in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 25) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மைக்கண்ணனை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு இல்ல மேற்பார்வையாளர் கூறியதைக் கேட்ட நித்யா, நேரில் அங்கு சென்று, ”அவனுக்கு பேரண்ட்ஸ் கிடையாது. பேரண்ட்ஸ்ட்ட ஹேண்ட் ஓவர் பண்ணினோம்னு எப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“டி.சி.பி.ஓ. வ கேளுங்க மேடம்” என்றார் மேற்பார்வையாளர்.

டி.சி.பி.ஓ. என்று சொல்லப்பட்ட மாவட்ட குந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டால், அவர், ”நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை” என்றது பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல்.

குந்தைகள் பாதுகாப்பு நலக் குழுமத்தின் உறுப்பினரைக் கேட்டால், “இது கோர்ட் மாதிரி பவர்ஸ் உள்ள அமைப்பு. கோர்ட்ல போய் ஜட்ஜ்கிட்ட கேள்வி கேப்பிங்களா?  எங்க முடிவக் கேள்வி கேட்கவும் உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்ல“ என்றார்.

மற்றொரு குந்தைகள் பாதுகாப்பு நலக் குழுமத்தின் உறுப்பினரும்,  போராளி வழக்கறிஞருமான அபிதாவிடம் கேட்ட போது, “நீங்க வொர்ரி பண்ணாதீங்க மேடம். எங்க பதவில்லாம் மூணு வருஷந்தான். அதுவும் இப்ப இருக்கற க்ரூப்புக்கு இன்னியோட முடியப் போகுது, மேடம். நாளைலருந்து நான் தான் இன்சார்ஜ். நீங்க சொன்ன கேஸ, நான் செக் பண்றேன் மேடம்“ என்றார் அவர்.

“தேங்க் யூ மேடம். ஆனா அதுக்குள்ள அந்தப் பையனுக்கு என்ன ஆகுமோன்னு டென்ஷனா இருக்கு மேடம்“ என்றாள் நித்யா.

“கண்டிப்பா டாக்குமெண்ட்ஸ் வாங்கிட்டுத்தான் அனுப்பிருப்பாங்க மேடம். நீங்க கலெக்டர் மேடம் கிட்ட பேசுங்க மேடம். நானும் டாக்குமெண்ட்ஸ் செக் பண்ணிட்டு சொல்றேன் மேடம்“ என்றார் அவர்.

மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் சென்றாள் நித்யா. “மேடம் சி.எஸ். மீட்டிங் போயிருக்காங்க மேடம். வந்துருவாங்க, உக்காருங்க“ என்றார் அவரது குமாஸ்தா.

நித்யாவுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. மைக்கண்ணனின் கலகல குறும்புச் சிரிப்பும், கடைசியாக பார்த்தபோது இருந்த துவண்ட முகமும் மாறி மாறி நினைவுக்கு வந்து அவளை அலைக்கழித்தன. நெஞ்சம் படபட வென அடித்துக் கொண்டது. ‘அவனை யார் கூட்டிச் சென்றிருப்பார்கள், என்ன செய்திருப்பார்கள்’  என எண்ணும் போது படபடப்புக் கூடியது. கை கால் எலும்புகளெல்லாம் கூசுவது போல் உணர்ந்தாள்.

ஒரு வழியாக மாவட்ட ஆட்சியர் வரவும் எழுந்து வணக்கம் தெரிவித்தவள், ‘அவர் பின்னாலே உள்ளே போகலாமா?’ என யோசித்த வேளையில், அவசரமாக மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளே சென்றார்.

நித்யாவிற்கோ பதற்றம் அதிகரித்தது. “என்ன ஸர் இது? அவசரம்னுதான சொல்லிட்டிருக்கேன். இப்போ இவரு உள்ளப் போய்ட்டாரே!” என்றாள் குமாஸ்தாவைப் பார்த்து.

அவர் தர்ம சங்கடமாய்ச் சிரித்துவிட்டு, “ரொம்ப அவசரமாயிருக்கும். அவர் வந்ததும் நீங்க உள்ள போய்டுங்க, மேடம்“ என்றார் அவர். 

 நித்யாவுக்கோ ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய்க் கழிந்தது. காத்திருப்பு அறைக்கும், குமாஸ்தாவின் அறைக்குமாய், உள்ளும் புறமுமாய் நடை பயின்றாள். நகத்தைக் கடித்தாள். ஆட்சியர் அறை வாசலையும், மேலே மாட்டப்பட்டிருந்த காமராவையும் மாறி மாறிப் பார்த்தாள்.  ஒரு வழியாய் மாவட்ட வருவாய் அலுவலர் வெளியேறவும், புயல் போல் பாய்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விஷயத்தைக் கூறினாள், நித்யா.

அவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு, “அந்த பாண்டட் லேபர் கேஸ் எவ்ளோ இம்பார்டண்ட்ணு தெரியும்ல? ஆர்கன் டிரான்ஸ்ப்ளாண்ட் பண்ண பையன யார் கூட அனுப்பினீங்க?“ என்றார்.

 “அவங்க பேரண்ட்ஸூன்னு டாக்குமெண்ட்ஸ் காட்னதுனாலதான் அனுப்பினோம், மேடம்“ என்றார் அவர்.

அவனுக்கு பேரண்ட்ஸ் இல்லன்னு பிரிலிம்னரி என்கொயரிலயே சொல்லியிருக்கான், மேடம்“ என்றாள் நித்யா.

“எல்லா டாக்யுமெண்ட்ஸூம் எடுத்துட்டு உடனே இங்க வாங்க“ என்ற மாவட்ட ஆட்சியர் காவல்துறை துணை ஆணையரை அழைத்து, “இம்மீடியட்டா அந்தப் பையன ட்ரேஸ் பண்ணுங்க. டிடெயில்ஸ் ஏ.சி.(லேபர்) கிட்ட வாங்கிக்கோங்க“ என்று கூறிவிட்டு, நித்யாவைப் பார்த்து, “நீங்க டி.சி. கூட கோவார்டினேட் பண்ணிக்கோங்க, நித்யா“ என்றார்.

“ஸ்யூர் மேடம். தேங்க்யூ வெரி மச் மேடம்“  என்றவாறு ஓரளவு நிம்மதியுடன் வெளியே வந்தாள் நித்யா.

அபிதாவிடமிருந்து அழைப்பு வந்தது. “மேடம் அந்தப் பையன யார் கூட்டிட்டுப் போயிருக்கான்னு கண்டுபிடிச்சிட்டேன். சிசிடிவி ஃபுட்டேஜ் காப்பியோட வந்துட்டிருக்கேன். டென் மினிட்ஸ்ல அங்க வர்றேன். கலெக்டர் மேடம்கிட்ட காட்டிட்டு புடிச்சிடலாம் மேடம். கவலப்படாதீங்க மேடம்“ என்றார்.

நித்யாவுக்கு போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது.

காவல் துணை ஆணையர் நித்யாவுக்கு அழைப்பு விடுத்து, “மேடம், சைல்ட் ட்ராஃபிக்கிங் கேஸ்ல உங்கள காண்டாக்ட் பண்ணச் சொன்னாங்க, கலெக்டர் மேடம். என்ன நடந்ததுன்னு கொஞ்சம் டீடெயில்டா சொன்னிங்கன்னா நல்லாருக்கும். பாய்ஸ் ஹோமுக்கு வந்திட்ரீங்களா?“ என்றார்.

“பாய்ஸ் ஹோம் வரதில பிரச்ன இல்ல ஸர். பட், டி.சி.பி.ஓ . வ எல்லா டாக்குமெண்ட்ஸையும் எடுத்திட்டு இங்க வரச் சொல்லிருக்காங்க, கலெக்டர் மேடம். அதுமட்டுமில்ல, சி.டபிள்யூ.சி மெம்பர் அபிதா மேடம் இப்பத்தான் கால் பண்ணாங்க. பையன யார் கடத்திருக்காங்கறத அவங்க கண்டு பிடிச்சிட்டதாகவும் , சி.சி.டி.வி. ஃபுட்டேஜோட இங்க வந்திட்ருக்றதாவும் சொன்னாங்க, ஸர்“ என்றாள் நித்யா.

“ஓ… தேட்ஸ் குட். அப்போ நானும் அங்கேயே வந்திட்றேன். கேஸ் ஈஸியா க்ளோஸ் ஆய்டும். நோ இஷ்யூஸ்“ என்றார் அவர்.

“தேங்க்யூ ஸர்“ என்ற நித்யா நிம்மதியுடன் காத்திருப்பு அறையில் அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும், காவல்  துணை ஆணையரும் அங்கு வர, மூவரும் மாவட்ட ஆட்சியரின் அறைக்குச் சென்றனர்.

“என்னம்மா இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிள்ளா இருக்கீங்க? பேரண்ட்ஸ் இல்லன்னு சொன்ன பையனுக்கு பேரண்ட்ஸூன்னு சொல்லிட்டு வந்தா, அவங்க கூட அனுப்பிடுவீங்களா?“ என்று கடிந்து கொண்டார்.

“இல்ல மேடம் ஆதார், வி.ஏ.ஓ. சர்ட்டிஃபிகேட் எல்லாம் கொடுத்திருக்காங்க, மேடம்“ என்று ஆவணங்களை எடுத்து கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு அழைப்பு மணியை அழுத்தி, குமாஸ்தாவை அழைத்த மாவட்ட ஆட்சியர், “இதோட ஆதென்டிசிடிய செக் பண்ணுங்க“ என்றவாறு அவற்றைக் கொடுத்தார்.

“சி.டபிள்யூ.சி மெம்பர் அபிதா மேடம் பையன யார் கடத்திருக்காங்கறத அவங்க கண்டு பிடிச்சிட்டதாகவும் , சி.சி.டி.வி. ஃபுட்டேஜோட டென் மினிட்ஸ்ல இங்க வந்திட்றதாவும் சொன்னாங்க, மேடம். பட், அவங்க சொல்லி மோர் தேன் ஹாஃப் என் ஹவர் ஆகுது. அவங்களக் காணோம், மேடம்“ என்றாள் நித்யா.

“ட்ராஃபிக் ஏதாவது இருக்கும். கால் பண்ணி செக் பண்ணுங்க“ என்றார் அவர்.

அப்போது உள்ளே வந்த குமாஸ்தா, “ஆதார் ஃபேக் மேடம். வி.ஏ.ஓ. சர்ட்டிஃபிகேட்டும் ஃபேக்காதான் தெரியுது. இருந்தாலும் கன்ஃபர்ம் பண்ணச் சொல்லி ஊட்டி கலெக்டரேட்டுக்கு ஃபேக்ஸ் பணணிருக்கேன் மேடம். ஃபைவ் மினிட்ஸ்ல சொல்றதா சொல்லிருக்காங்க“ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே , உள்ளே வந்த இன்னொரு குமாஸ்தா, “ஊட்டி கலெக்டரேட்லருந்து கால் பண்ணாங்க மேடம். வி.ஏ.ஓ. சர்ட்டிஃபிகேட் ஃபேக்காம் மேடம்“ என்றார்.

“எக்ஸ்பெக்டட் தான்“ என்று சொல்லியவாறே குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை வெறுப்புடன் நோக்கிய ஆட்சியர், “இப்போ என்ன சொல்லப் போறீங்க? ஆதார் செக் பண்ற ஆப்ஸெல்லாம் இருக்கில்ல. அதக் கூட செக் பண்ண மாட்டீங்களா? இனியாவது கொஞ்சமாவது பொறுப்போட வேலை செய்யக் கத்துக்கோங்க“ என்றார்.

“ஸாரி மேடம்“ என்றார் அவர் தலை குனிந்தவாறே.

காவல் துணை ஆணையருக்கு ஏதோ அழைப்பு வர, “ஸாரி மேடம்! ஒரு பேட் நியூஸ். அபிதா மேடம் கலெக்டரேட் வர்ற வழில ஆக்ஸிடெண்ட் ஆய்டுச்சாம். ஹெட் இஞ்சுரியாம். ஸ்டான்லி எடுத்துட்டு போயிருக்காங்க“ என்றார் அவர்.

நித்யாவுக்கு காலின் கீழ் பூமி நழுவியது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 24) – ஜெயலக்ஷ்மி

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 26) – ஜெயலக்ஷ்மி