in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 9) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

மறுநாள் காவ்யாவின் பிறந்தநாள் என்ன பரிசு வாங்குவது என்று யோசித்துக் கொண்டே, அந்த கடைவீதி தெரு முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தான் ஜெய்..

காதில் போடுவது.. கையில் மாட்டுவது.. என பலவகையான நகைகளையும் ஆராய்ந்தான். ஒரு கிராம் நகை 5400 ரூபாய் தங்கம் மட்டும்.கூலி ,சேதாரம், என்று வரும்போது எட்டாயிரத்தை தொட்டது ..அவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு ஒரு கிராம் நகையை கொண்டு கொடுத்தால் நன்றாக இருக்குமா என்ற எண்ணமும் தோன்ற ,அதை விட்டால் அதற்குமேல் கூடுதல் தங்கத்தில் வாங்க அவன் கையிலும் பையிலும் காசில்லை..

 அப்படியே சுற்றி வரும்போது அந்தப் பிரபல நகைக்கடையில் இதய ❤ வடிவ லாக்கெட் கண்ணில்பட்டது..செம க்யூட்டாக இருந்தது?..கடைக்காரரிடம் அதைக் கேட்க ..

அவர் எடுத்துக் காண்பித்தார் ..” சூப்பராக இருக்கும் சார்.. இந்த லாக்கெட்ல ..ரெண்டு பேர் படமும் ரெண்டு சைடுல வைச்சுக்கலாம் சார். இது லவ்வர்ஸ் லாக்கெட்.. அதிகம் கிடையாது..உங்க அதிர்ஷ்டம் ஒன்னே ஒன்னு இருக்கு சார்..”

சந்தோஷத்தில் மனம் துள்ளிக் குதித்தது .மிக அழகான, அருமையான வடிவத்தில், அவனுடைய காதலை எடுத்துச் சொல்லும் வண்ணம்… மனதுக்கு நிறைவாக இருந்தது …

“சார் இது புடிச்சிருக்கு… இது ரேட் பாத்து சொல்லுங்க..”

கால்குலேட்டரை எடுத்து தட்டினான் கடை பையன். ஒரு துண்டுச் சீட்டில் நிதானமாக பொறுமையை சோதிக்கும்படி மெதுவாக எழுதிவிட்டு ஜெய்யிடம் காட்டினான்..” சார் இதுல உள்ள தங்கம்.. தன்னுடைய மதிப்பு… அப்புறம் கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உட்பட 28 ஆயிரம் ஆகுது”

சோர்ந்து போனான் ஜெய்..’ 28 ஆயிரத்திற்கு எங்கே போவது? யாரிடம் கடன் கேட்பது ?’என்று யோசித்தவன் கையிலுள்ள மோதிரம் கண்ணில் பட்டது ..தங்கத்தில் பண்ணிய பவள மோதிரம். அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த காசில் வாங்கிப் போட்டது. பவளம் அவனுடைய ராசி கல் என்பதால் உனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை அதை கழட்ட கூடாது என்ற அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது …

யோசித்துக் கொண்டிருந்தால் வாங்க முடியாது என்று சட்டென்று அவனுடைய மோதிரத்தை கழட்டி..

” இந்த பழைய தங்கம் எவ்வளவு இருக்குதுன்னு பாருங்க?” என்றான்.. அவர்களும் அதை உரைத்துப் பார்த்து எடை போட்டு கழிக்க வேண்டியவை எல்லாம் கழித்து …

“சார் இது 20,000 வரும் ..கையிலிருந்த பத்தாயிரத்தில் எட்டாயிரத்தை கொடுத்தான். லாக்கெட்டைப் பில் போடச் சொன்னான்.

ராதிகா சொன்னது மிகச் சரி. மற்றவர்களுடைய கிப்ட்டைப் பற்றி காவ்யா கவலைப்பட மாட்டாள். ஆனால் அவன் என்ன பரிசளிக்கிறான் என்பது அவளுக்கு ரொம்ப முக்கியமான ஒரு எதிர்பார்ப்பாக இருக்கும்.

வீட்டிற்கு வந்தவன் அவனுடைய போட்டோவையும் அவளுடைய போட்டோவையும் கட் பண்ணி லாக்கெட்டுக்குள் வைத்தபோது மனம் நிறைந்தது. என் மேல் அன்பு வைத்திருக்கும் அந்த தேவதைக்கு இது ஒன்றும் பெரிய பரிசு அல்ல என்று தோன்றியது .நிச்சயம் இது அவளை சந்தோஷப்படுத்தும்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக காவ்யா பிறந்த நாள் வந்தது .நினைவாக இரவு 12 மணிக்கு காவ்யாவை கூப்பிட்டான்.

“ஹாய் பேபி! மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்…பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..”

“ஏய் ஹனி நீ கூப்பிடும் வரை வேறு எந்த போனையும் நான் எடுக்கவில்லை.. பிரண்ட்ஸ் கூப்பிட்டுகிட்டே இருக்காங்க.. நான் முதல்ல உன் போனை அட்டெண்ட் பண்ணய பிறகுதான் மத்தவங்க போனை எடுக்கனும்னு இருக்கேன். நீயேன் கரெக்டா 12க்கு கூப்பிடலடா..”பொய்க்கோபத்துடன் சிணுங்கினாள்.

“அடிப்பாவி.. இராட்சசி.. பொய் சொல்லாதடி..நான் 12 மணிக்கு சரியா கூப்பிடுறேன்.. வாட்சில் மணி 12 .00 “

“அப்ப முதல்ல உனக்கு ஒரு வாட்ச் வாங்கி பிரசன்ட் பண்ணனும் ..நீ 12 :01 மணிக்கு தான் கூப்பிட்டே…”

“டார்லிங் பர்த்டே டிரஸ் எப்ப போடுவ.. நாளைக்கு என்ன ப்ரோகிராம் காலைல?”

“காலையில அப்பா அம்மாவோட கோயிலுக்கு புது சாரி கட்டி விட்டு போவேன்டா.. எந்த கோயில் தெரியுமா அதை நான் சொல்ல மாட்டேன் ..”

“பல படிகள் இருக்கும் பழனி மலை அல்ல ..பச்சைக்கிளி வைத்திருப்பாள் மீனாட்சியும் அல்ல ..”

“இரு.. இரு..இரு.. எப்பா சாமி மண்டைல்லாம் காஞ்சி கெடக்குது.. ராத்திரி 12 மணிக்கு பிரஷா புதிர் போட்டுகிட்டிருக்க… ஒழுங்கா சொல்லுடி.. எந்த கோயிலுக்கு போற ..”

“மிஸ்டர் லவ்ஸ்..எதுக்கு கேக்குற? அங்க வந்து நிக்கிறதுக்கு ..இப்ப நீங்க லவ்ஸ் மட்டும் தான்.. புருஷ் ஆனபிறகு ஜோடியா கோயிலுக்கு போகலாம். அது வரைக்கும் இழுத்து போத்திகிட்டு நிம்மதியா தூங்குப்பா.. நிறைய கால் வெயிட்டிங். நான் இப்ப ஆன்சர் பண்ண ஆரம்பிச்சா தான் ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும் தூங்குடா செல்லம்.. நாளைக்கு சாயங்காலம் பார்ட்டில்ல மீட் பண்ணுவோம்… கண்டிப்பா வந்துடுடா என் இனிய தொந்தரா..”போனை வைத்தாள் காவ்யா .இவள் எந்த கோயிலுக்குப் போவாள்? ஜெய்க்கு யூகிக்க முடியவில்லை “.

“ராதிகாகிட்ட கேட்கலாம்.. எப்படியும் காவ்யாக விஷ் பண்ண ராதிகா முழித்துத் தான் இருப்பாள் என்று ராதிகா நம்பரை சுழற்றினான்.

” என்ன ஜெய் காவ்யாவிற்கு போடறதுக்கு பதிலா மறந்துபோய் எனக்கு அடிச்சுட்டியா”

” இல்ல ராதிகா! உன்கிட்ட ஒன்னு கேட்பதற்காக தான் போன் பண்ணினேன். நாளைக்கு காவ்யா அவங்க அப்பா அம்மாவோட எந்தக் கோயிலுக்குப் போவா?” ..

“திருப்போரூர் முருகன் கோயிலுக்கு தான் போவா. அதுதான் அவர்களுடைய குடும்ப கோயில்.”

” மலைமேல் இருக்கும் சொன்னாளே.. அது சும்மா உன்னை டைவர்ட் பண்ண சொல்லிருப்பா …”

மறுநாள் காலை காவ்யா தன் அப்பா அம்மாவுடன் திருப்போரூர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள். அவள் அப்பா நிறைய நன்கொடைகள் கோயிலுக்கு கொடுத்திருந்ததால், பூசாரி முன்னே நின்று அவர்களை வரவேற்று ,தனியாக ஸ்பெஷல் அபிஷேகம், அர்ச்சனை பண்ணிக் கொடுத்தார் ..மாலினி தேவி இவ்வளவு பெரிய கோயில்ல கொஞ்சம் ஏசி, ஏர்கூலர் வைக்கலாம் என்று அலுத்துக் கொண்டாள். கோயிலை சுற்ற முடியாமல் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

” அப்பா நான் மட்டும் போய் பிரகாரம் சுத்திட்டு வர்றேன்” என்று கிளம்பினாள்.

 கோயிலை சுற்றி வரும்போது பின்பக்கம் அமைந்திருந்த தூணுக்கு பின்னால் இருந்த கை அவளை பிடித்து இழுத்தது. பயந்துபோன அவள் வாயை பொத்தியவன்..

” நான் ஒருவன் இங்க காத்துகிட்டு இருக்கேன் காஞ்சு போயி, நீ என்னடான்னா அங்கு கல்லாயிருக்கிற சாமிய விழுந்து விழுந்து கும்பிட்டுகிட்டிருக்க …இந்த பாழாப்போன பையன் இருக்கானே, அவனை கவனிக்க வேணாமான்னு தோன மாட்டேங்குது “

“இப்ப எதுக்கு டா இங்க வந்த? நான் தான் உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல்ல…அது சரி உனக்கு எப்படி தெரியும் நான் இந்தக் கோயிலுக்குத் தான் வருவேன்னு? “

“அடி போடி இது பெரிய பிரம்ம ரகசியம். கண்டுபிடிக்க முடியாதா? நான் அம்மனை தரிசனம் பண்ண வந்தேன். தரிசனம் பண்ணிட்டேன். கிளம்புறேன்..” என்றவன்

“இந்த அடியேனுக்கு ஒரு வாழைப் பழமாவது பிரசாதமாக கொடுக்கலாமே “என்றதும்… சிரித்துக்கொண்டே காவ்யா வாழைப்பழத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். வாழைப்பழத்தை உரித்தவன் பாதியை அவள் வாயில் திணித்து “ஹாப்பி பர்த்டே டியர் கண்ணம்மா “என்றான்.

“சாமிகிட்ட நல்ல அப்ளிகேஷன் போட்டுட்டியா? இந்த மாங்கா மடையன் தான் எனக்கு புருஷனா வரணும்னு.. சாமி குண்டக்க மண்டக்க பண்ணி வச்சுட்டு போறாரு.. எனக்கு பதிலாக எவனாவது தேங்காய் மண்டையன் வந்துரப் போறான் …”

“டேய் ரொம்ப நேரமானா எங்க அப்பா அம்மா தேடி வந்துருவாங்க.. நான் போறேன்.. பை.. சாயங்காலம் பார்க்கலாம்.. வந்துருடாச் சீக்கிரம்…” என்றபடி ஓடினாள்

குதித்துக் கொண்டு சந்தோஷமாக வரும் மகளை பார்க்க வியப்பாக இருந்தது ராஜசேகர் மாலினி தேவி தம்பதிக்கு..

கள்ளச் சிரிப்புடன் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் திருப்போரூர் முருகன் …

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 2) – சுஸ்ரீ

    அம்மாவின் கடைசி ஆசை (சிறுகதை) – நாமக்கல் வேலு