2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘வீடேங்கும் சாரை சாரையாய் எறும்புகள் போரெடுத்து நின்றாலும் வீட்டில் சிறிதளவு சக்கரைக்கூட இல்லை, அப்புறம் எப்படி இவ்வளவு எறும்பு வந்துச்சு’ ஒன்று புரியாது போல தலையைச் சொரிந்தால் சுமதி…!
‘இது எங்கிருந்து வருது’ன்னு பார்ப்போம். என்று மெதுமெதுவாக நடந்து எறும்பின் வரிசைகளின் பின்னால் சென்று பார்த்தால், பக்க வீட்டிலிருந்து போட்ட குப்பை ஒன்றில் மீதமிருந்த வெள்ளத்தின் துகள் கட்டிகள் சில சிந்தி கிடந்தது….!
‘ஓகோ இதிலிருந்து தான் வருதா அந்த எறும்புகள்’ என்று அந்த குப்பைகளை முறைக்கும் பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள்….!
தெருமுனையில் “சுமதி சுமதி” என்ற ஒரு சத்தம் கேட்டதும் விழுந்தடித்து கொண்டு ஓடினால் சுமதி..!
“என்ன பாக்யா அக்கா?” என்றாள்….!
“வேலைக்கு கிளம்பிட்டையா?”
“இல்ல இனிமேல் தான் கிளம்பி வரனுங்கா”
“உனக்கு இதே பொழப்பா போச்சு”
“இல்ல அது வந்து” என்று சொல்லிக் கொண்டு சுமதி தொண்டையில் எச்சில் முழுங்கி முழுங்கி கைகளில் சீலையை கசக்கி கசக்கி ஏதும் பேச்சால் திகைத்து திகைத்துப் பார்த்தாள் பாக்யாவை. பாக்யா கடுமையான வார்த்தைகளை வாரி தூத்தினாள்.
“சரி சரி சீக்கரம் கிளம்பி வா வேலைக்கு போகலாம்” என்றாள் பாக்யா.
“அக்கா அது வந்து என்னானக்கா, என் மகனுக்கு ஒரே காய்ச்சலா இருக்குக்கா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிட்டு வரேன் அக்கா”
சற்று நேரம் யோசித்தாள் பாக்யா “அந்த மேஸ்திரி வேற நாய் மாதிரி வல்லுன்னு விழுவான் யார் சொன்னாலும் கேட்க மாட்டான். சரி போ பார்த்துக்கலாம். நீயே புருஷன் இல்லாமல் ஒரு வேளை சோத்து இவ்வளவு கஷ்டப்படுற இதுலா உன் மகனுக்கு வேற அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடுது. இதுலா வேற படிக்க வைச்சு என்ன பண்ண போற அவனை வேலைக்கு கூட்டி வரலமுலா.
நெற்றி புருவத்தினை உயர்த்தி “அக்கா அப்படி மட்டும் சொல்லாதீங்க நான் படிக்காத அதனால தான் இவ்வளவு கஷ்டப்படுறேன் அவனது நல்லபடியாக படிக்கட்டும். என் உடம்புலா உயிர் இருக்குற வரைக்கும் என் மகனை நல்லபடியாக வைப்பேன் அக்கா”
“மகனை ஏதாச்சும் சொன்ன உனக்கு கோபம் போத்துக்கிட்டு வந்துரும் சரி சுமதி நீ ஆஸ்பத்திரிக்கு போ. நான் வேலைக்கு போரேன் நேரம் ஆச்சு”
வீட்டிற்கு வந்த சுமதி “டேய் கண்ணா எந்திரி ஆஸ்பத்திரிக்கு போவோம்”
“அம்மா நான் வரல” என கூறி கிழிந்த அந்த கோரை பாய்களுக்கு நடுவே இணை பாலமாய் உருண்டு ஒரே அடியாக அழுதுக் கொண்டிருந்தான் கண்ணன்.
“இப்ப நீ மட்டும் வரல?” என்று கண்டிப்புடன் அவனை முறைத்து பார்த்தாள் சுமதி.
வாய் ஏதும் பேசாமல் அம்மாவின் முந்தானையை கைகளில் பிடித்து நடந்தான். சாலையில் வலதுபுறம் செல்லவதற்காக இடது கைகளை நீட்டிக் கொண்டே வலது கையில் தன் மகனைப் பிடித்து நடந்தாள் சுமதி.
“அம்மா சீக்கிரமாக டாக்டரா பார்த்து போகனும்மா ஏன்னா இன்னைக்கு என் பள்ளியிலா பொங்கல் விழா கொண்டடுறாங்கம்மா. பள்ளியில் மணி அடிப்பதற்கு முன்னால் நான் பள்ளிக்கு போக வேண்டும்மா”
“அப்படியா கண்ணனா? சரி சரி வா” வேக வேகமாக நடந்து ஆஸ்பத்திரிக்கு சென்றனர். சுமதியும், கண்ணனும் நுழைவாயில் டேக்கானை பெற்று 24 வது அறைக்கு வெளியில் அமர்ந்தனர்.
கூட்ட அலை மோதியது பிறகு இவரும் அனைவரும் மாஸ் அணிந்து இருப்பதை கண்டு இவர்களும் தங்கள் மாஸ்கை அணிந்தனர். எதிரில் இருந்த வாசகம் ஒன்றில் “தனிமனித இடைவெளி அவசியமான ஒன்று” என்று இருந்தது.
பிறகு டாக்டரிடம் கண்ணனைக் காட்டினால் அவரும் “காய்ச்சலுக்கு ஊசி போட்டால் நல்லதும்மா இல்லேன்னா மாத்திரை மட்டும் தரட்டும்மா?” என கேட்டார்.
அதற்கு சுமதி “ஊசி போடுங்க டாக்டர் விட்டுவிட்டு காய்ச்சல் வந்துக்கிட்டே தான் இருக்கு இவனுக்கு”
பள்ளியில் ஏதேனும் தவறு செய்தால் பிரம்பை ஆசிரியர் கைகளில் கண்டதும் பதுங்கி பதுங்கி ஓடி ஒளிவது போல திருதிருவென முழித்துக் கொண்டு அம்மாவின் கைகளை எடுத்து விட்டு ஓட தொடங்கினான்.
இழுத்து பிடித்த சுமதி “போடுங்க டாக்டர் ஊசியை” என்று சொல்ல, இடுப்பில் இரண்டு புறமும் சுருக் சுருக் என்ற வலியுடன் ஒரு கையினால் இடுப்பை தேய்த்துக் கொண்டும் மற்றொரு கையால் கண்ணீரை துடைத்து கொண்டும் வெளியில் வந்தான்
சுமதி “மாத்திரை வாங்கிட்டு போயிட்டு வரேன் டாக்டர்” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டு வீட்டுக்கு திரும்பினர்.
சுமதியும், கண்ணனும் வீட்டிற்கு வந்தனர். உடனே அடுப்பங்கரைக்கு சென்ற சுமதி நேற்று மீதமிருந்த பழையச்சோற்றை கண்ணனுக்கு சூடுச் செய்து கொடுத்தாள் சுமதி.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும். கண்ணன் தனது மஞ்சப்பை எடுத்துக் கொண்டு பள்ளிக்கும், சுமதி கையில் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வேலைக்கும் புறப்பட்டனர். கண்ணன் வழியெங்கும் முயல் போல தாவி தாவிக் குதித்து கொண்டே பள்ளிக்கு சென்றான்.
எங்கு பார்த்தாலும் தோரணங்களும், வண்ணக்கோலங்களும், பள்ளியில் அங்காங்கே மாணவர்களும், மாணவிகளும் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிக்கு தயராகிக் கொண்டிருந்தனர். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
அதன் வழியாக வந்த கண்ணனின் நண்பன் சோமு “வா கண்ணா இப்ப தான் வீட்டுலிருந்து வந்தாயா? வா நம் போய் விளையாடுவோம்” என அழைத்தான் சோமு.
பிறகு கண்ணனின் கைகளைப் பிடித்து இழுத்தான் சோமு மகிழ்ச்சியில் கால்கள் துள்ளிக்குதித்து மானைப் போன்று ஓடினாலும் உடல் என்னவோ சற்று தொய்வாக இருந்தது கண்ணனுக்கு.
“டேய் இன்னைக்கு மதியம் என்ன சோறுன்னு தெரியுமா கண்ணா?”
“என்ன சோறுடா சோமு”
“முந்திரி, கிஸ்மிஸ், சக்கரையெல்லாம் போட்ட பொங்கல் சோறு கண்ணா. அது மட்டுமா கரும்பு, சக்லேட் எல்லாம் தருவாங்க கண்ணா”
“அப்படியா?” மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான் கண்ணன்.
அவன் சோமுவிடம் “வருடம் ஒருமுறை தான் நான் இது போன்று சாப்பிடுவேன். என் அம்மா பாவம் நான் பிறந்ததிலிருந்து ஒருமுறைக் கூட இந்த மாதிரி பொங்கலா சாப்பிட்டதா நான் பார்த்தே இல்ல. இந்த முறையாவது எங்கள் அம்மாவுக்கு இந்த பொங்கலை கொண்டு போய் கொடுக்கனுடா சோமு” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தான் கண்ணன்.
பிறகு பள்ளியில் பொங்கல் வைத்தும் “அனைவரும் சாமி கும்பிட வாருங்கள்” என மெல்லிய குரலில் அழைத்தனர் தலைமையசிரியர் அனைவரும் வரிசையாக நின்று சாமிக் கும்பிட்டனர். கண்ணனும் ஒரு வரிசையில் ஓரமாக நின்று கும்பிட்டான்.
பிறகு அனைவரும் பொங்கல் வாங்க வரிசையாக வாருங்கள் என அழைத்தார். சத்துணவு வழங்கும் கமலா பாட்டி. ஒரே வரிசையாக நின்று பொங்கலை ஒவ்வொரு மாணவர்களும் வழங்கினார்.
கமலா பாட்டியை பார்த்தும் கண்ணன் எப்போதும் தனக்கேயுரிய ஒரு கிழிந்த சேலையைத் தவிர்த்து வேறு எதையும் காட்டாது கமலா பாட்டியா இது? புது சேலையில் நல்ல எங்க வீட்டு அருகே இருக்கும் வாத்தியாரின் அம்மாவை போல மிடுக்காக இருக்கு கமலா பாட்டி. கண்ணன் அதை வேடிக்கை பார்த்த படியே வரிசையில் நின்றிருந்தான்.
பிறகு கண்ணுக்கும் பொங்கல், கரும்பு, இனிப்பு, சாக்லேட் கிடைத்தது. அதில் பாதியை எடுத்து அவன் அம்மாவிற்கு ஒரு பனையோலையில் சுருட்டி வைத்து விட்டு மீதமுள்ள பொங்கலை அறுசுவை உணவில் அமிழ்தமாய் கிடைத்த பொங்கலை மெதுவாக எடுத்து வாயில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான். அது தொண்டைக் குழியில் அல்வாவை போல வழுக்கிக்கொண்டு போனது.
பொங்கலை ரசித்து ருசித்து சாப்பிட்டான். நான்கு வாயிற்கு மேல் இல்லை பொங்கல். மீதம் ஒட்டிருக்கும் பொங்கலை கைகளில் சுரண்டி பின்பு விரல்களில் ஒட்டிருந்தை சப்பி சப்பி சாப்பிட்டான்.
என்ன பள்ளியில் ஒரு ஓரத்தில் காக்காவுக்கு வைத்த பொங்கலை ஒரு காக்கா சாப்பிட்டு பசி தீர்ந்ததும் அடுத்தடுத்து காக்காக்களுக்கு தூது விட்டது. ஆனால் கண்ணனோ அதைப் பார்த்துக்கொண்டே நின்றுக் கொண்டிருந்தான். அவனது வயிறோ கட முட என்று பசியால் அவனுக்கு தூது விட்டது.
பசி ஒருபுறம் இருந்தாலும் எப்படா மணியை அடிப்பாங்க என்ற யோசனை தலைக்கு மேல் ஓடியது அவனுக்கு. பிறகு ஆடலும்,பாடலும் நிகழ்ச்சி இனிதே ஆரம்பம் ஆச்சு.
பள்ளி மேடையில் ஒருவர் பின்னால் ஒருவராக நின்று சாமி பாட்டிற்கு ஆட அனைவரும் ஆராவாரத்துடன் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினார். ஆனால் முதல் இரண்டு பாட்டிற்கு தன்னையே மறந்து கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்தாலும் மனதிற்குள் எப்போதும் இந்த மணியை எப்ப அடிப்பாங்க என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
அடுத்தப்படியாக பொங்கலுக்கான கவிதையை ஒரு அண்ணன் வாசித்தார். பிறகு ஒரு அக்கா பாரத நாட்டியம் ஆடினால் இப்படி வரிசையாக ஒவ்வொரு நிகழ்வும் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது.
கண்ணனுக்கோ “இந்த மணியை சீக்கிரமாக அடிச்ச என்ன?” என்று சோமுவிடம் புலம்பி தவித்தான்.
“என்னாச்சு கண்ணனா விழா சிறப்பாக தானா இருக்கு அற்புதம் என்ன கண்ணா”
“இல்லாடா சோமு எனக்கு காய்ச்சல் வர மாதிரி இருக்குடா அதான்டா”
“அப்படியா கண்ணா இன்னும் கொஞ்ச நேரத்தில் விட்டு வாங்கடா. கவலைப்படாத கண்ணா”
“சரி சரி”
“வாடா இன்னைக்கு தான் நம்ம சந்தோஷமாக இருக்க முடியும். பொங்கல் முடிந்ததும். அதா படி இதா படி சொல்லி நம்மலா கொன்னு எப்பாங்கடா கண்ணா”
“ஆமாம்டா சோமு. வாடா கைகளைத் தட்டி பாட்டை ரசிப்போம்”
“சரிடா” மேடையை நோக்கி ஒரே சத்தமாக இருந்தது
ஆசிரியர் “அமைதியா உட்கார்ந்து நிகழ்ச்சியை பாருங்கள்” என்று அனைவருக்கும் கட்டளை இட்டார். பிறகு அமைதியாக அனைவரும் நிகழ்ச்சியை ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
மேடையில் இருந்து மைக்கில் “இன்னும் சிறிது நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைய போகிறது மாணவர்களே” கம்பீரமான குரலில் தெரிவித்தார் எங்கள் தமிழ் வாத்தியார்.
கண்ணனின் கரவொலியோடு அவனது நண்பர்களின் கரவொலியும் கூடிய அடுத்தாக இறுதி பாடலும் ஒலித்தது. பிறகு அனைவரையும் பார்த்து தனக்குரிய மென்மையான குரலில் தலைமையாசிரியர் “அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மாணவ, மாணவிகளே” என்றார். மாணவர்களும் மாணவிகளும் பதிலுக்கு ஆசிரியருக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒலித்தது மணியோசை கண்ணனும் அனைவரின் தலைகளில் ஒரு தலையாய முண்டியடித்து பள்ளியின் நுழைவாயிலுக்கு வெளியில் சென்றான்.
ஆற்று வெள்ளம் போல் ஒரு ஓட்டமாக ஓடி தன் வீட்டை அடைந்தான். வீடு பூட்டியிருந்தது. வீட்டை திறந்து மஞ்சப்பை வைத்து விட்டு பிறகு அம்மா வேலை செய்யும் இடத்திற்கே போனான்.
மேஸ்திரி வழியில் கையைப் பிடித்து இழுத்தார்.
“யார்டா நீ?”
“நானா சுமதி மகன் கண்ணன். அப்படியா? இன்னும் அரைமணி நேரத்துலா வேலையை முடிச்சுட்டு வந்திடும் உங்கம்மா இங்கா உட்காரு.”
மணலையும் சிமெண்ட்டையும், ஜல்லியில் கலப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே அமைதியாக உட்கார்ந்து இருந்தேன் கண்ணன்.
“என்னா சார் இன்னும் எங்க ரல” என மேஸ்திரியிடம் கேட்டான்.
“இந்த கலவையெல்லாம் காலி ஆனா தான் வரும் உங்க அம்மா…!”
சுமதி பத்தாவது மடியிலிருந்து உடல் சோர்ந்து, கலைத்த குரலுடன் பாக்யாக்கு பதில் கூறிக்கொண்டே இறங்கி வந்தாள். கண்ணன் அவனது அம்மாவை கண்டதும் கட்டித் தழுவிக் கொண்டான்.
“என்னப்பா கண்ணா இங்க ஏன் வந்தா?”
“அம்மா நான் உனக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கிறேன் வாம்மா வீட்டுக்கு போவோம்” என்று கண்ணன் அனத்தினான்.
“இருடா சம்பளப் பணம் வாங்கிட்டு போவோம்” பிறகு பணத்தை பட்டுவாடா செய்தார் மேஸ்திரி. அம்மாவும், மகனும் பேசிக்கொண்டே வீட்டிற்கு நடந்தனர்.
அம்மாவின் கைகளை காற்றுக்கூட நுழைய முடியாதளவுக்கு கையை இறுக்கமாக பிடித்து நடந்தான் கண்ணன்.
வீட்டின் அருகில் வந்தது “அம்மா கண்ணா மூடும்மா உனக்கு நான் ஒன்னு கொண்டு வந்திருக்கிறேன். அது என்னன்னு கண்டுபிடி அம்மா”
அவளும் கண்களை மூடி அது என்னவாக இருக்கும் என்று யோசிக்க தொடங்கினாள். கண்ணன் மஞ்சைப்பைக்கு அருகில் சென்று பார்த்தான் அங்கு எறும்பு சாரை சாரை இருந்தது.
அதை எடுத்து தட்டி விட்டான் பிறகு சுமதி கண்ணை திறந்து பார்த்தால் கண்ணன் அழுது கொண்டிருந்தான்.
“என்னாச்சுடா எதற்கு அழுகிறா?”
“அம்மா பள்ளியில் குடுத்த பொங்கலையும் உனக்காக கொண்டு வந்தேன் அம்மா. இந்த பொங்கலா எறும்பு வந்திருச்சே” என அழுதான்.
“சரி அழுகா கண்ணா எறும்புக்கூட ஒரு சாமி தான் கண்ணா கோவில்களிலும், வீட்டிலும் சாமிக்கு படைக்கும் போது இது தான் முதலா சாப்பிடும் இது சாப்பிடா அந்த சார்வேஸ்வரனே சாப்பிட்டதற்கு சமம் கண்ணா.” என்று சொல்லி மீதிருக்கும் பொங்கலை வாயிட்டால் சுமதியின் வாயில் அந்த பொங்கல் அல்வாவை போல வழுக்கிக்கொண்டு தொண்டைக் குழிக்குள் சென்றது.
பிறகு கொஞ்சத்தை எடுத்து கண்ணனுக்கு ஊட்டினாள். வீட்டிற்கு அருகிலிருந்த கோவிலிருந்து அடித்தது மணியோசை. மலர்ந்தது கண்ணனின் முகம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
சிறந்தொரு கதை சகோ வாழ்த்துக்கள்