2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அப்பானு கத்திண்டே மீனு வீட்டுக்குள்ளே நுழைஞ்சா.
“என் செல்லக்குட்டி வந்துட்டயா, பரிட்சை வருதே ஹாஸ்டல்ல இருந்து படிக்கக் கூடாதோ”
“ போப்பா எனக்கு திடீர்னு ஆசை அம்மா கையால அடை கரகரனு நெய் ஊத்தி, தொட்டுக்க அவியல் வேணும்”
பத்மினி புடவை முந்தானைல கையை துடைச்சிண்டே வெளியே வந்தா. “ போங்கோ காய்கறி வாங்கிண்டு வாங்கோ, அடைக்கு அரைக்கறேன்.சரியான தீனிப் பண்டாரத்தை பெத்து வச்சிருக்கேனே”
“போம்மா உங்களையெல்லாம் பாக்கணும்னுதான் வந்தேன் , என் பத்து செல்லம்.”
ராத்திரி பூரா தம்பியோட கொட்டம், அம்மா, அப்பாவுக்கு நடுவுல படுத்துண்டு காலேஜ் கதையெல்லாம் பேசிண்டே எப்ப தூங்கினா தெரியாது.
எழுந்திருக்கறப்ப அப்பா ஹால்ல டி.வீ. பாத்திண்டிருக்கார்.முதல்ல இன்றைய ஜோசியம் முடிஞ்சவுடனே நியூஸ்.பிரஷ்ல பேஸ்ட் போட்டுண்டே,” அப்பா தனுசு ராசிக்கு என்ன சொல்றார் கேட்டு வைங்கனு” கத்திண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தாள் ஹால்ல இருந்து அப்பா கத்தறார்,”ஏய் மீனு சீக்கிரம் வா”
“ என்னப்பா என்ன ஆச்சு”
“ உங்க காலேஜ் நியூஸ்ல காட்டறான் பாரு”
டி.வி.ல செய்தி வாசிக்கும் மிருணாளினி,
” கல்லூரியை உலுக்கிய செய்தி, கல்லூரி விடுதியில் மின்சார விசிறியில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவர். உயிரை மாய்த்துக் கொண்ட 22 வயது இளைஞர். பூந்தமல்லி சரகம் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் மேற் கொண்டு இளைஞனின் முடிவை குறித்து புலன் விசாரிக்கிறார்”
மீனலோசனிக்கு பேச வரவில்லை, இதுல என் தப்பு எங்கே இருக்கு, கபாலீஷ்வரா என் தப்பு இருந்தா என்னையும் தண்டிச்சிடுனு கோபுரத்தை பாத்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings