2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தன் வீட்டை நோக்கி காரை ஓட்டிக் கொண்டு வந்த ஸ்ரீதேவ் இருட்டான பகுதியில் யாரோ இரண்டு பேர் கை ஆட்டுவது போல இருந்தது.
யார் என்று தெரியவில்லையே என்னவென்று கேட்போம் என கீழே இறங்கிய ஸ்ரீதேவ், என்னப்பா வேணும்? உங்களுக்கு என்று கேட்க என்னுடைய பேத்திக்கு இடுப்பு வலி வந்து விட்டது அதனால் அவளை பிரசவத்திற்கு அழைத்துப் போக வேண்டும் அதற்காகத்தான் உங்களுடைய காரை நிறுத்தினேன் என்று சொன்னார் பெரியவர்.
அப்படியா, சரிங்க பா வீடு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று சொன்னார் ஸ்ரீதேவ்.
இந்த மரத்துக்கு அடியில தான் உட்கார வைத்திருக்கிறேன், என்னுடைய மருமகள் காவலுக்கு உட்கார்ந்து இருக்கிறாள் என்று கையை காட்டினார் பெரியவர்.
கையை காட்டிய திசையில் பெரியவரின் பேத்தி சுருண்டு போய் படுத்திருந்தாள். மனம் பதட்டம் அடைந்து காரை அருகே சென்று நிறுத்தி கையை பிடித்து மெதுவாக காரில் அமர வைத்தான் ஸ்ரீதேவ்.
கார் மருத்துவமனையை நோக்கி சென்றது. இந்த மருத்துவமனையில் செலவு செய்வதற்கு எங்களிடம் பைசா இல்லை, அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார் பெரியவர்.
தனியார் மருத்துவமனையில் இருந்த செவிலியர் ஓடோடி வந்து பிரசவத்தின் வழியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை கை தாங்கலாக காரில் இருந்து இறக்கி ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றார்கள்.
பெரியவர் காரில் இருந்து இறங்கி ஸ்ரீதேவ் அவர்களிடம் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை கழற்றி கொடுத்து என்னிடம் பணம் இல்லை. இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.
இது ஒரு சின்ன உதவிதான் என்று மறுத்தான் ஸ்ரீதேவ். இருந்தாலும் வலுக்கட்டாயமாக கையில் கடிகாரத்தை கொடுத்துவிட்டு சென்றார் பெரியவர்.
பிறகு மெதுவாக ஸ்ரீதேவ் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையில் உள்ள ரிசப்ஷன் இடத்திற்கு சென்றான். ஸ்ரீதேவை பார்த்த அனைவரும் ஓடி வந்து கை கொடுக்கவும் செல்பி எடுக்கவும் அந்த இடம் மிகவும் பிஸியாகிவிட்டது.
செவிலியர் பெரியவரிடம் குழந்தை பிறப்பதில் கொஞ்சம் சிக்கலாக இருக்கும், அதனால் அறுவை சிகிச்சை மூலமாகத்தான் குழந்தையை காப்பாற்ற முடியும். ரூபாய் ஐந்தாயிரம் ரிசப்ஷனில் கட்டி விட்டு வாருங்கள் என்று சொன்னர்.
பெரியவர் காரில் அழைத்து வந்த ஸ்ரீதேவை இவன் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறானே, 5000 பணத்துக்கு நான் எங்கே போக முடியும், கையில் கட்டி இருந்த கடிகாரத்தையும் கொடுத்து விட்டேனே என திட்டியவாறு ரிசப்ஷன் நோக்கி சென்றார் பெரியவர்.
ரிசப்ஷனில் ஒரே கும்பலாக இருப்பதை பார்த்து ஏதோ தகராறு என நினைத்துக் கொண்டு ஓரமாக நின்று கவனிக்க தொடங்கினார் பெரியவர்.
அப்போதுதான் நம்மளை அழைத்து வந்த டிரைவர் மாதிரி இருக்கிறதே என அருகில் இருந்தவரிடம் யார் அவர் என்று கேட்க, இவரை உங்களுக்கு தெரியாதா, இந்த மனிதனை தெரியாத ஆட்களே இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள் என்றார் அருகில் இருந்தவர்.
தெரியாம தானே கேட்கிறேன், அட சொல்லுப்பா என்று சொல்ல இவர் தான் பழைய நடிகர் ஸ்ரீராம் அவர்களின் பையன் ஸ்ரீதேவ். ஏகப்பட்ட படங்களில் நடித்து நிறைய அவார்டுகளை வாங்கி குவித்தவர். நம்முடைய தமிழ் மக்களுக்கு செல்லப்பிள்ளை என்று சொல்ல பெரியவருக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என தெரியாமல் மெதுவாக கும்பலில் நுழைந்து ஸ்ரீதேவ்ன் கையைப் பிடித்து உங்களை யார் என்று எனக்கு தெரியாது என்று சொன்னார் பெரியவர்.
அதனால் தான் உங்களுக்கு உதவி செய்ய முடிந்தது, என்றான் ஸ்ரீதேவ். உங்களுடைய பேத்திக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை கேட்டு சொல்ல சொல்லி இருக்கிறேன். நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே செவிலியர் பெரியவரிடம் ஓடிவந்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கிறான் என்றார்.
ஸ்ரீதேவ்வை அழைத்துக் கொண்டு குழந்தையை பார்க்க சென்றார் பெரியவர். குழந்தையை முதலில் வாங்கிய ஸ்ரீதேவ் மிகவும் சந்தோஷப்பட்டான். உடனே பெரியவர் உங்க வாயாலயே என் பேரக் குழந்தைக்கு உங்க பெயரை காதில் சொல்லுங்கள் என்று சொல்ல ஸ்ரீதேவ் ஸ்ரீதேவ் ஸ்ரீதேவ் என சொல்ல பெரியவர் மிக மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த கடிகாரம் பழைய கடிகாரம், நான் உங்களுக்கு வேற ஏதாவது வாங்கி தருகிறேன் என சொன்னார் பெரியவர்.
அது உங்கள் ஞாபகார்த்தமாக இந்த கடிகாரத்தையே நான் வைத்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீதேவ் சொல்லிக்கொண்டே தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பெரியவரின் கையில் கட்டி விட்டு சிறிது பணத்தையும் கையில் கொடுத்தான் ஸ்ரீதேவ். மறுக்க முடியாமல் மிகவும் சந்தோஷம் என பெரியவர் மகிழ்ச்சி அடைந்தார்.
சிறிது நேரம் இருந்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றான் ஶ்ரீதேவ்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings