என்ன பர்சன்டேஜ்… ‘ என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன், பதட்டத்துடன். சுந்தருக்கும் படபடப்பு இருக்கத்தான் செய்தது, எங்கே அவள் தனது மார்க்கை விட கூடச் சொல்வாளோ… ‘  என்று.

அவள் சொன்னாள், ‘ ஆண்ட்டி… போனதடவையை விட ரெண்டு பர்சன்ட் கூட… ஐ மீன்… தொண்ணூத்து ரெண்டு பர்ஸன்டேஜ்… ‘ என்றாள்.

மறுநாளே சுந்தருக்கு ஆறு கியர் வைத்த சைக்கிள் வந்து சேர்ந்தது.

அவனது மார்க் எவ்வளவு என்றா கேட்டீர்கள். வேறென்ன, தொன்னூற்று மூன்று பர்ஸன்ட்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 14) – முகில் தினகரன், கோவை

    இது தான் வாழ்க்கை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்