2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வசந்தியை மடக்கி காதல் பண்ணி கல்யாணம் பண்ணிண்ட கதை சொல்லி இருக்கேன் தானே. கல்யாணம் ஆயிடுச்சு ஒரு வழியா. நான் சென்னைல சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறேன், என் வசந்தி கவர்ன்மென்ட் கேர்ல்ஸ் ஸ்கூல்ல வேலை பாக்கறா.
இப்ப எங்க முதல் லட்சியம் எப்பாடு பட்டாவது சென்னைல சொந்தமா ஒரு ஃபிளாட் வாங்கிடணும். குறைஞ்சது கொஞ்சம் விசாலமா 2 ரூம் கிச்சன் நல்ல லொகேஷன்ல.
மதுரைல இருக்கற என் பேரண்டஸ், சென்னைலயே இருக்கற வசந்தியோட பேரண்டஸ் இரண்டு பேரையும் நாங்கதான் மெயின்டெய்ன் பண்றோம், மீன்ஸ் பணம் அனுப்பறோம். அதுமில்லாம இப்ப உள்ள லைஃப் ஸ்டைல், வீட்டு வாடகைன்னு பணம் பறக்கறது. அதனால நாங்க குழந்தை பெத்துக்கறதைக் கூட தள்ளிப் போட்டோம்.
இந்த வருஷம் கம்பெனி டார்கெட் டபிள் பிராஃபிட்ல முடிஞ்சு, எங்க எம்.டி. குஷி ஆயிட்டார். என்னை மாதிரி முக்கிய ஆபீசர்சுக்கு ஃபாரின் டிரிப், சிலருக்கு குல்லு, மணாலி, சிலருக்கு ஊட்டி, சிலருக்கு கொடைக்கானல், சிலருக்கு பாண்டிச்சேரி, மகாபலிபுரம்னு சாங்ஷன் பண்ணிட்டார்.
நாங்க கல்யாணமாகி ஹனிமூன் கூட தள்ளிப் போட்டுட்டே இருந்தோம். எனக்கும், வசந்திக்கும் ஏக குஷி, ஒரு வாரம் ஸ்விட்சர்லாண்ட் ஃபிரீன்னா சும்மாவா.
10 நாள்ல நாங்க ரெடி, சென்னை ஏர்போர்ட் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு, எல்லோருக்கும் ஸ்விஸ், இலவச டிக்கெட் கிடைச்சிருக்குமோ! இன்டர்லேகன், லுசேன், ஜெனிவா, ஜூரிக் எல்லாம் போவோம்னு டூர் ஆபரேடர் சொன்னதுல மனசு ஸ்நோவா குளிர்ந்து போச்சு. ஆறு நாள் டூர்ல இத்தனை பாக்க முடியுமா தெரியலை.
முதல்ல ஜெனிவால ஃபிளைட் இறங்கினவுடனேயே மனசுல பரபரப்பு.
சரி சார் எங்க ஸ்விஸ் பெருமை பீத்தறதுக்காக இல்லை இந்த கதை,
மவுன்ட் டிட்லிஸ்ல இருந்து இறங்கி கார்லயே இன்டர்லேகன்.
எங்க கட்டுப்பாட்டை மீறி அங்கே உருவாயிட்டான் எங்க லேகன்.
வேற என்ன முதப்பையன் லேகன் பிறந்ததுல எங்க வருங்கால பிளான்ல நிறைய மாற்றங்கள்.
அடுத்து ரெண்டு வருஷத்துல ஆத்யா குட்டி. தாம்பரத்துக்கு வீடு ஷிப்ட் பண்ணிட்டோம், எனக்கு பரவாயில்லை ஆபீஸ் பக்கம்தான், பைக்ல போயிடுவேன். வசந்திதான் பாவம் டிரெயின், நடைன்னு வேலைக்கு ஓடணும். அவளோட அம்மாதான் இப்ப எங்க கூட உதவிக்கு, என் மாமனார் தவறினதுக்கப்பறம்.
வாழ்க்கை சக்கரம் உருண்டு ஓடற வேகத்தை கேக்கவா வேணும், சொந்த வீடு கனவு கொஞ்சம் பலிச்சது, ராஜகீழ்பாக்கத்துல 600 சதுர அடில ஒரு ஃபிளாட் வாங்கிட்டோம். லேகன், ஆத்யா ரெண்டு பேரும் இன்டர்நேஷனல் ஸ்கூல் படிப்பு முடிச்சாச்சு.
இப்ப லேகன் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ல ஃபைனல் இயர். ஆத்யா பி.எஸ.சி. படிக்கறா இழுத்துக்கோ பறிச்சிக்கோனு ஓடறது வாழ்க்கை.
என் பேரண்ட்ஸ் ஒத்தருக்கு பின்னால ஒத்தரா போயும் ரெண்டு வருஷம் ஆச்சு. எங்க மதுரை வீட்டை (சிறுசுதான் ஆனா தனி வீடு) என் பேர்ல மாத்தி வாடகைக்கு விட்டதுல ஒரு சின்ன ரிலீஃப்.
அந்த ஞாயித்துக்கிழமை எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்கோம்.லேகன் சொல்றான், “அப்பா பரிட்சை நன்னா பண்ணியிருக்கேன், என் பிரண்ட்ஸ் 4 பேரு சேந்து U.S. யுனிவர்சிடி சிலதுக்கு போஸ்ட் கிராஜுவேஷன் அப்ளை பண்ண தயார் பண்ணிட்டிருக்கோம்.”
நான், ”அமெரிக்காவா? இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா செட்டில் ஆறோம், உனக்கு தெரியாதது இல்லை”
என் மனைவி, ”எப்ப நமக்கு விடியறது எப்ப மத்தவங்களைப் போல தலை நிமிந்து நடக்கறது, போகட்டுமே லேகனாவது ஃபாரின் அங்கேயே செட்டில் ஆக முடிஞ்சா இன்னும் நல்லது, நம்ம சந்துரு மாமா பையன் கனடால செட்டிலாயி சம்பாரிச்சு கொட்டறான் தெரியுமோன்னோ.”
லேகனுக்கு யூனிவர்சிடி ஆஃப் பிட்ஸ்பர்க்ல எம்.௭ஸ். படிக்க ஆஃபர் வந்தது. விசா, ஆரம்ப செலவுகள், பிரயாண செலவு அது இதுனு மதுரை வீடு போச்சு. முதன் முறை போறப்ப நானும் கூடப் போனேன். ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நிறைய செலவாகும்னு நாலு பேரா சேந்து ஒரு ஸ்டுடியோ அபார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்து தங்க ஏற்பாடானது.
என்ன அமெரிகர்களின் எக்ஸ்பிரெஸ் வேக ஆங்கிலம் அமெரிகன் அக்சென்டோட புரிஞ்சிக்க கஷ்டமா இருந்தது. நமக்கென்ன பசங்க சீக்கிரம் பழகிடுவாங்க.
லேகன், “பயப்படாம போங்கப்பா, பார்ட் டைம் வேலை கிடைச்சிடும், செலவெல்லாம் நானே சமாளிச்சுப்பேன், கவலைப் படாம போங்க”
இனிமே கவலைப்பட்டும் என்ன பிரயோஜனம். என் கவலை ஆத்யாவுக்கு கல்யாணம் காட்சினு வந்தா என்ன பண்ணப் போறோம்னுதான். என் லேகன் சம்பாரிச்சு தங்கைக்கு கல்யாணத்துக்கு எல்லாம் செய்வான்னு நம்பிக்கை இருந்தது.
சொன்ன படி லேகன் அதிகம் பணம் கேட்டு தொந்தரவு செய்யலை. அவன் M.S. முடிக்கறதுக்கு 2 மாசம் முன்னாலேயே ஒரு பெரிய கம்பெனி அவனை கவர்ந்து கொண்டது நல்ல சம்பள பேக்கேஜுடன்.
ஆத்யாவும் பாரிஸ் கார்னர் பக்கம் ஒரு சின்ன கம்பெனில வேலைக்கு போறா. கொஞ்சம் லைஃப் லைன்ல வந்துடுச்சுனு நாங்க பெருமூச்சு விட்டோம். லேகன் L.Aல செட்டிலாயிட்டான். வாரம் ஒரு முறை சனி, ஞாயிறு ஃபேஸ்டைம்ல வந்து அவன் அம்மா கூட, சில சமயம் என் கூட பேசுவான். மெல்ல அந்த வழக்கம் குறைந்தது, மாதம் ஒருமுறை ஆச்சு, அப்பறம் எப்பவாவது ஒரு 10 நிமிஷம்.
திடீர்னு அவன் அம்மாவை அதிர்ச்சி அடைய வச்சான், என் ஃபிரண்ட் ஹில்டாவோட கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு. இங்கே இருந்து நாங்க என்ன செய்ய முடியும். வசந்தியோட கோட்டைகள் இடிந்து விழுந்தன.
ராஜகீழ்பாக்கம் வீட்டை வித்து ஆத்யாவுக்கு கல்யாணம் பண்ணியாச்சு. இனிமே என்ன, எங்க வாழ்க்கை எப்படியோ ஓடும்.
நீங்க யாரும் என் கதையை கேட்டுட்டு குழந்தைகளை மேல்நாட்டுக்கு படிக்க அனுப்பாம விட்டுடாதீங்க, நம்ம சங்கரோட பொண்ணு கனடால மெடிசின் பண்ணிட்டு சங்கரனையும் அவன் மனைவியையும் பெர்மனண்டா அங்கே கூட்டிண்டு போயிடல்லையா?
ஏதோ எங்க நேரம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings