இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உயர்வகை கட்டுப்பாட்டறையைப் பார்த்து ஒருவகை மிரட்சியில் இருந்த டி.எஸ்.பி.யிடம் ”பாஸ் மீட்டிங்ஸ், கான்ஃபெரன்சஸ்லாம் இங்க நடத்துவாருங்க ஸார்” என்றார் மேலாளர்.
”அதுக்கு எதுக்குங்க, கம்யூட்டர் சர்வர், ரேடியோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எல்லாம் இருக்குங்க?” என்று கேட்டார், ஒரு விவரம் தெரிஞ்ச ஆய்வாளர்.
”இங்க நெட் சரியா கெடைக்காதுன்னு உங்களுக்கே தெரியுமில்லீங்க, ஸார். இவங்க இண்டர்நேஷனல் லெவல்ல பிஸினஸ் பண்றவங்க. ஆன்லைன் கான்ஃபெரன்ஸ்லாம் கிளியரா இருக்கணுமில்லீங்க? அதுக்குதான் டெக்னாலஜிய அவங்களே டெவலப் பண்ணிக்கிட்டாங்க ஸார்” என்றார், அவர்.
”அது சரிங்க. அத உங்க ஆஃபீஸ்ல வைக்காம கெஸ்ட் ஹவுஸ்ல, அதுவும் மாடியில தனியா எதுக்கு வச்சிருக்காங்க?” என்று கேட்டார் டி.எஸ்.பி.
”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. ஐயாவத்தான் கேக்கணுங்க” என்றார் அவர்.
அப்போது வழக்கறிஞர்கள் இருவர் உள்ளே வந்தனர். அதிலொரு வழக்கறிஞர் டி.எஸ்.பி.யைப் பார்த்து, ”ஒரு வி.ஐ.பி. யோட கெஸ்ட் ஹவுஸ வந்து ஸியர்ச் பண்றீங்களே, ஸியர்ச் வாரண்ட் இருக்கா?” என்று கேட்டார்.
”நீங்க ரொம்பப் பெரிய எடம்னு தெரிஞ்சுதான் வந்திருக்கோம். வாரண்ட் இல்லாமையா வருவோம்? ஸாருகிட்ட வாரண்ட குடுப்பா” என்றார், எஸ்.ஐ.யைப் பார்த்து.
டி.எஸ்.பி.யின் அலைபேசிக்கு ஒரு ஐ,ஜி.யிடமிருந்து அழைப்பு வருகிறது. ”ஏதோ கெஸ்ட் ஹவுஸப் ஸியர்ச் பண்றீங்களாமே?”
” எஸ் ஸர். குட் ஆஃப்டர்நூன் ஸர்” என்றார் டி.எஸ்.பி.
”அவாய்ட் பண்ண முடியலியா?” என்று கேட்டார் ஐ.ஜி.
”ஹ்யூமன் ஆர்கன்ஸ் ட்ரேடிங் பண்றாங்கன்னு சொல்றாங்க ஸர். எஸ்.பி. ஸர் ஸ்பெஷல் டீம் ஃபார்ம் பண்ணிருக்காங்க ஸர். வாரண்ட் கூட வாங்கியாச்சுங்க ஸர்”
”வாரண்ட் வாங்கினா என்ன? இவ்ளோ நேரம் பாத்துட்டீங்கள்ள? கிளம்ப வேண்டியது தான?” என்றார் ஐ.ஜி.
”டீம் கூட இருக்காங்க ஸர். நீங்க எஸ்.பி. ஸர்ட்ட ஒரு வார்த்த பேசினீங்கன்னா, நல்லாருக்குங்க ஸர்” என்றார் டி.எஸ்.பி.
ஐ.ஜி. எஸ்.பி, இடம் பேசியபோது, ”விஷயம் மீடியா வரை போயிருச்சிங்க ஸர். பாக்கலாம் ஸர்” என்றார் எஸ்.பி.
“இந்த கன்ட்ரோல் ரூம்ல இருக்ற ஹைடெக் எக்யுப்மெண்ட்ஸ் பத்தி நமக்கெதும் தெரியாதுங்க ஸர். எக்ஸ்பெர்ட்ஸ் ஒப்பினியன் தான் வாங்கணுங்க. ஸோ இதுலருக்க ஹார்ட் டிஸ்க்ஸெல்லாம் ஸீஸ் பண்ணணுங்க. இல்ல எடத்த சீல் பண்ணிட்டு டெக்னிக்கல் எக்ஸ்பெர்ட்ஸ வரவச்சு தான் செக் பண்ணணுங்க ஸர்” என்றார் ஆய்வாளர்.
”ரொம்பப் பெரிய பெரிய எடத்லருந்தெல்லாம் ரெக்கமண்டேஷன்ஸ் வருது. அந்தச் சின்னப் பையன் ஏதோ சொன்னான்னு அந்தம்மா ஏதோ கலெக்டர் மூலம் லெட்டர் அனுப்பிருச்சு. மீடியாலயும் வந்துருச்சுன்னு நாம பாட்டுக்கு வாரண்ட தூக்கிட்டு வந்துட்டோம். இது வர உருப்படியா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல. எடத்த சீல் பண்ணிட்டு ஒண்ணும் இல்லண்ணா, நம்மள தொலைச்சிற மாட்டாங்களா? அந்த மேனேஜர் சொன்ன மாதிரி, இங்க தான் டவர் சரியா வராதே. அவங்க இண்டர்நேஷனல் லெவல்ல பிஸினெஸ் பண்றதா சொல்றாங்களே, அதுக்காக சொந்தமா டிரான்ஸ்மிட்டர், டவர்லாம் வச்சிருக்கலாம்ல?” என்றார் டி.எஸ்பி.
”கலெக்டர்ட்ட இருந்து லட்டர் வந்ததுன்னு எஸ்.பி. ஸர் தான நம்மள போகச் சொன்னாங்க ஸர்? நாம என்ன பண்றதுங்க, ஸர்? ஏதோ கொக வேற இருக்குன்னாங்களே, அது எங்க இருக்குனு பாக்கலாங்க ஸர்” என்றார் ஆய்வாளர்”.
வெளியே வந்து பார்த்தனர். ஐரிஸ் மாஸ் புல் வெளிக்கப்புறம் அடர் காடு தான் இருந்தது. ஓரிடத்தில் மட்டும் இரு அடர்ந்த மரங்களுக்கிடையில் முள்வேலி இருந்தது.
காட்டின் பக்கம் கை நீட்டி ”அந்தப் பக்கம் என்ன இருக்கு?” என்று கேட்டார் ஆய்வாளர், கட்டிட மேலாளரை அழைத்து.
”பாக்றீங்களே ஸர். காடு தான் இருக்குங்க. புலி, கரடில்லாம் இருக்குங்க” என்றார் அவர்.
”அது சரி. புலி, கரடி இருக்கும்னு எல்லாருக்குந் தெரியும். ரோட்டுப் பக்கம் எலெக்ட்ரிக் ஃபென்சிங் போட்ருக்கீங்க. காட்டுப் பக்கம் அப்டியே சும்மா தெறந்து வுட்ருக்கீங்க? எல்லாத்தையும் தெறந்து வுட்டு நடுவுல எதுக்கு முள்வேலி?” என்றார் ஆய்வாளர்.
”முதலாளியோட தாத்தா காலத்துல கட்ன வீடுங்க இது, பாத்தீங்கள்ல, முகப்புல 1916 ன்னு போட்ருக்கு. அவங்க இந்தக் காட்ல வேட்டைக்குப் போவாங்களாம். உள்ற மான், புலித் தலையெல்லாம் பாத்தீங்கள்ல, அதெல்லாம் அவரு வேட்டையாடுனது தானாங்க. ஃபர்னிச்சர்ஸெல்லாங் கூட அவரு ஃபாரீன்லருந்து வாங்கிட்டு வந்தது தானாங்க. கப்பல்ல கேரளாக்கு கொண்டு வந்து, அப்புறம் இங்க ட்ரக்ல ஏத்திட்டு வந்தாங்களாம்” என்றார் மேலாளர்.
”அந்தக் கதெல்லாஞ் சரிதான். மூணு பக்கம் வேலி போட்ருக்கீங்க. காட்டுப் பக்கம் எல்லாம் ஓப்பனா இருக்றப்ப, இந்த கொஞ்சம் வேலி எதுக்குன்னு தான கேட்டேன்” என்றார் ஆய்வாளர்.
”அ…து எனக்குத் தெரியாதுங்க” என்றார் மேலாளர்.
”இந்த காட்டுப் பக்கம் உங்க எடம் எதுவரை தான் இருக்கு?” என்று கேட்டார் டிஎஸ்.பி.
”ஒரு ஆயிரத்தைனூறு ஏக்கர் இருக்குங்க” என்றார் மேலாளர்.
”அவ்ளத்தையும் சும்மா காடாவா வச்சிட்டு இருக்கீங்க?”
”ஆமாங்க ஸர்”
”இண்டர்நேஷனல் பிஸினஸ்! ஹெட் ஆஃபீஸ் மும்பைல. கோத்தகிரி கெஸ்ட் ஹவுஸ்ல டவர்லாம் போட்டு கண்ட்ரோல் ரூம்! ஒண்ணுமே புரியலையே!”
”ஸர் அந்தப் பையன வர வச்சு குகை எங்கிருக்குன்னு கேட்டா என்ன? டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்ஸ் வர வச்சு இவங்க சிஸ்டமயும் செக் பண்ணலாம்ல ஸர்”
”ரெண்டுமே சென்னைலருந்து வர வழைக்க வேண்டிய விஷயமாச்சே. இப்போ என்ன பண்றது”
”ஸர், அந்தப் பையனுக்கு வீடியோ கால் பண்லாங்க” என்றார் ஆய்வாளர்.
நித்யாவைத் தொடர்பு கொண்டு, ”ஹோம் ஃபோன் நம்பர் கொடுங்க மேடம், பையன்ட்ட பேசணும்” என்றனர்.
”அந்தப் பையன பேரண்ட்1ட்ட ஹேண்ட் ஓவர் பண்ணியாச்சு” என்றார் பாதுகாப்பு இல்ல மேற்பார்வையாளர்.
நித்யாவைக் கேட்டபோது அதிர்ந்து போனாள்.
”அந்தப் பையனுக்கு அம்மா, அப்பா கிடையாது. இருந்த ஒரே பாட்டியும் கமீபத்துல இறந்து போய்ட்டாங்க. அவங்க வீட்ல இருந்து தான் ஸர் கடத்தப் பட்ருக்கான். இப்போ யார்ட்ட ஹேண்ட் ஓவர் பண்ணாங்க?” என்றாள் அவள் அதிர்ச்சி நீங்காமல்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings