in ,

கரை தொடாத அலைகள் (நாவல் – அலை 1) ❤ – தி.வள்ளி.  திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

முன்னோட்டம் ..🏃🏃🏃🏃

அன்பிற்கினிய தோழமைகளுக்கு….💐💐💐

வணக்கம்🙏🙏🙏 இத்தொடர்💗 ” கரை தொடாத அலைகள் .”.💗.’.வித்தியாசமான ஒரு காதல் கதை ..

 காதலிக்கும் இனிய காதல் உள்ளங்கள்💑 ஒருபுறம் …குடும்ப உறவுகள்🏫 உணர்வுகள், நிகழ்வுகள் மறுப்பக்கம்.. இரண்டுக்கும் இடையே ஊஞ்சலாடும் காதல் வெல்லுமா?? இல்லை கொல்லப்படுமா? …விடையளிக்கும் என் தொடர். உங்கள் பொன்னான நேரத்தை வீணாகாமல் திருப்தியளிக்கும் வண்ணம் நீரோடையாய் செல்லும் என்று மட்டும் உறுதி கூறுகிறேன் …💪💪💪..நன்றி

                                                            #######################

 💗💗கரை தொடா அலைகள்…💗💗

அலை-01 

சென்னையின் புறநகர் பகுதி …அடிக்கும் அனல் காற்றையும் மீறி லேசான குளுமை தரும் கடல் காற்றையும் உணர முடிந்தது. மரங்கள் அடர்ந்த அந்த ‘நாச்சியார் பொறியியல் கல்லூரி’ முதல் ஆண்டு மாணவர்களை எதிர்பார்த்து சற்றே விழாக்கோலம் பூண்டிருந்தது …மாணவர்களுடன் அவர்கள் பெற்றோர்களும் சேர்ந்து அன்று வர அனுமதி இருந்ததால், இரு தரப்பினரையும் அங்கே பார்க்க முடிந்தது. ஹாஸ்டலில் சேர நிறைய மாணவர்கள் சாமான்களுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

உள்ளே வருபவர்களை வாசலில் சந்தனம், குங்குமம், பூ கொடுத்து வரவேற்று கொண்டிருந்தனர் சில சீனியர் மாணவ மாணவியர் ….காலை பதினோரு மணி வாக்கில் ஆடிட்டோரியத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் அவர்களை வரவேற்று பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வளவு அமர்க்களங்களையும் மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா. அவள் சினேகிதிகள் மற்ற வேலைகளில் பரபரப்பாக இருக்க, இவள் மட்டும் ..தனிமையை நாடி இந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள். காவ்யா பொறியியல் கடைசி வருட மாணவி .நகரின் மிகப் பிரபலமான பிஸினஸ்மேன் இராம்சந்த்ன் ஒரே செல்லப் பெண் .பல கோடி சொத்துக்கு சொந்தக்காரி.

காவ்யா …பிரம்மன் குஷியான மூடில் இருக்கும் போது பார்த்து பார்த்து செய்த அழகோவியம். லட்சணமான முகம்.. தீர்க்கமான கண்கள்.. எடுப்பான நாசி.. வாழைத்தண்டாய் கைகால்கள்..நல்ல கோதுமை நிறம்.பெண்களேப் பார்த்து பொறாமைப்படும் அழகு …பின் பசங்க பின்னாடி அலைய கேட்பானேன் ..தினமும் ரெண்டு பேர் பிரபோஸ் பண்ண அலுத்துப் போனாள். காவ்யா.

காவ்யாவை தனிமையை அனுபவிக்க விடாமல், தோழிகள் சூழ்ந்து கொண்டனர் .எல்லோரிடமும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட காவ்யாவிற்கு ஒரு பெரிய தோழிகள் பட்டாளமே உண்டு.

“ஏண்டி இத்தனை பேரு உன் பின்னாலயே சுத்துறாங்க.. எங்களை எல்லாம் பார்த்தா இவனுங்களுக்கு பொண்ணா தெரியலையா ..” அலுத்துக் கொண்டாள் ரம்யா.

“இவளோட இதய சிம்மாசனத்தில் தான் பசக்குனு ஒருத்தன் பசை போட்டு ஒட்டிகிட்டானே.. அப்புறம் வேறு யாரு உள்ளே நுழைய முடியும்? ” என்றாள் ராதிகா.

“ஆமா இல்ல இப்ப தான் நினைவு வந்தது எங்கடி உன் ஜெய்ய காணோம்..பாத்துடி புதுசா வந்த பட்டாளத்தில யாருக்காவது ரூட் விட பின்னாலேயே போய்கிட்டிருக்கப் போறான்? புடிச்சு இழுத்துட்டு வா”

“போங்கடி உங்களுக்கு வேலையே கிடையாது. எதுக்கு என் உயிரை எடுக்கிறீங்க கொஞ்ச நேரம் தனியா விடுங்களேன் “

காவ்யா கோபப்பட ..

“சரிடி.. அவ ஆளை எதிர்பார்த்து உட்காந்துகிட்டிருக்கா. நாம இங்க இருந்தா அவளுக்கு இடைஞ்சல்.. அதான் நம்மளை தொரத்துறா. அவ கழுத்தைப் பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி நாம போயிடுவோம் “என்றாள் கீதா.

“அதைச் செய்யுங்க! போய் தொலைங்க” என்றாள் காவ்யா ..

உண்மையாகவே மன சஞ்சலத்தோடு ஜெய்யை எதிர்பார்த்து தான் அவள் உட்கார்ந்திருந்தாள். தன் மனப்போராட்டம் தெரியாமல் தன் தோழிகள் கிண்டல் அடிக்கவும் கோபம் வந்தது.

கொட்டிக் கிடக்கும் செல்வம்..எப்போதும் பிசினஸ் பிசினஸ் என்று அலையும் அப்பா. தன் மகள் மேல் பாசம் வைத்திருந்தாலும் அதை வெளிக்காட்ட கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை. அந்த நேரத்திலும் சில கோடிகளை சம்பாதிக்க ஆசைப்படும் மனது அவருக்கு.கோடிகளால் எதையும் விலைக்கு வாங்கிவிடலாம். கோடிகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்.. என்பதே அவருடைய கொள்கை.

அதற்குக் கொஞ்சம் குறையாத அவருக்கு சரியான இணையாக இருந்தாள் காவ்யாவின் அம்மா மாலினிதேவி. எப்போதும் அவளைச் சுற்றி நவநாகரீகமான பெண்கள் கூட்டம். லேடிஸ் கிளப் ..ரோட்டரி கிளப் என அனைத்து சங்கங்களுக்கும் தலைவி. புகழுக்காக சமூக சேவை செய்வதில் இருந்த ஆர்வம்.. வீட்டை கவனிப்பதிலேயோ பெண்ணுடன் நேரம் செலவழிப்பதிலேயோ அவளுக்கு இருந்ததில்லை. மொத்தத்தில் காவ்யா என்ன கேட்டாலும் கிடைத்தது, அது எவ்வளவு விலை என்றாலும் பாசத்தை தவிர .

அறியாத பருவத்தில் பொருட்கள் மேல இருந்த ஆர்வம், வளர வளர பதின் பருவத்திற்கு வந்த பிறகு வெகுவாக குறைந்துவிட்டது .இயல்பாக அந்த வயது பெண்களுக்கு இருக்கும் ஆசை கூட அவளிடம் கிடையாது.பாசம் ஒன்றிற்கே அவள் மனம் ஏங்கியது. அதனாலேயே பாசம் காண்பித்த சாதாரண குடும்பத்து பெண்கள் கூட அவளை எளிதாக கவர்ந்து, அவளுக்கு தோழியானார்கள். அவளுடைய எளிமையான குணம் எல்லோருக்கும் பிடித்திருக்க, அவளுடைய நட்பு வட்டம் இன்னும் இன்னும் பெருகியது.மொத்தத்தில் வீட்டில் இருந்தபோது இருக்கும் இறுக்கம் தளர்வதற்கு ,வெளியே சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் போது அவளுக்கு கிடைத்த சந்தோஷம் உதவியது.

பள்ளியில் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பிளஸ் ஒன்னில் சேர்ந்தான் ஜெய்..மிகவும் சாதாரண குடும்பத்து பையன். கஷ்டப்பட்டு அவன் அப்பா, அம்மா அவனை படிக்கவைத்தார்கள். அவனுடைய புத்திசாலித்தனமும், அவன் ஆசிரியர்களே திணரும் கணக்குகளை மிகவும் அசால்ட்டாக சால்வ் பண்ணும் விதமும் வெகுவாகவே காவ்யாவை கவர்ந்தது.மற்ற பாடங்களில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்த காவ்யாவிற்கு கணக்கு மட்டும் சிம்மசொப்பனம்.

அவளுக்கு தெரியாத சரியாக புரியாத பாடப்பகுதியை வகுப்பு முடிந்த பிறகு ஜெய் சொல்லிக் கொடுப்பான், மறு நாளைக்குரிய வீட்டுப் பாடங்களையும் எழுதுவதற்கு உதவி செய்வான்.எந்தவித விகல்பமுமின்றி அவளிடம் பழகிய ஜெய் அவளை வெகுவாக கவர்ந்தான்.

மிகப் பெரிய பணக்கார வீட்டு பெண் என்பதால் முதலில் சற்று ஒதுங்கியிருந்த ஜெய், அவளுடைய எளிமையான குணத்தையும், எல்லோரிடமும் பழகும் இனிமையான சுபாவத்தையும், கண்டு ஆச்சரியப்பட்டுப் போவான்.

இருவருக்குள்ளும் ஒரு இனிமையான நட்பு தொடர,பள்ளி முடிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் பேரில் ஒருவருக்கு பிடிப்பு அதிகமானது .

நிறைய மதிப்பெண் பெற்ற ஜெய் எந்த சிபாரிசும் இல்லாமல் நாச்சியார் கல்லூரியில் இடம் கிடைத்து விட, பொறியியல் படிப்பில் சேர்ந்தான்.அவன் இல்லாத அந்த ஒரு வருடம் மிகவும் கடினமாக இருந்தது காவ்யாவிற்கு. அப்பவும் கணக்கில் உள்ள சந்தேகங்களை ஜெய் வீட்டிற்குப் போய் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணிநேரம் படித்து விட்டு வருவாள். ஜெய் அப்பா அம்மாவிற்கு நல்ல அன்போடு பழகும் அவளை ரொம்பவே பிடிக்கும்.

காவ்யா படித்து முடித்ததும், அப்பாவிடம் சண்டை போட்டு இதே கல்லூரியில் முதலாண்டு மாணவியாக நுழைந்தாள். இதே போல ஒரு கோலாகலமான நாளில் அவளை சீனியராக ஜெய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றான்..ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள …அவள் கையிலிருந்த ரோஜா மலரைப் போல அவள் மனதிலும் காதல் மெல்ல மலர்ந்தது ..

அந்த நாள் மலரும் நினைவுகளை மனதில் கிளப்பிவிட, அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்த காவ்யாவின் செல்போன் அடித்தது.

லைனில் அம்மா “காவ்யா இன்னிக்கு காலேஜுக்கு போக வேண்டாம்னு சொன்னாலும் பிடிவாதமா பங்க்ஷன் இருக்குன்னு போயிட்ட…சாயங்காலம் 5 30..மணிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க.. அதுக்குள்ள 3 மணிக்காவது நீ இங்க இருக்கணும் “..கண்டிப்பாக சொல்லி விட்டு போனை வைத்தாள் மாலினி தேவி.

ஜெய்யை எதிர்பார்த்து காத்திருந்த காவ்யாவின் மனம் குழப்பமும் கலக்கமுமாக இருந்தது … அதேபோல அவளை அதிர்ச்சியுறச் செய்யும் இன்னொரு விஷயத்தை ஜெய் வைத்திருந்தான் அவளிடம் கூற …

(அலை வீசும்..🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நல்ல மனம் (சிறுகதை) – ச. சத்தியபானு

    ஈரம் உலர்ந்தது (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்