in ,

கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 2 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்கதைச் சுருக்கம்:

மாலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். ஆனால் மாலாவின் வீட்டில் மாமன் மகனைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அவளாலும் அதைத் தட்ட முடியவில்லை. கண்ணனிடம் விஷயத்தை சொல்லி பிரிந்துவிடலாம் என்றாள். அவன் அதிர்ந்து நின்றான்.

இனி கதைக்குள்:

ப்பா,  நான் மூணு வருஷமா ராதாவை லவ் பண்ணிட்டிருக்கேன். அவளும் என்னை உயிருக்குயிரா லவ் பண்றா…  இப்போ திடீர்னு மாலாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி… ‘ சப்தம் போட்டான் பன்னீர். 

மாலாவுக்கு தாய்மாமன் பையன் அவன்.

குரலை உயர்த்தி சொன்னார், ரெங்கநாதன், ‘ பாரப்பா, நீ முதலிலேயே லவ் கிவ்ன்னு சொல்லியிருந்தீயன்னா நான் அப்பவே கண்டிச்சிருப்பேன்.  இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்காது, நம்ம குடும்பத்துக்கும் அது ஒத்து வராது.  பொண்ணோட அப்பா வேற போலீஸ் காரர்ங்கறே வேறே. நமக்கெல்லாம் இது தேவையா… நீ மாலாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் பார்த்துக்கோ… உங்க அத்தைக்கு நான் வாக்கு கொடுத்துட்டேன்… பார்த்துக்கோ…  ’ 

அவசரமாய் குறுக்கிட்டான்.  ‘ போலீஸ் காரர் இல்லப்பா, டி.எஸ்.பி… டெபுடி சூபரிண்டன்ட் ஆப் போலிஸ்… ‘   

‘ என்ன இழவோ… போலீஸ் குடும்பமெல்லாம் ஒத்து வராது.  எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமும் இல்லை.  பேசாம எல்லாத்தையும் மறந்துட்டு மாலாவை கலியாணம் பண்ணிக்க, உன் எதிகாலம் நல்லா இருக்கும்… மேற்படிப்பு படிச்சிருக்கு… நல்ல வேலையில இருக்கு… குடுமப்பாங்கான் பொண்ணு… நீ இதையெல்லாம் யோசி… ’

அவர் கண்களில் கனிவு  கசிந்தது.

‘ அப்பா, உங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லைங்கறதுக்காக உங்க விருப்பத்தை என் மேல திணிக்கறது எந்த விதத்துலப்பா நியாயம்… சொல்லுங்க… ‘ கொஞ்சம் கோபம் கலந்து சொன்னான்.

‘ நான் உங்க அத்தை மேல எவ்வளவு பிரியம் வெச்சிருக்கேன்னு உனக்கே தெரியும்.  நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசித்தான் இந்த முடிவுக்கே வந்திருக்கோம்.  உனக்கும் தெரியும், நீ நல்லா இருக்கனும்னுதான்  நாங்க யோசிப்போமே தவிர, நீ எப்பவும் கேட்டுப் போகணும்னு ஒருபோதும் நினைக்க மாட்டோம்.  பேசாம இதுக்கு ஒத்துக்கோ… இதுக்கு மேலேயும், இல்லப்பா, நான் லவ் பண்ணுனவளத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிச்சின்னா, எங்களை நீ மறந்திடு. இந்த வீட்டில உனக்கு இடமில்ல. நாளைக்கு அப்பான்னுட்டு கூப்பிட்டுகிட்டு  இங்க வந்திடாத.  ரெண்டு வீடு, மூணு காலி பிளாட், உரக்கடை, பேங்க்ல இருக்கற  எண்பது லட்சம் டெபாசிட், பேங்க் பேலன்ஸ் எல்லாம் நான் சுயமா உழைச்சு சம்பாதிச்சது. பெத்தவங்களை மதிக்காத பிள்ளை எங்களுக்கு வேண்டாம். நான் யாருக்காவது தான தர்மம் எழுதி வச்சிட்டு போறேன்… ’ உறுதியுடன் சொன்னார்.

அதுவரை கண்களை கசக்கிக்கொண்டு கவனித்துக் கொண்டிருந்த மரகதம் குறுக்கே வந்தாள்.  

‘ நான் கூட முதல்லே எங்க அண்ணன் மகளைத்தான் உனக்கு கட்டணும்னு நினைச்சிட்டிருந்தேன்டா. ஆனா எப்போ உங்க அப்பா உங்க அத்தை மகளை கட்டணும்னு சொன்னாரோ அப்பவே என் ஆசையை நான் மாத்திக்கிட்டேன்.  மாலாவுக்கென்னடா குறை? அழகில்லையா, அறிவில்லையா, படிப்பில்லையா? அதில்லாம கை நிறைய சம்பாதிக்கறா. நீ எங்க பேச்சை கேட்டு மாலா கழுத்துல  தாலி கட்டலேனா, அப்பா சொன்ன மாதிரி எங்களையெல்லாம் மறந்துடு… சொல்லிப்புட்டேன்… என்ன ரஞ்சிதம் வருவான்னு நினைச்சேன்… அது இல்லே இப்போ… சரி… மாலாவும் எனக்கு ஓ.கே.தான்…. நல்ல பொண்ணு… ’

கண் கலங்கினாள் அம்மா.

என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்துடன் வெளியேறினான் பன்னீர்.  அப்பா கொஞ்சம் பிடிவாதக்காரர்தான்.  நிறைய தடவை கவனித்திருக்கிறான். பிடிவாதம் பிடித்தால் விட்டுக் கொடுக்க மாட்டார். அது அம்மாவுடைய விஷயமானாலும் சரி, வியாபாரா விஷயமானாலும் சரி, அவனுடைய விஷயமானாலும் சரி. அப்படிப்பட்டவர், தான் சொன்னதுபோல அவ்வளவையும் யாருக்காவது தானம் தர்மம் எழுதி வைத்தாலும் வைத்து விடுவார்… ‘ யோசித்தான்.

மேலும் யோசித்தான். அவர் அம்மாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு மாசக் கணக்கில் எல்லாம் கூட பேசாமல் இருந்திருக்கிறார். நாம் ஒரு நாள் தண்ணியடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததுக்கே கிட்டத்தட்ட பத்து நாள் நம்மோடு பேசாமல் இருந்தாரே.  அதுதானே முதலும் கடைசியுமாக தண்ணியடிச்சது.

யோசித்தான். யோசித்துக் கொண்டே மொபெட்டை செலுத்தினான், மனம் போன போக்கில் அது ஓடியது.  

காதல் தேவைதான், அதற்காக கோடிக்கணக்கான சொத்தை யார் இழப்பது.  வாழ்க்கைக்கு காதலை விட பணம் முக்கியம்தான்

ஒரு பேக்கரி முன்னாள் மொபெட் வாந்தி நின்றது. மொபைலை எடுத்தான். 

‘ ராதா எங்கே இருக்கே… ‘   என்றான்.

‘ ஏன், ஆபிஸ்லதான் இருக்கேன், ஒரு மீடிங்க்ல இருக்கேன். எங்க எம்.டி. பேசிட்டிருக்காரு. ரொம்ப அவசரமா… ‘ குரலைத் தாழ்த்தி பேசினாள்.

‘ நான் உன்னை மீட் பண்ணனும்.  ‘ சன்னமான குரலில் சொன்னான், கொஞ்சம் அவசரமும் காட்டி.

‘ எனக்கு மீட்டிங் முடிய எப்படியும் இன்னும் ஒரு அரை மணி நேரமாவது ஆகும்…. ‘ என்றவள். ‘ ஏதாவது அர்ஜண்டா… ‘ என்றாள் கிசுகிசுத்தாள். பின்னணியில் மைக்கில் யாரோ பேசுவதும் கைதட்டலும் கேட்டது.

 ‘ ஆமா ராதா, எங்கப்பாகிட்ட  நம்ம காதல் பத்தி பேசிப் பாத்துட்டேன். கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறார்.  எங்க அத்தை மகளைக் கட்டிக்கனும்னு பிடிவாதமா பிடிக்கறார். எல்லா சொத்தையும் தானம் தர்மத்துக்கு எழுதி வைச்சுடுவேன்னு மிரட்டறார். எங்க அம்மா எங்களையெல்லாம் மறந்திடுனு சொல்றாங்க. ‘ துக்கம் கலந்த குரலில் சொன்னான். குரல் கரகரத்திருந்தது.

‘ அதேதான் பன்னீர் எங்க வீட்டிலேயும். நான் மெல்ல அம்மாக்கிட்ட விஷயத்தை சொன்னேன். லவ் கிவ்ன்னு சொன்னேயன்னா செத்தே கொன்னே போட்டுட்டு நானும் செத்துடுவேன்னு எங்கம்மா மிரட்டுறாங்க. ஏற்கனவே எங்கக்கா ஓடிப்போய் நடந்த கலாட்டா அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. எங்கப்பாக்கிட்ட வாயைத் திறக்க முடியாது. இதுவரை அவர்கிட்டே எதிர்த்து பேசியவளில்லை நான். எனக்கும் என்ன பண்றதுன்னும் தெரியலை.  சரி அப்புறம் பேசறேன்…  ‘ என்றுவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காதது போல போனை வைத்து விட்டாள்.

நல்லதாய் போயிற்று, எங்கே தைய்யா தக்காவென்று குதிப்பாளோ என்று பயந்திருந்தான் பன்னீர். இருவரும் சேர்ந்தே பிரிவது இரண்டு பேருக்குமே நல்லதுதானே என்று யோசித்தபடியே மொபெட்டை உதைத்து அப்படியே தன் நண்பன் பூபதியை பார்க்கலாம் என்று கிளம்பி விட்டான்.  பெரும்பாலான தனிப்பட்ட விஷயங்களை அவனுடன்தான் பகிர்ந்து கொள்வான் இவன்.

பூபதியுடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அத்தை பெண்ணை கட்டிக் கொள்வதுதான் இப்போதைக்கு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு உதவும், காதலை மறந்து விட வேண்டியதுதான் என்று பன்னீர் முடிவு செய்து கொண்டான்.  மறுநாள் ராதாவை பார்த்து நேரிலும் சொல்லிவிட வேண்டியதுதான் அப்போதே முடிவும் செய்து கொண்டான்.

அடுத்த பகுதியில் கல்யாணம் முடியும்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 1 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 3 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு