2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அது அழகான ஒரு மலைப்பிரதேசம். அந்த மலையை சுத்தி சின்ன சின்ன செடி முதல் பெரிய பெரிய மரம் வரை படர்ந்து விரிந்து வளர்ந்து இருக்கு. அந்த மலைக்கு பின்னாடி ஒரு அழகான ஏரி ஒன்று உள்ளது.
அந்த மலைக்கு நடுவே சின்ன சின்ன படிக்கட்டுகள் போகுது. அந்தப் படிக்கட்டுகள் போகும் திசையை நோக்கி நம்ம நடந்து போனா, அந்த மலை உச்சில ஒரு கோவில் இருக்கு.
அது சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில். ஒரு மண்டபம் இல்லை, ஒரு கோபுரம் இல்லை, முன்னாடி கொடிமரமும் இல்லை. ஒரு பத்து அடி உயரத்தில் பெரிய அம்மன் சிலை மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிற்கு.
கடந்த 100 ஆண்டுகளாக தான் இந்த கோவில் இங்க இருக்கு. பல வருஷங்களுக்கு முன்னாடி இங்கு கோவிலுமில்லை,அங்க சாமியும் இல்லை.
இந்த மலைக்கோவிலுடைய மர்ம கதையை இப்ப தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பத்து முனிவர்கள் சேர்ந்து, சிவபெருமானை நோக்கி தவம் இருக்கலாம் என்று தீர்மானம் செய்து, ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்யணும் என்று பார்க்கும்பொழுது தான் இந்த மலை அவர்களின் கண்களுக்குப் பட்டது. யாரும் வராத மலை, யாருக்கும் தெரியாத மலை, அமைதியாய் இருக்கும் என்று சொல்லி இந்த மலையை சுத்தி பத்து முனிவர்கள் தவம் இருக்க ஆரம்பித்தனர்.
அந்த நேரத்துல தான் இரண்டு வாலிபர்கள் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணி, அந்த மலையின் மீது ஏறத் தொடங்கினர். இந்த இரண்டு பேரும் மலை உச்சியை அடைந்ததும், தங்களது பெயரை சத்தம் போட்டு கத்தினர். இவர்கள் போட்ட சத்தத்தினால், பத்து முனிவர்களுடைய தவம் களைந்தது.
கோபம் கொண்ட முனிவர்கள், “நீங்கள் இருவரும் மரமாக மாற கடவீர்கள்” என்று சாபம் அளித்தார். ஒன்றும் அறியாத இரண்டு வாலிபர்களும், “சுவாமி இது தெரியாமல் செய்த பிழை” ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறினர்.
மனம் இறங்கிய முனிவர்களோ, மரமாக உள்ள உங்கள் இருவரையும் பிளந்து கொண்டு எப்பொழுது, அன்னை பராசக்தி இங்கு சிலையாக தோன்றுகிறாளோ, அப்பொழுது உங்கள் சாபம் நிவர்த்தியாகும், என்று வரம் அளித்தார்.
கோடைகாலம் மாறி, மழைக்காலம் வந்தது, குளிர்காலம் வந்தது, ஆண்டுகள் பல ஆகின.
பள்ளிபாளையம் என்னும் ஊரில் காமாட்சி என்னும் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தை பேரு இல்லாமல் தவித்து வந்தாள். எனவே, ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலுக்கு வாரந்தோறும் செல்வாள். அம்பிகையின் மீது பாடல்கள் பாடி, விரதங்கள் இருந்து, புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தாள். ஆனால், அவள் கணவனோ சுவாமி சிலைகளை திருடிவிற்கும் கள்வன். அவன் பெயர் திருநாதன்.
அவன் ஒரு நாள், தன் வீட்டிற்கு அருகில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் உள்ள பஞ்சலோக சிலையை, திருடிக் கொண்டு தன் வீட்டில் பதுக்கி வைத்தான். இதை அறிந்த காமாட்சி எவ்வளவு சொல்லியும் அவன் ஏற்க மறுத்தான்.
தன்னைத் தேடி போலீஸ் வருவதை தெரிந்து கொண்ட அவன், பஞ்சலோக சிலையை எடுத்துக் கொண்டு, அந்த மலைபிரதேசத்திற்கு வந்தான். வேகமாக அந்த மலையின் மீது ஏறி ஓரிடத்தில் சிலையை பதுக்கி வைத்தான்.
தகவல் அறிந்த போலீஸ் மலையின் மீது ஏறி, சிலை எங்கே உள்ளது என்பதை ஆராய்ந்தார்கள். ஆனால், எங்கு தேடியும் சிலை கண்டுபிடிக்க முடியவில்லை.
காமாட்சியோ, ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலுக்கு சென்று, தன் கணவனுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று, மனம் உருகி வழிபட்டு அழுது கொண்டிருக்கிறார். அவள் வேண்டுதலோ என்னவோ தெரியவில்லை, பதுக்கி வைத்த சிலை கண்டுபிடிக்கவே முடியவில்லை. திருநாதனோ, தான் திருடவில்லை என்று போலீஸ்காரர்களிடம் சொல்கிறான்.
அவனுக்கு எதிராக அங்கு எந்த சாட்சியமும் இல்லாத காரணத்தினால், போலீஸ்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.
போலீஸ்காரர்கள் சென்று சில நேரம் கழித்து, சிலையை பதுக்கி வைத்த இடத்திற்கு போனான் திருநாதன்.
ஆனால் அங்கு பஞ்சலோக சிலை காணவில்லை. அவன் இரண்டு மரங்களுக்கு நடுவே சிலையை மறைத்து வைத்துவிட்டு போனான். ஆனால், இப்போது இரண்டு மரங்களும் பிளந்து கிடைக்கின்றன.
பயந்து போன திருநாதன் அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்கு சென்றான். ஆனால், இந்த நிலையில் தன் கணவருக்கு என்ன ஆயிற்று! என்று பயந்து போய் இந்த மலைக்கு ஓடி வருகிறாள் காமாட்சி.
மலையில் சுற்றும் முற்றும் தேடிப் பார்க்கிறாள். எங்கு தேடியும் தன் கணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தான் வணங்கும் அம்பிகையை மனம் உருகி வேண்டினாள்.
இந்த நிலையில், அவளுக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், அங்கு பயங்கர பசியோடு காட்டு புலி ஒன்று உறுமிக் கொண்டிருந்தது. அதை பார்த்து பயந்து வேகமாக ஓடினாள் காமாட்சி.
“ஓம் சக்தி தாயே என்னை காப்பாத்து” அப்படின்னு கத்திகிட்டே ஓடினாள்.
அந்த நேரத்தில் கிழக்கு திசையில் இருந்து அம்பு ஒன்று வேகமாக வந்து அந்த புலி மீதுபட்டது. அந்த புலி இறந்து விட்டது.
கிழக்கு திசையில் யாரோ இருக்கின்றார்கள், அவர்கள்தான் தன்னை காப்பாற்றினார்கள் என்று நினைத்த காமாட்சி, கிழக்கு திசை நோக்கி நடந்தாள். அங்கு 2 மரங்கள் பிளக்கப்பட்ட நிலையில், அந்த இரண்டு மரங்களுக்கு நடுவில் பஞ்சலோக சிலை இருந்தது.
காமாட்சிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. தன்னை, தான் வழிபட்ட தெய்வமே காப்பாற்றி விட்டது, என்று நினைத்து தன் கணவன் திருடிக் கொண்டு வந்த, இந்த பஞ்சலோக சிலையை எடுத்துக்கொண்டு, தன் ஊரில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் ஒப்படைத்தாள்.
தன் தவறினை உணர்ந்த திருநாதன், தான் செய்த பாவம் தீர, 10 அடியில் ஒரு பெரிய மாரியம்மன் சிலையை, அந்த மலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்தான்.
திரு நாதனும், அவன் மனைவி காமாட்சியும் வாரந்தோறும் இந்த மலைக் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings