.2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
காவ்யா பிரண்ட்ஸ் பெரிய குரூப்பாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்ட ஜெய்..’ இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான் ஏதாவது குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள்’ என்று நினைத்தான்…. எஸ்கேப் ஆக நினைப்பதற்குள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.
“என்ன ஜெய் ப்ரோ.. நாளைக்கு உங்க ஆளோட பிறந்தநாள் ஞாபகம் இல்லையா?” ..
தெரியாது என்று காட்டிக் கொண்டால், இவர்கள் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று சுதாகரித்துக் கொண்டான்.
“காவ்யா பிறந்தநாள் தெரியாமல் இருக்குமா.. தெரியும் தெரியும்” சொல்லி முடிப்பதற்குள்…
“சமாளிக்காதீங்க ப்ரோ… உலகத்திலேயே காதலியோட பிறந்த நாளை தெரியாத ஒரே காதலன் நீங்க மட்டும்தான். இது மட்டும் காவ்யாக தெரிஞ்சா எப்படி பீல் பண்ணுவா தெரியுமா? அதனாலதான் போனா போகுதுன்னு இதை நாங்களே உங்ககிட்ட சொல்லிட்டோம். ஒரு நாள் டைம் இருக்கு.. நல்ல அசத்தலா கிப்ட் வாங்கிடுங்க..உங்க கிப்ட பாத்து அவ மிரண்டு போகனும்…”
“நாளைக்கு அவங்க வீட்ல கிராண்ட் பார்ட்டி இருக்கும். இனிமேதான் காவ்யா நம்மள இன்வைட் பண்ணுவா..”
“காவ்யா வீடு ரொம்ப பெருசு இல்ல” என்றான் ஜெய் அப்பாவியாக .
“ப்ரோ அதையெல்லாம் வீடுன்னு சொல்லாதீங்க ..அப்புறமா அந்த பங்களா கோவிச்சுக்கும்.. மாளிகை ப்ரோ.. பெரிய மாளிகை.. அந்த மாளிகையின் மகாராஜாவாக போகும் தாங்கள் மிகப்பெரிய பாக்கியவான் “என்றுகிண்டலடித்தனர்.
ஜெய் முகம் வாடியது.’ எனக்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் அன்பில் எந்தப் பாகுபாடும், வேறுபாடும், இல்லை. ஆனா அந்தஸ்தில்.அவள் எங்கே நான் எங்கே..?அவளுடைய பிறந்தநாள் பங்ஷனுக்கு போட்டுக்கொள்ள நல்ல சட்டை கூட கிடையாது ..நல்ல பரிசுப் பொருள் வாங்க… கையில் காசும் பெரிதாக கிடையாது. இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது.’
“என்ன ப்ரோ.. யோசனையில ஆழ்ந்துட்டீங்க… நாங்க எல்லாம் நாளைக்கு மத்தியானத்திலிருந்தே சாப்பிடாமல் விரதம் தான். ஏன்னா அவ வீட்டு விருந்தில் தரையில ஊர்வன -விலிருந்து, வானத்துல பறக்குறது வரைக்கும் அத்தனை வகை டிஷ்ஷஸ் வச்சிருப்பாங்க,”
“அவங்க அம்மா அப்பா எப்படி?” முதல் தடவையாக அவளுடைய வீட்டை பற்றி..பெற்றோரைப் பற்றி விசாரித்தான் ஜெய், இதுவரை அதைப் பற்றி கேட்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை. அதைப்பற்றி கவலைப் பட்டதில்லை. முதல் தடவையாக மனதின் ஓரத்தில் சிறு நெருடல். காவ்யாவின் முகத்தைப் பார்த்தால், அவளுடைய குழந்தைத்தனமான குணமும், பேச்சும் அவனை வேறு எதையும் பற்றி யோசிக்கவிட்டதே இல்லை.
“ப்ரோ அவங்க அம்மா மாலினி தேவி இருக்காங்களே அவங்க நாளைக்கு தங்கத்திலேயே ஜொலிப்பாங்க… மகளை வைரத்தில குளிப்பாட்டுவாங்க.. அவங்களுடைய ஸ்டேட்டஸ்ஸ வெளில காண்பிக்கவும்.. அவங்களோட லேடீஸ் கிளப் பிரண்ட்ஸ் முன்னாடி சீன் போடத்தான் பார்ட்டி. அங்கிளுக்கு இதுவும் ஒரு பிசினஸ் பார்ட்டி அவ்வளவுதான் . அதுக்கு காவ்யா பிறந்தநாள் ஒரு சாக்கு..
அவளுக்கு இதிலெல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் கிடையாது. அவங்க அப்பா அம்மா வற்புறுத்தலுக்காக சும்மா பொம்மை மாதிரி சிரிச்சுகிட்டு நிப்பா…முகத்தில் ஒரு ரெடிமேட் புன்னகையோடு …அவ பாவம் …எங்களப் பாத்தா சந்தோஷமாயிடுவா…நாங்களும் போகலைன்னா அந்த அப்பாவி பிள்ளை பீல் பண்ணும்..
நாங்க எல்லாரும் போயி டின்னரை ஒரு கட்டு கட்டிட்டு… அப்படியே அவளுக்கு ஒரு சின்ன கிஃப்ட் ஏதாவது கொடுத்துட்டு வருவோம். அவளோட தகுதிக்கு நம்மால கொடுக்க முடியாது. அதனால ஏதாவது ஒன்றை பேருக்கு கொடுத்துட்டு ..கைய புடிச்சி குலுக்கிட்டு வந்துருவோம்.
அவளும் எதையும் எதிர்பார்க்க மாட்டா…
ஆனா ப்ரோ.. இந்த தடவ அப்படியில்லை.. காவ்யா உங்கள ரொம்ப முக்கியமா எதிர்பார்ப்பா…நீங்க என்ன கிப்ட் கொடுக்க போறீங்கன்னு ஆர்வமா எதிர்பார்ப்பா..
அவ வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாது.. உங்க விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்.. ஒருவழி பண்ணிடுவாரு அவங்க அப்பா.. அவரு சரியான வில்லன்… சினிமால வர்ற வில்லனை விட மோசம் …அதனால நீங்க தனியா போகாம எங்களோட வாங்க .. நம்ம பசங்க எல்லாரும் வருவாங்க.. குரூப்பா போனா அவர் ஒன்னும் ஆராய மாட்டாரு “
ஜெய்யின் மனதில் ஒரு கலக்கம் பரவியது.. இருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, காவ்யாவின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் ஜெய்..
“ஏய் ப்ரோ கனவுல ஹீரோயினோட டூயட் பாட போயிட்டாரு.. நாம ஜுட் விடுவோம் …”
அவன் யோசித்துக் கொண்டிருந்த போது முகத்தில் சில்லென்று ஐஸ்கிரீம் தடவப்பட அதிர்ந்து போய் திரும்பினான். காவ்யா ரெண்டு கோன் ஐஸ் கிரீம்களை கையில் வைத்துக்கொண்டு அவன் முகத்தில் மூக்கில் கண்ணில் என்று ஐஸ்கிரீமை அப்பினாள்…
“ஏய் ஹனி… இது என்ன விளையாட்டு?” என்று செல்லமாக கோபித்துக் கொண்டான்.. இந்த பாரு ..இது உன் பங்கு… இது என் பங்கு …உன் பங்கை தான் நான் சாப்பிட போறேன் என் பங்கை நீ சாப்பிடு ..என்றவள் மடமடவென பாதி ஐஸ்கிரீமை ருசித்து ரசித்து சாப்பிட்டாள். குழந்தை போல அவள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்திற்கு முன் மனதில் எழுந்த கவலைகளெல்லாம் மறைய… அவள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாள்.
எப்படிப்பட்ட தேவதை இவள்.. இவளுடைய அன்பு கிடைக்க எனக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்க வேண்டும்.
“ஏய் ஜெய்.. இந்தா இந்த டேஸ்டி ஐஸ்கிரீமை சாப்பிடு” என்று தான் சாப்பிட்ட பாதியை அவனுக்குக் கொடுத்தாள். இன்னொரு ஐஸ் கிரீமிலிருந்து எடுத்து திரும்ப அவன் முகத்திலெல்லாம் ஐஸ்கிரீமை அப்பி அவன் வாயில் கொஞ்சம் திணித்தாள்.
“ஏய் என்ன காவ்யா என்ன இப்படி விளையாடுற ..”என்று சிரித்தான்.
“ஐஸ்கிரீம இப்படி தடவி வச்சிருக்க .. பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் . “
“இரு என்னத்தப் போய் ஃபேஸ் வாஷ் பண்ண போறே.. “என்று அவன் முகத்தில் இருந்த ஐஸ்கிரீமை அப்படியே வழித்து வாயில் வைத்து சுவைத்தாள். ஐய்யே..முகத்துல இருக்கிறத சாப்பிடுற ..உதட்டில் இருக்கிறத என் உதட்டால சாப்பிடனும்னு ஆசை.. ஆனால் சந்தர்ப்பம் சரியில்லை… காலேஜ் கேம்பஸில அத செஞ்சா உனக்கும் எனக்கும் டி.சி கொடுத்தனுப்பிடுவாங்க ..சரி கல்யாணத்துக்கப்புறம் என்ஜாய் பண்றதுக்கு கொஞ்சம் பாக்கி வச்சுக்கனுமில்ல ..”
“ஹலோ என்ன அதுக்குள்ள காதல்லயிருந்து கல்யாணத்துக்குப் போய்டீங்க.. விட்டா அப்படியே புள்ளை பெத்து…”
“ஆமாம் ஜெய் மறந்தே போயிட்டேன்.. அந்த பிள்ளைக்கு அட்மிஷனுக்கு இப்பவே நல்ல ஸ்கூல்ல புக் பண்ணி வைக்கனுமில்ல ..”
“அதுவே மக்கு பிள்ளையா உன்னை மாதிரி…சாரி சாரி நீ பெரிய புத்திசாலி கோல்டு மெடலிஸ்ட் ..நான் தான் மக்கு. என்ன மாதிரி பிள்ளை பொறந்திருச்சுனா அவ்வளவு தான் சீட் கிடைக்கிறதே பெரிய கஷ்டம் நிறைய காசு கொடுத்துதான் வாங்கனும் ..”
“ஏண்டி இது நல்லா இருக்கா உனக்கு? “என்று செல்லமாக தலையில் கொட்டினான்.
” ஐயோ ஆமாம்ல்ல ஒரு பிள்ளையோட நிறுத்திட்டா எப்படி? அது ஸ்கூலுக்கு போய் …இருக்கிற டயத்துல அடுத்தது ரிலீஸ்.. அப்புறம் அந்த புள்ள ஸ்கூலுக்கு போற நேரத்துல அடுத்தடுத்து ரிலீஸ் ..”
“ஏய் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இத்தனை புள்ள பெத்துகிட்டு …நீ ரோட்ல போனா அவ்வளவுதான் ஊரே சிரிக்கும் ..”
“ஜெய் நீயும், நானும் நாலஞ்சு பிள்ளைங்களோட ஒரு கார்ல ஊர் ஊரா போனா எப்படி இருக்கும்.. ஜாலியா இருக்குல்ல.. வேற ஆளே வேண்டாம்.. நம்ம குடும்பமே ஒரு பெரிய கூட்டமா இருப்போம்…”
“ஏண்டி கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? எவ்வளவுத் தான் கற்பனை பண்றதுன்னு இல்லையா” என்றவன் ஐஸ்கிரீமை கழுவ போனான்.
சற்று முன் இருந்த சஞ்சலம் மறைய அவன் தேவதை தடவிய ஐஸ்கிரீம்மால் முகம் மட்டுமல்லாது அகமும் குளிர்ந்து போயிருந்தது …புயலுக்கு முன்னே வரும் அமைதியைப் போல அவர்களுடைய நாளும் அன்று சந்தோஷமாக கழிந்தது. வரப்போகும் சவால்களைப் பற்றி தெரியாமல் …
(அலை வீசும். 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings