in ,

குழந்தை மனம் (சிறுகதை) – பு.பிரேமலதா, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

                “ஏய், அம்மு, பாத்துமா, கீழே விழுந்திடாத” என்ற சத்தத்தை கேட்டதும் பூங்காவில் உள்ள அனைவரும் திரும்பிப் பார்த்தனர் அம்மு என்கின்ற அபிராமியைத் தவிர.

                ஊஞ்சலில் இருந்து ‘தடால்’ என்ற விழுந்த ஆறு வயது சிறுமி அம்முவை கைப்பிடித்து தூக்கியபடி, ஏம்மா, தாயி, உன் அம்மா சத்தத்தைக் கேட்டு ஊரே திரும்பி பார்க்குது, அம்மா சொல்றதை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா என்றாள் செல்லமாக வேணி ஆச்சி.

                ஆச்சிமா, அம்மு விளையாட ஆரம்பிச்சா போதும், யாரு கூப்பிட்டாலும் அவள் காதில் விழவே விழாது என்று கூறியபடி வேகமாக நடந்து வந்தேன் அம்முவை நோக்கி.

                மணலை உதறிவிட்டு எழுந்த அபிராமி தன் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்துவிட்டு சிட்டாய் பறந்தாள் மறுபடியும் விளையாட.

                நல்ல வேளை மணலில் விழுந்ததால் அடி எதுவும் படவில்லை என்று திருப்திப்பட்டுக் கொண்டேன் ஒரு தாயின் கரிசனத்தோடு.

                குழந்தை விளையாடுவதை ரசித்தவாறே பூங்காவில் உள்ள மரப்பலகையில் அமர்ந்தேன்.

                திடீரென்று யாரோ என் தோளை தட்டுவதை உணர்ந்தேன். என்னே ஒரு ஆச்சரியம். வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவராமல் தடுமாறின.

                என்ன அமுதா நல்லா இருக்கியா? என்றாள் என் தோழி நர்மதா என்னை அணைத்தபடி. “எவ்வளவு நாள் ஆயிற்று, நீ எப்படி இருக்கிறாய்”

                நன்றாக இருக்கிறேன். இது என் குழந்தை பிரியா, நான்கு வயதாகிறது என்று அவள் குழந்தையை அறிமுகப்படுத்தி வைத்தாள்.  நாங்கள் இப்பொழுது தான் திருச்சிக்கு வேலையின் காரணமாக மாற்றலாகி வந்துள்ளோம். இங்கு பக்கத்தில் தான் வீடு வீட்டிற்கு வந்து விட்டு போ.

                இன்று, கொஞ்சம் நேரமாகி விட்டது. வேறோரு நாள் வருகிறேன். உன்னைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனி அடிக்கடி சந்திக்கலாம் சரி, என்னை எப்படி கண்டுபிடித்தாய்.

                பூங்காவை கடக்கும்போது உன் சத்தம் கேட்டு எங்கேயோ கேட்ட குரல் போல் உள்ளது என்றெண்ணி வந்தேன்.  உன்னை பார்த்தேன், அவ்வளவுதான்.

                நாம் இருவரும் நெருங்கிய தோழிகளாக கல்லூரியை வலம் வந்த நினைவுகளை என்றும் மறக்க முடியாது என்று அங்கலாய்த்துக் கொண்டோம்.

                எங்கள் வீடு பத்து நிமிடம் நடைபாதையில் சென்றால் வந்துவிடும். பொது நூலகத்தின் பக்கத்தில் உள்ளது. நீங்களும், நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வாருங்கள்.

                துள்ளிக்குதித்தபடி வந்து என்னை கட்டிக் கொண்டாள் அபிராமி. இது என் குழந்தை அபிராமி ஏழு வயது ஆகிறது.

                அம்மு, பிரியா பாப்பாவை பார்த்தாயா? இனிமேல் உனக்கு தோழி, அவளுக்கு ஒரு ஹாய் சொல்லு, ஹாய் சொல்லி கையை குலுக்கிக் கொண்டார்கள் இருவரும் நாட்டுத் தலைவர்களைப் போல.

                அம்மா பசிக்கிறது என்றாள் அபிராமி கண்ணை சிமிட்டியபடி.

                பழங்கள் தான் உள்ளது. சாப்பிடுகிறாயா, சரிம்மா.

                இங்கு வரும் வழியில் ஒரு பழக்கடையில் பழங்கள் நன்றாக இருக்கும். இங்கு வரும்போது வாங்கிவிட்டு செல்வோம்.

                வீட்டில் இருந்து கொண்டு வந்த தண்ணீரில் இரண்டு ஆப்பிள்களை கழுவி, ஒன்றை பிரியாவிற்கு கொடுத்து விட்டு மற்றொன்றை நீ சாப்பிடு என்றேன்.

                அபிராமி திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு ஆப்பிளை கடித்தாள். பிறகு இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டு, இரண்டாவது கடித்த ஆப்பிளை பிரியாவிடம் கொடுத்தாள்.

                பிரியாவோ கடித்த ஆப்பிளை யோசித்துக் கொண்டே வாங்கினாள். சட்டென்று நர்மதா ஆப்பிளை வாங்கி கூடையில் வைத்துவிட்டு, பரவாயில்லை அமுதா, அவள் ஆப்பிள் சாப்பிட மாட்டாள். ஏதோ நினைவாக வாங்கி விட்டாள் என்று நினைக்கிறேன்.

                என்னுடைய கைபேசி எண் இந்த அட்டையில் உள்ளது.  நாம் பிறகு சந்திக்கலாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று கூறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்வதிலே குறியாயிருந்தாள் நர்மதா.

                அம்முவோ, ஆப்பிளை கடித்தபடியே விளையாட சென்று விட்டாள்.

                நானோ, அம்முவின் செய்கையால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன்.

                குழந்தை, ஏதோ தெரியாமல் என்று நான் வாய் எடுப்பதற்கு முன் நர்மதா சிறிது தூரம் சென்று விட்டாள்.

                எனக்கு வந்த கோபத்திற்கு, அம்முவை நாலு சாத்து சாத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

                வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு எதுவாயிருந்தாலும் வீட்டில் சென்று இதைப் பற்றி கேட்கலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு கிளம்பினோம்.

                எப்பொழுதும் நடப்பதுபோல், ஒரு வினாடி கூட காலை தரையில் ஊன்றாமல், துள்ளி, துள்ளி வழி நெடுக நடந்து வந்தாள். என்றும் ரசனையோடு பார்க்கும் எனக்கு இன்று கொஞ்சம் எரிச்சல் வந்தது, எதுவுமே நடக்காதவாறு எப்படி வருகிறாள் என்று.

                கல்லூரியில் படிக்கும் காலத்தில், எல்லோரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நான் வகுப்பு எடுப்பேன். வேலைக்கு சென்றால் குழந்தையுடன் செலவிட நேரம் கிடைக்காது. அவர்களை நன்முறையில் வளர்த்திட கடினமாக இருக்கும் என்றெண்ணி, ஒவ்வொன்றையும், பார்த்து, பார்த்து சொல்லிக் கொடுத்து வளர்த்தால், ச்சே, என்னே அநாகரிகமாக நம் தோழி முன் நடந்து கொண்டாள், என்று சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தன.

                இனி நர்மதாவிடம் எப்படி முகம் கொடுத்து பேசுவது? வீட்டிற்கு போனதும் நிதானமாக பேசி அம்முவிற்கு புரிய வைக்க வேண்டும்.

                வீட்டிற்கு வந்ததும், அம்முவை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டேன். அம்மு, இன்று பூங்காவில் ஏன் அப்படி நடந்து கொண்டாய்?

                என்னம்மா? எப்படி நடந்து கொண்டேன். ஆப்பிளை கடித்துவிட்டு பிரியா பாப்பாவிடம் கொடுத்தியே, அதைத்தான் கேட்கிறேன்.

                என்னம்மா, நீங்க தானே அவ்வாறு செய்ய சொன்னீர்கள், இப்போது என்னை கேக்கிறீங்க.

                என்னது? நான் செய்ய சொன்னேனா? அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு அடி விட்டேன் அம்முவின் கன்னத்தில்.

                அடி வாங்கிக் கொண்டு, அம்மா எது நல்லதோ அதைத்தான் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்று நீங்க தானே சொல்லிக் கொடுத்தீர்கள். அதான் ஸ்வீட்டான ஆப்பிள் எது என்று தெரிந்து கொண்டு, ஸ்வீட்டாக இருந்ததை பாப்பா பிரியாவிற்கு கொடுத்தேன் என்றாள் கேவி, கேவி அழுது கொண்டே.

                அய்யோ, நாம் தான் குழந்தையை தவறாக புரிந்து கொண்டோம். நான்தான் தெளிவாக  எப்படி பொருள்களை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். சாப்பிடும் பொருள்களில் இவ்வாறு செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். குழந்தையை வேறு அடித்துவிட்டோம் என்று மனவேதனையடைந்தேன்.

                அழுது கொண்டே, என்னை கட்டிக் கொண்டு இனி இப்படி செய்ய மாட்டேன் அம்மா, என்றாள்.

                நானும், அம்முவை கட்டிக் கொண்டு, என் செல்லமே, அம்மா புரிந்து கொள்ளாமல் உன்னை அடித்து விட்டேன். என்னை மன்னித்துவிடு.

                சாப்பிடும் பொருள்களை கடித்துவிட்டு கொடுக்ககூடாது, சரியா.

                சரி அம்மா, என்று கூறிக் கொண்டே தன் தலையை என் மடியில் புதைத்து புன்னகைத்தாள். நான் தலையை கோதிக் கொண்டே இருக்க தூங்கி விட்டாள்.

                அம்முவை, விரிப்பில் கிடத்தி விட்டு, “குழந்தை மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்” என்று பாட்டை மாற்றிப் பாடத் தோன்றியது.

                குழந்தை மனம் எவ்வளவு தூய்மையானது கள்ளங்கபடமில்லாதது. நர்மதாவிடம் கூறினால் அவளும் புரிந்து கொள்வாள். நம் குழந்தை பார்போற்றும் மனிதநேயமிக்க நல் குழந்தையாக இருக்கும் என்ற மனநிம்மதியோடு இரவு உணவை சமைக்க ஆரம்பித்தேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 18) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 4) – ஸ்ரீவித்யா பசுபதி