in ,

மது ஒழிப்பு (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மதுரை  மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில், அதிகாலை , இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி,

 “ ஏன் சுந்தரம் ? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க ?“ என்று மீனாட்சி கேட்டாள். ,

“ மது ஒழிப்பு. அரசுக்கு எதிரா போராட்டம்.மதுவை ஒழிக்க சொல்லி மாபெரும் போராட்டம் நடத்தியது எதிர்கட்சி “ என்று சுந்தரம் கூறினான்.

“ மது ஒழிப்பு போராட்டம்னு சொல்ற , இங்க பார்த்தா ஒரு லோடு சரக்கு பாட்டில் கிடக்கு. இத சுத்தம் செய்யவே நேரமாகும் போல !” என்றாள் மீனாட்சி.

 “ மது ஒழிப்பு போராட்டம் தான் , அதான் மதுவ வாங்கி ஒழிச்சிருக்காங்க. போராட்டத்தில் கலந்திருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும் யாருக்கும் தெரியாம கொடுத்திருக்காங்க. கூட்டம் கூடிருச்சு.” என்று சுந்தரம் கூறினான். 

“சிரிப்பு தான் வருது.பேரு மது ஒழிப்பு மாநாடு , மது குடிக்காத ஆளே இல்லை “ என்று மீனாட்சி நக்கலாக கூறினாள்.

 “ இந்த மது ஒழிப்பு போராட்டம் நடந்ததால, அக்கம் பக்கத்தில் இருக்கும் அரசு டாஸ்மாக்ல நேற்று 10 லட்சத்திற்கு மேல சரக்கு வித்திருக்கு. “ என்று சுந்தரம் புள்ளி விவர கணக்கிட்டான்.

 “ என்னப்பா ! சொல்ற சுந்தரம்.10 லட்சத்திற்கு மேல சரக்கு விற்பனையா ? “ என்று மீனாட்சி கேட்க ,

 “ஆமா மீனாட்சி. ஒவ்வொரு முறையும் அரசை எதிர்த்து போராட்டம் பண்றதால மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகுமா !. தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு இல்லை.நாம ஒவ்வொருவரும் நமக்குள்ள சுய ஒழுக்க போராட்டம் நடத்தனும் , இல்லை கடைபிடிக்கணும். “ என்று சுந்தரம் கூற ,

 “ நீ சொல்றது சரிதான். ஆனா அரசாங்கம் அத விற்பனை பண்றதால தான , வாங்கி குடிக்கிறாங்க. “ மீனாட்சி கூறினாள்.

 “ நீ சொல்றது சரிதான் மீனாட்சி. விக்கிறாங்க என்பதால தான் குடிக்கிறாங்களா, நம் மது பிரியர்கள் ?. “ சுந்தரம் கேள்வி கேட்க ,

 “ ஆமா. அத விக்காம இருந்தா எப்டி குடிப்பாங்க ? அதற்க்கு தான இப்படி ஒவ்வொரு அரசும் மாறி மாறி வரும் போது மது ஒழிப்பு போராட்டம் பண்றாங்க “ என்று மீனாட்சி கூறினாள்.

 “ எதிர் கட்சி போராட்டம் என்பது அரசியல். எதிர் கட்சிகள் மாறி மாறி வரும் போது இந்த போராட்டம்  தொடரதான் செய்யும். அரசியலுக்குள் போக வேண்டாம். நான் சொல்றது தனி மனிதனின் சுய ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு “ என்று உறுதியாக சுந்தரம் பேச்சை தொடர்ந்தான்.

 “ அரசை குறை சொல்வதை தவிர்த்து , நாம் ஒவ்வொருவரும் குடிக்க கூடாது என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கணும். சாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறோம்ல , அந்த மாதிரி. நாம குடிக்கு அடிமையாகிட்டோம் அதான் விஷயம். அதுல இருந்து விடுபட என்ன பண்ணணுமோ அத தான் யோசிக்கணும். அத விட்டுட்டு அரசு விக்கிறதால தான் குடிக்கிறேன்னு சொல்றதெல்லாம் சின்ன பிள்ளை தனம்.  அரசு எவ்வளோ நல்லது செய்தாலும் , அதனை நாம் பாராட்டுவதில்லை. என்னை பொறுத்த வரை மது ஒழிப்பு என்பது அரசால் மட்டும் சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை. மது ஒழிப்புக்கு முக்கிய தீர்வு , தனிப்பட்ட , ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடு , சுய ஒழுக்கம்  “ என்று சுந்தரம் கூற ,

 “ ஆமா. எங்க நம்ம ஆளுக, எங்க திருந்த. நல்லதுக்கு கெட்டதுக்கு எதும்னாலூம் மது. மது இல்லாத விசேசம் இல்லை.  இந்த மதுவால் தான் எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது“ என்று மீனாட்சி கூறி கொண்டிருந்த போது ,

 “ அங்க ரெண்டு பேரும் என்ன வேல பார்க்கிற மாதிரி தெரியலே ?“ என்று சூப்பர்வைசரின் சப்தம் கேட்க , இருவரும் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

        “ நமக்கு எதுக்கு வம்பு. என்னம்மோ பண்ணிட்டு போறாங்க . நாம வேல பார்த்தா தான் சம்பளம். “ என்று நையாண்டியாய் சுந்தரம் கூறி , மது பாட்டில்களை ஒழிக்க (குப்பை அள்ள) ஆரம்பித்தனர்…

 # மது ஒழிப்பு என்பது அரசுடன், தனி மனிதனின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் சாத்தியமே !

 # மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் இருப்பதை நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

 # மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈகோ (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    த ந் தி ர ம் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்