தேவையான பொருட்கள்
- கடலை மாவு
- சோடா உப்பு
- நெய்
- உலர்ந்த திராச்சை
- முந்திரி
- கிராம்பு
- எண்ணெய்
- சக்கரை
- ஏலக்காய் தூள்
செய்முறை
- முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி, அதனுடன் சோடா மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்
- பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து, அதில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- பிறகு, ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்க வைத்து சக்கரை பாகினை தயார் செய்ய வேண்டும்
- சக்கரை பாகு தயாராகும் வேளையில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- எண்ணெய் கொதிக்கும் போது, கலந்து வைத்த மாவினை பூந்தி கரண்டி மூலம் எண்ணையில் போட்டு விட்டால் பூந்தி தயாராகிவிடும்.
- இவ்வாறாக மொத்த மாவினையும் பூந்தி கரண்டி மூலம் ஊற்றி பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
- பிறகு சக்கரை பாகினை அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறையும் முன் அனைத்து பூந்திகளையும் அதில் கொட்ட வேண்டும்.
- மேலும் ஏற்கனவே பொரித்த திராச்சை முந்திரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு அதனை கையில் எண்ணெய் தடவி சமமான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.இப்பொழுது சுவையான தீபாவளி லட்டு தயார்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
லட்டு ரொம்பவே பிடித்த இனிப்பு. இப்போது லட்டு சாப்பிட்டே சில வருஷங்கள் ஆகி விட்டன. நன்றாக வந்திருக்கிறது லட்டு.
Thank you