2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அம்மா என் அருகில் வந்து தயங்கித் தயங்கி நிற்கும் போதே புரிந்து கொண்டேன், அவள் என்னிடம் எதையோ கேட்கப் போகிறாளென்று.
“என்னம்மா?… என்ன வேணும் உனக்கு?” எரிச்சலோடு கேட்டேன்.
“டேய் ரகு… பாவம்டா பக்கத்து வீட்டுப் பொண்ணு… குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி… தூக்கித் தூக்கிப் போடுதாம்… ஆம்பளை இல்லாத வீடு… ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..” கெஞ்சினாள்.
கண்களில் அனல் பறக்க அவளைப் பார்த்தவன், “போம்மா… என்னால முடியாது… எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்றேன்.
“என்ன முக்கியமான வேலை இருந்தாலும்… இப்போதைக்கு அவன் நிறுத்தி வெச்சிட்டு அந்தப் பொண்ணு கூடப் போயிட்டு வாடா”
“ம்ஹும்… முடியவே முடியாது!… ஃபுட்பால் மேட்சுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்… என் நண்பர்களெல்லாம் எனக்காக ஸ்டேடியத்துக்கு முன்னாடி காத்திட்டிருப்பாங்க… நான் போயே ஆகணும்… என்னால் முடியாது… தயவு செய்து வற்புறுத்தாதே!”
“டேய்… அந்த குழந்தை உயிரை விட உனக்கு புட் பால் மேட்சுதான் முக்கியமாய்ப் போச்சா?” அம்மா கத்தினாள்.
“அம்மா… இந்த மேட்சுக்கு டிக்கெட் கிடைக்கறதே பெரிய லக்… எனக்குக் கிடைச்சிருக்கு… தயவு செய்து அதைக் கெடுத்திடாதே” கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்.
எவ்வளவோ மறுத்தும், எவ்வளவோ வாக்குவாதம் செய்தும், அம்மா பிடிவாதமாய் நின்று, அழுது… கத்தி… ஆர்ப்பாட்டம் செய்து கடைசியில் என்னை வழிக்கு வரச் செய்து விரட்டி விட்டாள்.
மேட்ச் ஆசையை ஒரங்கட்டி விட்டு, அரைமனதுடன் முணுமுணுத்துக் கொண்டே கால் டாக்ஸி பிடித்து, பக்கத்து வீட்டுப் பெண்ணையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தேன். “ஹும்… இதெல்லாம் எனக்குத் தேவையா?”
டாக்ஸியில் போகும் போது, அந்தக் குழந்தையையும், அந்தப் பெண்ணையும் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது எனக்கு. ‘சனியன்க… என் உயிரெடுக்கறதுக்குன்னே பக்கத்து வீட்டுல குடியிருக்குதுக’
ஆஸ்பத்திரியில் குழந்தைக்கான சிகிச்சை மாலை வரை இழுத்தது.
மாலை வாக்கில் குழந்தையின் ஜுரம் தணிந்து, நார்மலுக்கு வந்ததும், டாக்டர் இவர்களை நோக்கி வந்தார். “நல்லவேளை சரியான நேரத்துல கொண்டு வந்தீங்க… அதனால குழந்தை பிழைச்சது… இல்லாட்டி நீங்க உங்க குழந்தையை… இழந்திருப்பீங்க!”
டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போது… வரவேற்பறையில் இருந்த டி.வி.யில் அந்த ஃப்ளாஷ் நியூஸ் ஒடியது.
“சற்று முன் வந்த செய்தி… நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபுட்பால் மேட்சின் போது காலரி இடிந்து விழுந்து ஸ்தலத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர்.”
தொடர்ந்து காட்டப்பட்ட வீடியோ காட்சியில் என் நண்பர்கள் மூவரும் பிணமாய், ‘அ…. ய்…. யோ!… நானும் அவர்களோடு ஃபுட் பால் மேடுக்குப் போயிருந்தா… இந்தப் பிணக்குவியலில் என் உடலும் கிடந்திருக்குமோ?’
“என் குழந்தை உசுரு போக இருந்தது… நீங்க தெய்வம் தம்பி” பக்கத்து வீட்டுப் பெண் கண்களில் கண்ணீரோடு என்னைக் கையெடுத்து கும்பிட்டாள்.
“இல்லம்மா… உங்க குழந்தைதான் என் உசுரைக் காப்பாத்தியிருக்கு” என்றேன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே.
அப்பெண் எதுவும் புரியாமல் என்னை ஊடுருவிப் பார்க்க, நான் குழந்தையைப் பார்க்க வார்டுக்குள் ஓடினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings