நூலின் பெயர்: மாவீரன் நெப்போலியன்
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
நூலாசிரியர் : பூவை அமுதன்
கூடு இல்லா பறவை வான் ஆளும் வீடு இல்லா மனிதன் நாடாளும் விந்தையை யோசிக்காம வாசியுங்க நேசிப்பிங்க மாவீரன் நெப்போலியனை
நெப்போலியன் வீரத்தின் உச்சத்தை மிச்சமில்லாமல் தொட்டவர். வீரம் திறமை, இரக்கம் என மூன்றும் முக்கோணமாக செயல்பட எக்கோணத்திலும் இவர் புகழ். அன்று மட்டும் அன்று இன்றும் தொடர்கிறது.
போர்க்களம் பல வென்று இருமுறை அரசாண்டு வீரத்தின் மொத்த உருவம் பிரஞ்ச் வீதியிலே நிற்பது சிலையாய் இல்லை இல்லை மக்களின் மனதில் மலையாய்.
வஞ்சகர்கள் ஓர் அணி, பனி, பணி, பிணி, ஞானி என பல சனிகள் தாக்கினாலும் மாவீரன் நெப்போலியனின் ஆளுமை ஒரு தனி பாணி நாட்டை முதலில் கவனிப்பின் காதலியுடன் பவனி என வாழ்க்கை வாழ துணி இதுதான் மாவீரன் நெப்போலியன் வாழ்க்கை மந்திரம்.
இளமை
1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார் என் விமர்சன நாயகன் மாவீரன் நெப்போலியன் தந்தை சார்லஸ் வக்கீல் தொழில் நடத்தி வந்தார் இளமையிலேயே புத்திக்கூர்மையும் கத்தி கூர்மையும் தெரிந்தவர் மாவீரன் நெப்போலியன்.
இராணுவக் கல்வி
இராணுவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பனிக்கட்டியை பயன்படுத்தி ஒரு அரண்மனையை கட்டினார் அத்துடன் தான் சேனாதிபதியாக மற்ற மாணவர்கள் போர் வீரர்களாகவும் நாடகம் நடத்தி பெயர் பெற்றார் மாவீரன் நெப்போலியன்
பதவி
ராணுவத்தில் பொறுப்பான பதவி ஒன்று வந்து சேர்ந்தது மாவீரன் நெப்போலியனுக்கு.
சந்தேக கண்கள்
பணம் படைத்தவர்கள் எளியவரை ஒடுக்க நினைக்க மாவீரன் நெப்போலியன் அதை தடுக்க நினைக்க இதை சந்தேகம் கண் கொண்டு பார்த்தனர். இதனால் பல வகையிலும் பகைவர்கள் உருவாகினர்.
புரட்சி
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆட்சி செய்த 16-ம் லூயியை எதிர்த்து புரட்சி ஏற்பட்டது நாடு முழுவதும் புரட்சியில் சிக்கல்கள் பல எழுந்தன.
திருமணம்
ஜோஸ்பின் கணவன் இறந்த பெண் அவளுக்கு இருபத்தி எட்டு வயது. அவளுக்குஒரு ஆண்மகன்இருந்தான் ஜோஸ்பினை 1796 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் நாள் திருமணம் செய்துகொண்டார் மாவீரன் நெப்போலியன். இருமனம் ஒருமனம் ஆனது.
வெற்றி முகம்
இத்தாலி பிரெஞ்சுப் படைக்கு தலைவன் ஆனான் பலர் வயிறு எரிய ஆனால் மக்களோ பூமாலை எறிய ஏறுமுகம் தான்
மாவீரன் நெப்போலியனுக்கு.
விரோதி
நெல்சன் தலைமையில் ஆங்கிலேயப் படை பின் தொடர்ந்தனர் நெப்போலியன் மால்ட்டா த்தீவு அலெக்சாந்திரியா நகரினையும் கைப்பற்றினான் ஆனால் திடீரென நெல்சன் படை பிரெஞ்சு படையை வளைத்தது கப்பலை எரித்தது புருபாஸ் என்னும் கப்பல் தலைவன் கொல்லப்பட்டான்
முடிசூடல்
1804 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் நெப்போலியன் பிரஞ்சு மன்னனாக முடி சூட்டப் பெற்றான் பல நன்மைகள் நாட்டிற்கு செய்தான்
இரண்டாவது மனைவி
அரச குலத்தில் பிறந்ததால் அரசகுல பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது
நஷ்டமும் வெற்றியும்
வெற்றி பல பெற்றாலும் நெப்போலியன் படை வீரர்கள் பலர் இறக்க படை சுருங்கியது
வஞ்சகர் விரித்த வலை
பணக்காரர்கள், மத குருக்கள் மற்றும் வெலிங்டன் பிரபு பட என அனைத்தும் சூழ ஆட்சியை கைவிட்டு எல்பா தீவு சென்றான்
மீண்டும் அரசன்
1815 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் சிப்பாய் உடன் எல்பா தீவில் இருந்து புறப்பட்டான் பழையபடி மீண்டும் நெப்போலியன் அரசன்.
மரணம்
மீண்டும் வஞ்சகர்களால் ஆட்சியை இழந்த மாவீரன். செயிண்ட் ஹெலினாத் தீவில் விடப்பட்டான் அங்கு அவருக்கு உடல்நலமின்றி 1821 மே 5ஆம் நாள் உயிரிழந்தார் அந்த தீவிலேயே புதைக்கப்பட்டார் ஆனால் பின்னாளில் மீண்டும் அவர் சடலம் பிரஞ்சுக்கு கொண்டு வரப்பட்டது அவர் இயற்றிய சட்ட திட்டங்கள் நிறைவேற்றபட்டது அவரின் உருவச் சிலையும் நிறுவப்பட்டது அவர் புகழ் உலகில் நிலைநாட்டப்பட்டது
நிறை
நன்றி மறவாமை
முயற்சி
வீரம்
தவறை ஒத்துக் கொள்ளும் தனிப் பண்பு
தாயன்பு
அன்புடைமை
சகிப்புத்தன்மை
இரக்கம்
கடமை உணர்ச்சி
நீதியுள்ள நெஞ்சம் என அனைத்தையும் எழுத்தாளர் பூவை அமுதன் அழகாக விவரித்துள்ளார்
குறை
அச்சிடும் போது வருடங்கள் பிழையாக இருந்தன.
வார்த்தை ஜாலம் குறைவாக இருந்தது
கருத்துக்கள் விரிவாக கூறப்படவில்லை.
எஸ் பூங்குழலி
வடசேரி தஞ்சாவூர் மாவட்டம்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings