இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
போராளி வழக்கறிஞர் அபிதாவிற்கு நேர்ந்த விபத்தைக் குறித்து நித்யாவின் வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிந்து அதிர்ந்த அபிதாவின் நண்பரான நீதிபதி இம்ரான். நித்யாவை அலைபேசியில் அழைத்தார்.
“அபிதாக்கு என்ன மேடம் ஆச்சு? இப்போ பொஞ்சம் முன்னாடி தான பேசினேன்? ஷி இஸ் அ வொன்டர்ஃபுள் அண்ட் ப்ரேவ் உமன்!“ என்று பதட்டத்துடன் வினவினார், நீதிபதி இம்ரான்.
“எஸ் ஸர்! ரெஸ்க்யூ பண்ண பாண்டட் லேபர் ஒரு பையன அவனோட பேரண்ட்ஸ்ன்னு பொய் சொல்லி யாரோ கூட்டிட்டு போயிருக்காங்க ஸார். அதப் பத்தின டாக்யுமெண்ட்ஸ், சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் எடுத்துட்டு அபிதா மேடம் கலெக்டரேட் வந்துட்டு இருந்தாங்க, ஸர். அவங்களுக்காகத் தான் நான், கலெக்டர் மேடம், டி.சி. எல்லாரும் வெய்ட் பண்ணிட்டிருந்தோம், ஸர். திடீர்னு கலெக்ட்ரேட் முன்னால இருக்ற பிரிட்ஜ்ல அவங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆய்ட்டதாகவும், ஹெட் இஞ்சுரி… ஸ்டான்லி ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போயிருக்காங்கனு சொன்னாங்க, ஸர். இப்போ ரொம்ப சீரியஸ்னு சொல்றாங்க, ஸர்“ என்றாள், கண்கலங்க, நா தழுதழுக்க.
“வேணும்னு தான் பண்ணிருக்காங்க. ஆக்சுவல்லி ஷி கால்ட் மி பிஃபோர் ஸ்டார்டிங் டு த கலெக்டரேட். இந்த விஷயம் பத்தி தான் பேசினாங்க. நேற்று யாரோ ஒரு விக்டிம விசாரிக்கறப்ப, போண்ணுங்கள கடத்தி ப்ராஸ்டிடியூஸனுக்கு யூஸ் பண்றவங்களப் பத்தி தெரிய வந்ததுன்னும், அவங்க மேல போலீஸ் கம்ளெய்ண்ட் கொடுத்ததாவும், அதே ஆளுங்க தான், இப்போ இந்த பையன கடத்திருக்றதாவும், கலெக்டரேட் போய்ட்டு வந்து மீதிய சொல்றதாவும் சொன்னாங்க. ஸோ, அந்த ஆளுங்க தான் இவங்கள ப்ளான் பண்ணி அடிச்சிருக்கணும்“ என்றார் அவர்.
“அவங்க யாருன்னு எதாவது சொன்னாங்களா, ஸர்?“ என்று கேட்டாள் நித்யா பதட்டமாக.
“இல்ல“ என்றார் அவர்.
“நேத்து அவங்க கொடுத்த கம்ப்ளெய்ண்ட்ட பாத்தா தெரிஞ்சிடும்ல, ஸர்?“ என்று கேட்டாள், நித்யா.
“ஆமா“ என்றார் அவர்.
“அப்போ நான் டி.சி.ஸர்ட்ட சொல்றேன், ஸர். தேங்க்யூ ஸர்“ என்ற கூறி தொடர்பைத் துண்டித்து, துணை ஆணையரை அழைத்து விபரம் தெரிவித்தாள் நித்யா.
“என்னோட ஏ.சி.ய உங்க கிட்ட பேசச் சொல்றேன், விவரம் சொல்லுங்க“ என்றார் அவர்.
சிறிது நேரத்தில் உதவி ஆணையர் பாண்டியன் அழைப்பில் வந்தார். விவரம் கேட்டுவிட்டு, “விசாரிச்சுட்டு லைன்ல வர்றேன், மேடம்“ என்றார்.
அவரது அலுவலகத்திலும், பிற துணை ஆணையர் அலுவலகத்திலும் விசாரித்து, அபிதா முன்தினம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாக ஒரு கும்பல் மீது கொடுத்த புகாரின் நகலைப் பெற்றனர். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த சரியான முகவரி விவரங்கள் இல்லாததால் எரிச்சலடைந்த உதவி ஆணையர், “சே! என்னய்யா இது! எந்தப் பக்கம் போனாலும் முட்டிக்கிது!“ என்று புகார் நகலை கசக்கி எரிந்தார்.
“டென்ஷனாகாதீங்க ஸார். ஹோம்ல இருக்க ஏதோ ஒரு விக்டிம விசாரிக்றப்ப தெரிஞ்சதுன்னு தான அந்தம்மா கொடுத்திருக்காங்க. அந்தப் பொன்ன விசாரிக்கலாம் ஸார்“ என்றார் ஆய்வாளர்.
உடனடியாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர். இராயபுரம் ஆண் குழந்தைகள் காப்பகத்திலிருந்து மைக்கண்ணனை அழைத்துச் சென்ற அதே நேரத்தில் புரசைவாக்கம் பெண் குழந்தைகள் காப்பகத்திலிருந்து அந்தப் பெண்ணும் அழைத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது.
“இங்கயும் அதே மாதிரி பொய் டாக்யுமென்ட்ஸ் குடுத்து தான் கூட்டிட்டு போயிருக்கப் போறான். இப்ப என்னய்யா பண்ணச் சொல்ற?“ என்றார் உதவி ஆணையர், ஆய்வாளரைப் பார்த்து.
காப்பக மேற்பார்வையாளரிடமிருந்து ஆவணங்களைப் பெற்று சரி பார்த்த ஆய்வாளர், “கரெக்ட் ஸார். ஸேம் கைன்ட் ஆஃப் டாக்யுமென்ட்ஸ். இங்கிருக்க சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் என்னாச்சுன்னு பாக்றேன் ஸார்“ என்றார்.
“இங்க மட்டும் விட்டு வச்சிருப்பான்! அடப் போய்யா!“ என்றார்.
எனினும் அங்கேயும் சரிபார்த்துவிட்டு, அங்கேயும் ஆதாரங்கள் அழிக்கப் பட்டிருப்பது கண்டு, “ஏம்மா யாரோ வந்து பேரண்ட்ஸூன்னு சொன்னா அனுப்பிடுவீங்களா, அந்தப் பொண்ண விசாரிக்க மாட்டீங்க?“ என்று கடுப்புடன் கேட்டார் மேற்பார்வையாளரிடம்.
“அந்தப் பொண்ணு எதுவும் அப்ஜெக்ஷன் தெரிவிக்கல, ஸர்“ என்றார் மேற்பார்வையாளர்.
“அதெப்படிம்மா அப்ஜெக்ஷனே இல்லாம யாரோ ஒருத்தர் கூட போகும்?“ என்று கேட்டுக் கொண்டிருந்தவருக்கு, தூரத்தில் நின்று கொண்டிருந்த துப்புறவுப் பணியாளரின் கண்கள் ஏதோ சொல்ல அப்படியே மெதுவாக நகர்ந்து, “கொஞ்சம் குடிக்க தண்ணி கெடைக்குமா?“ என்றார்.
“தோ எடுத்துக்குனு வரேன்“ என்றவாறு அந்தம்மா நகர, இவர் வெளியே நின்றிருந்த உதவி ஆணையரை நோக்கி நகர்ந்தார்.
“இங்கியும் அதே மாதிரி தான் கரெப்ட் ஆய்ருக்கு, ஸர். ஆனா கன்ட்ரோல் ரூம்லருந்து ஒரு வீடியோ வந்திருக்கு ஸார்“ என்றார் ஆய்வாளர், உதவி ஆணையரிடம்.
“என்ன வீடியோ?“ என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஆயா தண்ணீர் கொண்டு வந்தார்.
தண்ணீரை வாங்கிய படியே,“ஏம்மா உங்களுக்கு ஏதாவது தெரியும்?“ என்று கேட்டார், ஆய்வாளர்..
அந்தம்மா தயங்கியவாறே விழிக்க, “சும்மா சொல்லுங்க. நீங்க சொன்னீங்கன்னு யார்ட்டயும் சொல்ல மாட்டேன். அந்தப் பொண்ண காப்பாத்தணும்ல?“ என்றார் அவர்.
“இல்ல ஸாரு. சூப்பர்வைஸர் மேல தப்புல்ல. உசிரோட வூட்டுக்குப் போவணும்ல, ஸ்கூலுக்குப் போய்ருக்க ஒம் பொண்ணு பத்தரமா திரும்பணும்ல, கம்னு அனுப்புறியான்னு கத்தியக் காட்னாங்க ஸாரு“ என்றார் அவர்.
“யாருன்னு தெரியுமா? எப்டி இருந்தாங்க?“ என்று கேட்டதற்கு,
“அதெல்லாந் தெரியாது. தடி தடியா இருந்தாணுங்க“ என்றார்.
“சரி நீங்க போங்க“ என்றவர், உதவி ஆணையரைப் பார்த்து,
“அந்தப் பையன ஹோம்லருந்து வெளிய கூட்டிட்டுப் போறப்ப அந்த வண்டி நெக்ஸ்ட் கேமராக்கு அப்பியர் ஆகற எடத்துல செக் பண்ணச் சொன்னோம்ல, ஸார்? அந்த ஃபுட்டேஜ் தான் ஸார் கண்ட்ரோல் ரூம்லருந்து வந்தது. சந்தேகத்துக்குரிய வண்டி நம்பர மார்க் பண்ணி அனுப்பிருக்காங்க ஸார். இங்கேருந்தும் வெளிய போன வண்டிகள மெயின் ரோடு கேமரால செக் பண்ணியாச்சு ஸார். ரெண்டுமே பேங்ளூர் ஹை வே ல போயிருக்கு ஸார். ஆனா, செந்நீர்குப்பத்துக்கப்புறம் எங்க போச்சுன்னு தெரியல ஸர்“ என்றார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings