இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கண்ணன் அலுவலகத்திற்கு வந்த போது எதிரே பறந்து வந்த புறாவைப்பார்த்து, ‘ நரேன் சார் இங்கிருந்தால் இந்தப்புறாவை இரசித்துக் கொண்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தான்
“வாங்க புதுமாப்பிள்ளை. வாழ்த்துக்கள்” என்றார் பிரபு.
சிரித்துக்கொண்டே நின்ற கண்ணனைப் பார்த்து, “கண்ணன் இப்படி கோட்டை விட்டு விட்டீர்களே…” வருத்தமாக கை நீட்டினார்.
மன்னிச்சிக்குங்க சார். நானும் அவர்கள் அங்கே இங்கே சுற்றி விட்டு வீடு திரும்பி விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி யானை அது இதுண்ணு… சாரி சார். சரி.. இனி என்ன பண்ணணும்ணு சொல்லுங்க சார். விட்டதை பிடிச்சிரலாம்” கொஞ்சம் உச்சுக்கொட்டிக்கொண்டு சொன்னான்.
“சரி. நடந்ததை சொல்லுங்கள். என்ன செய்யலாம்ணு யோசிக்கலாம்” என்றார் பிரபு.
கண்ணன் அவர்கள் கிளம்பியதிலிருந்து, பாம்பு வந்ததை,அவன் அடித்து விரட்டி, அருகில் இருந்த செடியில் அவர்கள் அந்த மருந்து செடியிருப்பதாக ஏமாந்து…” என்றவாறு வரிசையாகச் சொன்னான்.
“கண்ணன் நான் அங்கே போய்ப்பார்த்தால் ஏதாவது வாய்ப்பு இருக்குமா?” என்று கேட்டார். பிரபு
“எனக்கு சரியாகச் சொல்லத்தெரியல சார். ஆனா நீங்க போய் அங்கே என்னப் பார்க்கப் போறீங்கண்ணு தெரியல. மற்றபடி உங்க விருப்பம்”
“அங்கே என்னடாண்ணா அந்த மந்திரி கத்துறாரு. நாம என்ன கையிலே வச்சிட்டு கொடுக்காத மாதிரி என்னவெல்லாமோ பெனாத்துறாரு. அவரும் பாவம்.. எல்லாரும் கை நீட்டி பணம் வாங்கியாச்சு…இவனுக எப்படியாவது அந்த கற்பகச் செடியை கொண்டு வந்துருவானுவ. நாம எப்படியும் லவட்டிட்டு போயிடலாமுண்ணு நெனச்சா….”
சார். இனி என்ன பண்ணலாமுண்ணு பாருங்க..” என்றான் கண்ணன்.
“ அதுவும் சரி தான். ம்ம்ம்ம்… கண்ணன் ஒண்ணு பண்ணுங்க. நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் அந்த நரேனுக்கும், வசந்துக்கும் என்னாச்சுண்ணு பாருங்க. நான் அவனுக கம்ப்யூட்டரிலே என்னத தேடினாவன்னுப் பார்க்கிறேன்.”
“சார்… எங்கே அட்மிட்டாயிருக்காங்க தெரியுமா?”
ஆங்… நம்ம ஆத்தங்கரை பக்கத்திலே ஏதோ சிஸ்டர்ஸ் நடத்துற ஆஸ்பத்திரி தான்… ஆங்… புனித அன்னம்மாள் ஆஸ்பத்திரி தான். ஏதோ வசந்த் தான் போன் பண்ணினான். நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் அவனுகளுக்கு என்னாச்சுண்ணு பார்த்து எனக்குச்சொல்லுங்க..”
”சரி சார்…” என்றான் கண்ணன்.
கண்ணன் புனித அன்னம்மாள் மருத்துவமனைக்கு வந்த போது அங்கே ஒரே கூட்டமாக இருந்தது.
அவன் எட்டிப்பார்த்தான். யாரோ அடி பட்டு படுக்கையில் தூக்கிக் கொண்டு ஓட பின்னாலே ஒரு பெண் அழுது கொண்டே ஓடினாள்.
அவன் அந்தக்கூட்டத்தை தாண்டி, வரவேற்பறைக்கு வந்து நரேன், வசந்த் என்று அங்கே இருந்த வெண்ணாடை நர்ஸிடம் கேட்டான்.
“ஓ! யானை கிட்டே அடி பட்டவங்களா? முதல் மாடியிலே இருபதாம் அறையில் ஒருத்தரும்… ம்ம்ம்… இன்னொருத்தர் ஐ.சி.யூ விலே இருக்கிறார்.” என்றாள் அந்த நர்ஸ்.
“அடி பலமா பட்டிருக்குமோ சிஸ்டர்?” என்று கேட்டான் கண்ணன்.
“ம்.. சரியா தெரியல… நீங்க எதுக்கும் மேலே போய்ப்பாருங்க” என்றாள் டாக்டர் வருவதைப் பார்த்து எழுந்து நின்று உடையை திருத்திக்கொண்டு. கண்ணன் மாடிப்படி ஏறி முதல் மாடிக்கு வந்தான்.
யாரிடம் கேட்கலாம் என்று திரும்பிய போது வசந்த் கையில் கட்டுப்போட்டவாறு அங்கே தென்பட்டான்.
“ஹலோ வசந்த். “ என்று கண்ணன் கத்த எல்லோரும் அவனைத்திரும்ப்பார்க்க, வசந்தும் திரும்பி, “ ஏய். கண்ணன் இங்கே எங்கே?” என்று கேட்டான்.
”உங்களைத்தான் பார்க்க வந்தேன். நரேன் சார் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.
”கொஞ்சம் பலமான அடிதான். இன்னும் நினைவு வரவில்லை. எங்களுக்கு கொஞ்சம் காபி வாங்கி வருகிறீர்களா?” என்றான் வசந்த்.
”நான் ஒரு எட்டு நரேன் சாரைப் பாத்துட்டு போய் என்ன வேணும்ணாலும் வாங்கி வருகிறேனே..” என்றான்.
“சரி. சத்தம் போடாதீங்க. என்று அந்த ஐ.சி.யூ விலே படுத்திருந்த நரேனைக்காட்டினான்.
நரேனுக்கு உடம்பு முழுவதும் கட்டுப்போட்டிருந்தது. ஒரு பக்கம் சலைன் ஏறிக்கொண்டிருக்க…இன்னோர் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings