எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மகத்தான எண்ணம் மட்டுமே ‘கனியமுதன்’ மனத்தில் இருந்தது .மேல்நிலைப் பள்ளியை முடித்ததும் எழுதிய மருத்துவ நீட் தேர்வில் தேர்வு பெறவில்லை . வீட்டில் உள்ளவர்கள்…
“இன்னும் ஒரு வருடம், இரண்டு வருடம் ஆனாலும் பரவாயில்லை நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து முயற்சி செய்” என்றனர்.
ஆனால் கனியமுதனுக்கு அதில் உடன்பாடு இல்லை. நல்ல மதிப்பெண் இருந்ததால் பொறியியல் கல்லூரியல் சேர்கிறான் . மூன்று மாதங்கள் சென்றது… பாடங்களில் பிடிப்பு ஏற்படவில்லை . வகுப்பறையில் செலவிட்ட நேரங்களை விட நூலகத்தில் கழித்த நேரமே அதிகம்.
அப்படி ஒரு தருணத்தில் கிடைத்த ஒரு புத்தகம் தான் கனியமுதனை ஈர்த்தது . ஒரு வீர துறவி கம்பீரமாய்க் கைகட்டி நிற்பது கவர்ந்தது .அந்தப் புத்தகத்தை எடுத்தான் …படித்தான் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை . அப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரிகளும் உள்ளத்துடன் உரையாடியது .
“இந்தப் பூவுலகில் நாம் பிறந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது . அது மற்றவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு” என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது . இனி மக்களோடு மக்களாகக் கலந்து பணியாற்ற வேண்டும் என்ற ‘கவின்மிகு கனவு’ உதித்தது .
ஏற்கனவே பொறியியல் பாடங்கள் புரிபடவில்லை , இப்பொழுது புதுச்சிந்தனை புகுந்து உள்ளது . வீட்டில உள்ளவர்களிம் பேசினான் .நடுத்தரக் குடும்பம் ஆயினும் ….பொதுவனா பெற்றோர்களைப் போல, “எவ்வளவு பணம் காட்டியிருக்கோம் … இப்போ வந்து இப்படிச் சொன்னா எப்படி? அதெல்லாம் முடியாது… நீ இங்கதான் படிக்கணும்” என்று சொல்லவில்லை . மகனின் கனவிற்குப் பாதை அமைத்தனர் .
கலை அறிவியல் கல்லூரியில் சமூகப்பணி இளங்கலை (BSW_ Bachelor of Social Work) சேர்ந்து… அதே பாடப்பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்று வெளியே வருகிறார். நகரத்தில் சமூகப் பணியாற்றிப் நற்பெயரும் புகழும் பெற விரும்பவில்லை. மாறாக… ஊருக்கும் ஒதுக்குப்புறமாக தனியாக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போரினால் பாதிப்பட்டுப் புலம் பெயர்ந்த அகதிகள் முகாமிற்குச் சென்று தன் பணியைத் தொடங்குகிறார் .
அம்மக்கள் வேர்களின்றி வீசப்பட்டவர்கள். எப்படி விருத்தியாவார்கள்?. போர் சூழலில் சிக்கியவர்கள் மனதளவில் அச்ச உணர்வுகளுடன் காணப்பட்டனர் .அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவங்கள் உதவியுடன், அவர்களுக்கனா அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி உளநல ஆலோசனைகள் அளித்தார். கொஞ்சமும் கொஞ்சமாக அங்கே மாற்றங்கள் நிகழத் தொடங்கின .
வருமானம் இல்லாத சேவை தொழிலில் புகழும் விருதுகளும் வருகின்றன .அவர் அவற்றால் பெருமை கொள்ளவில்லை. சமூகமே இவரை ஒரு அலட்சியப் பார்வையால் பார்த்தாலும் அதனால் அவர் கவலை கொள்ளவில்லை . அவரின் கவின்மிகு கனவு மகிழ்வையே தந்தது.
ஒவ்வொரு நாள் பணிகளை முடித்து வீடு திரும்பியதும் மனநிறைவுடன் தூங்கினார்.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings