இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரமணி ஆட்டோவிலிருந்து இறங்கி, அலைபேசியில், “ நரேன். சார். எந்த ரூம்?” என்றான்.
“ரமணி ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சா..? ரொம்ப நல்ல செய்தி. நீங்கள் இங்கே வரவேண்டாம். அங்கேயே நில்லுங்கள். வசந்த் வருவான். அவன் சொல்கிற இடத்திற்கு கூட்டிட்டு போயிட்டு வர்றீங்களா?” என்றான் நரேன்.
நரேன் திரும்பி, “வசந்த். நான் சொல்வதெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?. அன்று யானைகள் நம்மை விரட்டிய இடத்தில் இறங்கிக்கொள். சரியாக இந்த வரைபடத்திலே இருக்கிற மாதிரி நடந்தாய் என்றால் சரியாக அந்த சித்தரோட கல்லறை வரும். அதிலே தான் அந்த கற்பக செடி இருக்கிறது. திசை காட்டுறதுக்கு இந்த காம்பஸை வச்சிக்க.. எப்படியாவது அந்தச்செடியைக் கொண்டு வந்து விடு. மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். சே! இந்த நேரத்திலே பார்த்து,அந்த யானைக்கூட்டம் வந்து நம்ம பிளானையே வீணாக்கிடுச்சி… வச்ந்த்,,, கண்ணா.. நாலு கோடி … மற்ந்துடாதே… ம்..ம்… அப்புறம்.. அந்த கல்லறைக்கு நீ போறதை யாரும் பார்த்துடக் கூடாது… அது ரொம்ப முக்கியம்” என்றான் நரேன்.
வசந்த், வெளியே எட்டிப்பார்த்த போது கண்ணன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்
“என்னடா கிணறு வெட்ட புறப்பட்ட போது பூதம் கிளம்பின மாதிரி இருக்கு” என்றான் வசந்த் சலிப்பாக.
”என்ன?” என்று வெளியே எட்டிப்பார்த்த நரேன், “ஆமா இவன் எங்கே இங்கே வந்தான்” என்று முணு முணுத்துக் கொண்டே,
“இனி நீ ஆட்டோவில் போ ஏறாமல் இருப்பது வீண் சந்தேகங்களை ஏற்படும். என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.
“ இதெல்லாம் ஒரு பெரிய விசயமாப்பா?. டீக்கடை இங்கே அங்கே என்று கொஞ்சம் அலைத்து விட்டு திரும்பவும் மருத்துவ மனைக்கு வந்து இறங்கினா.. நொந்து போய் வீட்டுக்குத் திரும்பப் போகிறான். அப்புறமா மெதுவாக காட்டுக்குள்ளே போனாப் போச்சு”
“சூப்பர். டேய் வச்ந்த், நீயும் எப்பவாவது மூளையைக்கசக்க ஆரம்பித்திருக்கிறாய்…ம்.. நடத்து” என்று வசந்தின் முதுகில் தட்டிய போது” ஆ” என்றான் நரேன்.
“என்னடா?” என்று பயந்தான் வசந்த்.
“ஒண்ணுமில்லே…உன் முதுகிலே தட்டப்போய் அடிபட்ட என் கை வலிக்க ஆரம்பிச்சிடுச்சி.”
“சரி..சரி…உடம்பை பார்த்துக்கொள். வருகிறேன்.” கிளம்பினான் வசந்த்.
“வெற்றியோடு திரும்பி வா. நாம் இன்றைக்கு கொண்டாடி விடுவோம்” என்றான் நரேன்.
கீழே வந்து, ரமணியின் ஆட்டோவில் ஏறி அங்கேயிருந்தக் கோயிலுக்குச் சென்றான். பின்னாலே கண்ணன் ஆட்டோவில் தொடர்வதை தெளிவு படுத்திக்கொண்டான்.
கோயிலிலிருந்து அருகிலுள்ள் ஹோட்டலில் வந்திறங்கி, ஒரு வடையும் காபியும் சாப்பிட்டான். பின் வந்து ஆட்டோவில் ஏறியதும், கண்ணன் வந்த ஆட்டோ பின் தொடர்வதை தெளிவு படுத்திக்கொண்டவன், “ரமணி, கொஞ்சம் ஆஸ்பத்திரிக்கு திரும்பிப் போக வேண்டுமே…” என்றான்.
“என்ன சார். நரேன் சார் உங்களை காடுப்பக்கமா அழைச்சிட்டுப் போகச் சொன்னாரு. நீங்க திரும்ப ஆஸ்பத்திரிக்கு திரும்பிப் போக வேண்டும்கிறிண்ங்க”
“பர்சை மறந்து வச்சிட்டு வந்துட்டேன். காசு எடுத்துட்டு வரல்ல…ஹோட்டலேயும் கடன் தான் சொல்லிட்டு வந்தேன்”
“காசு ஒரு மேட்டரா சார். அப்பால் வாங்கிட்டா போச்சி.. வேற எங்கேயாவது போகணும்ணா சொல்லு சார்.” என்றான் ரமணி
”அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா…. நீ ஆஸ்பத்திரிக்கு திரும்பிப் போ. என்னை இறக்கி விட்டுட்டு ஒரு ரவுண்டு அட்ச்சிட்டு வா. அப்பால காட்டுப் பக்கம் போலாம்” என்றான் வசந்த்.
“என்னமோ தலையச்சுற்றி மூக்கைத் தொடுகிறீங்க.. சரி” என்று
மருத்துவமனையில் வசந்தை இறக்கி விட்டு விட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பவும் மருத்துவமனைக்கு வந்தான்.
ஆட்டொவிலிருந்து இறங்கிய வசந்த் மருத்துவமனைக்கு வந்து ஒளிந்து நின்று கண்ணன் வந்த ஆட்டோ திரும்பிச் சென்ற பிறகு மெதுவாக, ரமணியின் ஆட்டோவில் ஏறி” இப்போ நீ அந்த காட்டு பகுதிக்கு வண்டிய விடுப்பா” என்றான்
அடுத்து இருந்த சந்தின் மறைவில் ஒளிந்து நின்ற கண்ணன் ஆட்டோ அவனை பின் தொடர ஆரம்பித்தது….
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings