2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏலே, எங்க போயிகின்னு இருக்க, இங்க வா. அருக்காணி மவளுக்கு இடுப்பு வலி வந்துருச்சாம், நான் போய் பாத்துட்டு அப்புறமா வரேன்”
“சரி சரி போய்ட்டு வா, தாயையும் பிள்ளையும் கவனமா பாத்துக்கோ”
மருத்துவச்சி லீலா வேகவேகமாக அருக்காணி வீட்டுக்கு நடந்தாள். அருக்காணி வீட்டுக்கு அருகே போனதும், வீட்டிற்கு வெளியே ஐந்தாறு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
“அம்மா, வலிக்குது மா, வலிக்குது மா” என்று ஒரே அழுகை சத்தம்.
மருத்துவச்சியை பார்த்ததும் அனைத்து பெண்களுக்கும் சந்தோஷம் வந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்துட்டாங்க என்றும், இன்னும் கொஞ்சம் வேகமாக வந்திருக்கலாம் என்றும் பெண்களுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.
வேக வேகமாக உள்ளே சென்ற மருத்துவச்சியை அருக்காணி மவ செல்வி பார்த்ததும் அழுகை இன்னும் அதிகமானது.
“எதுக்கு இப்படி கத்தற? வலியை தாங்கிதான் ஆகணும்”
“என்னால முடியலையே”
“பொண்ணா பொறந்துட்ட, இந்த வலி எல்லாம் தாங்கிதான் ஆகணும்”
குழந்தை பிறப்பதற்கான தன்னுடைய கை வைத்தியத்தை மருத்துவச்சி ஆரம்பிக்க, “இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணு, அப்பதான் குழந்தை வெளியே வரும்” என்று சொல்லிக் கொண்டே இருக்க, செல்வியும் தம்மால் முடிந்த வரை முக்கினாள் முனகினாள்.
லேசாக தலை மட்டும் வெளியே வர, அருக்காணி லேசாக வயிற்றை அமுக்க, “இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்” என்று மருத்துவச்சி சொல்ல, குழந்தையின் தலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர, செல்வியின் சத்தமும் குழந்தையின் சத்தமும் ஒன்றாக கேட்டது.
குழந்தை சத்தத்தை கேட்ட செல்வி “என்ன குழந்தை?” என்று கேட்க
“பெண் குழந்தை” என்றால் மருத்துவச்சி.
“எங்க வீட்டுக்காரர் வீட்டில் ஆண் பிள்ளையை எதிர்பார்த்தார்கள்” என்று அந்த வலியிலும் பயந்து கொண்டே பேசினாள் செல்வி.
“பெண் குழந்தை பிறந்திருக்கு, மாலை சுற்றி பிறந்திருக்கு” என்று சொன்னவுடன் செல்வியின் அம்மா அருக்காணிக்கு கொஞ்சம் பயம் வந்தது.
குழந்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து வெளியே வந்தாள் மருத்துவச்சி.
அனைவரிடமும் “பெண் குழந்தை, வெள்ளிக்கிழமை யோகமான நாள் தான்” என்று சொன்னாள் மருத்துவச்சி.
“மாலை சுத்தி பொறந்திருக்காமே” வெளியே நின்றவர்கள் கேட்க
“ஆமாமா, மாலை சுக்திதான் பொறந்துருக்கு” என்று சொல்லிவிட்டு மருத்துவச்சி கிளம்பினாள்.
“மாலை சுத்தி பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்று சொல்வார்களே, என்ன செய்யப் போறார்களோ தெரியவில்லையே” என்று பெண்கள் பேசிக்கொண்டே குழந்தையை பார்க்க உள்ளே சென்றார்கள்.
“புள்ள அப்படியே அம்மா மாதிரியே இருக்கு, இல்ல இல்ல பாட்டி போல தான் இருக்கு, அந்த மூக்கை பார்த்தா அவ அப்பனாட்டம்” என்று ஆளாளுக்கு பேசினார்கள்.
“மாலை சுத்தி பொறந்து இருக்குனு சொன்னா மருத்துவச்சி, உன் மவனை பத்திரமா பாத்துக்கோ” என்று செல்வியின் அம்மா அருக்காணியிடம் வந்திருந்த பெரிய மனுஷி ஒருத்தி சொன்னாள்.
குழந்தை பிறந்த செய்தியை கேட்டு செல்வியையும் குழந்தையையும் பார்க்க கணவர் வீட்டில் இருந்து அனைவரும் வந்தார்கள்.
மருமகளை பார்க்க வந்த மாமியார், “என்ன லே பொம்பள புள்ள பெத்துட்ட, எங்களுக்கு தான் பொம்பள புள்ள ஆகாதுன்னு சொல்லி இருக்கேன். பெத்ததுதான் பெத்துட்ட, உன் பொறந்தவன்கிட்ட உன் மகள் பேர்ல அம்பதாயிரம் டெபாசிட் பண்ண சொல்லு” என சொன்னாள்.
செல்வியின் கணவன், “பெண் குழந்தை பிறந்ததற்கு, அவள் என்னமா செய்ய முடியும். எனக்கும் அதில் பங்கு உண்டுதானே, அவர்கள் வீட்டில் முதலில் ஆண் குழந்தைதானே பிறந்துருக்கு”
“நம்ம வீட்டில் உங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறம் தானே மா நான் பிறந்தேன்” என்று சொல்ல
உடனே தாய்க்கு கோவம் வந்து, “என்னடா, உனக்கு மகள் பிறந்த உடனே வாய் நீளுது” என்று கேட்டாள் தாய்.
“குழந்தை பிறப்பு என்பது கடவுளுடைய வரம் அம்மா. குழந்தை இல்லாமல் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ஏதோ ஒரு குழந்தை நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். அதை நினைத்து சந்தோஷப்படுங்கள். நீங்கள் நினைப்பது போல என்னுடைய மச்சினன் என் குழந்தைக்கு ரூபாய் 50,000 டெபாசிட் செய்தால் அந்தக் குழந்தைக்கு சாப்பாடு போட கூட வக்கில்லாதவன் என்று என்னை சொல்ல மாட்டார்களா? அப்புறம் எதற்கு குழந்தை பெற்றுக் கொள்கிறான் என்று எவ்வளவு பேச்சு பேசுவார்கள். கொஞ்சமாவது நடைமுறை உலகத்துக்கு வாருங்கள் அம்மா” என்று மகன் சொல்ல எதுவும் பேச முடியாதவாறு வாய் மூடி, மௌனமாய் வெளியேறினாள் செல்வியின் மாமியார்.
தன் கணவனின் பேச்சை கேட்டு செல்வியின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings