in ,

காளையின் கதை (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி

எழுத்தாளர் சஞ்சிதா பாலாஜி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“வணக்கமுங்கோ! நான் தான் காளையன், சுப்பையா வீட்டு காளைமாடு. இது என்னோட கதை. இனி பேசுறதெல்லாம் நான் தான். வாங்க பாக்கலாம்.”

விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும் மாட்டுதொழுவத்திற்கு வருகிறாள் கண்ணம்மா, சுப்பையாவின் இல்லாள், கரத்தில் கூடையும் விளக்குமாற்றையும் ஏந்தியபடி. தொழுவத்திலிருந்து சானம் அள்ள வந்திருக்கிறாள்.

“வந்துடாங்கோ இனி நம்ம இறக்குமதி பண்ண வேண்டியது தான். ஆ இந்தா…. ஆ இந்தா. புடிச்சிக்கோ …. அடுத்து இங்கே…… கிலிகிலிச்சு பாப்பா.. ஆகா… அழகா விழுந்துருகே! இன்னிக்கு இது போதும்.” சானத்தை அள்ளிச்செல்கிறாள் கண்ணம்மா

விடிந்தவுடன் வருகிறார் சுப்பையா. “ஐய்யா சோறு வருது சோறு!……. ஆகா….. நல்லா விருந்து” வயலுக்கு செல்லவிருந்த சுப்பையா காளையனையும் உடன் அழைத்து கொண்டார்.

வயலை உழும் போதினில் நம் காளையின் மனக் குமுரலை கேளுங்கள் “ஆ…… அம்மாடி! ஆத்தாடி!…. ஏலேலோ ஐலேசா….. ஏற்றை இழு ஐலேசா!……..அதான் வயல உழறதுக்கு இழுவை இயந்திரங்கள் வந்துடுச்சுல அப்புறமும் ஏன்டா எங்களையே போட்டு வாட்டி வதைக்குறீங்க. அம்மே! அடிக்காதீ்ங்க வலிக்குது! நீங்க என்ன வேலை வாங்கறது கூட எனக்கு பெருசா தெரிலடா ஆனால் ஏன்டா இப்படி சோத்தப்போட்டு அடிக்குறீங்க? அதான் வேலை பாக்கறோம்ல. அப்பாட சாப்பிட போய்டாரு சுப்பையா, கொஞ்ச நேரம் ஓய்வு கிடைக்கும்.”

சுப்பைய்யா உணவருந்திவிட்டு மீண்டும் மாலை மதிவரும் வரையில் வயலில் உழுதுவிட்டு காளையனையும் தொழுவத்தில் கட்டிச்சென்றார்.

அவரின் மகள் மாலத்தி காளையன் உன்ன வைக்கோலுடன் வருகிறாள். “ஆஹா….. என்னதான் அடிச்சு வேலை வாங்கினாலும் வேலைக்கு முன்னாடியும் சோறு பின்னாடியும் சோறு. இந்த வேலையும் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தான் அதுக்கு அப்புறம் வைபோகம் தான்…. நல்லா இதமா தடவி கொடுக்குறடி என் ராசாத்தி….…”

“அய்யையோ!! வாண்டு வந்துடுச்சுடோய்!” அங்கே சுப்பைய்யாவின் மூத்த மகன் கோபால், ஏழு வயதிருக்கும் ஓடி வந்து கொண்டிருந்தான். காளையனோடு விளையாடுவது இவனுக்கு வாடிக்கை. காளையன் மீது தாவிகுதித்து ஏறியமர்ந்தான்.

“ஆ….. அடேய் குரங்கு பயலே! அந்த பிள்ளையை பார்ரா இவ்ளோ பதமா நடந்துகுது, நீயும் தான் இருக்கியே தாவிகிட்டு அடிச்சிக்கிட்டு….. ஆ… அடிக்காதடா. டேய்! டேய்! டேய்!………… காது!…. அய்யாசாமி இப்போ என் வாலு!” சரியாக சுப்பைய்யா அங்கே வந்து ஆட்டம் போட்டு கொண்டிருந்த தன் மகனை அதட்டினார்.

காளையனை தன் மகனுக்கு தோழன் என்றும் தன் மகளுக்கு அண்ணன் என்றும் உணர்த்தினார். அவர் மட்டும் அங்கே வராதிருந்தால் களைத்திருக்கும் காளையனின் நிலை குலைந்திருக்கும். அவ்வாரே நாட்கள் ஓடின, அறுவடை காலமும் நெருங்கியது.

ஒரு நாள் காளையன் குளத்தில் நீராடுகையில் சில சிறுவர்கள் குளத்தினில் குதிக்க அங்கே துவைத்து கொண்டிருந்த பெண்மணியின் துணிமணிகள் தன் மணி நிறத்தையிழந்து சேராகின.

உடன் அவள் கோபத்துடன் “அட எருமை மாடுகளா! இப்படியா குதிப்பீங்க துணியெல்லாம் சேராயிடுச்சு’’ என்று கத்தினாள். இதனை கேட்ட காளையனுக்கு கடும் கோபம் தலைக்கேறியது.

“நான் குளிக்குர இடம் பாரு களக்கமில்லாம இருக்கு, அந்த பசங்க குதிச்சதுக்கு எங்கள வச்சி திட்டுற. வாளைமீன் எல்லாம் வானவில்லா தாவுற எருமைகள் நாங்க எண்ணிகாவுது தண்ணீர அடிச்சிறுக்கோமா இருந்தாலும் எப்ப பாரு எங்களையே வச்சு திட்டுறீங்க. எருமைங்கனா எல்லாருக்கும் அவ்ளோ இளக்காரம்……’’ பாவம் காளையனால் உள்ளத்தில் வையத்தானே இயலும், ஊரே அவ்வாறு பேசுகையில் அப்பெண் ஒருத்தியை மட்டும் சொல்லி என்செய்ய?!

தைத்திங்கள் நெருங்கி வருவதால் நம் காளையனுக்கு பலத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையன்றோ நம் காளையன்! நம் தேன்தமிழ்நாட்டின் வான்புகழ் விளையாட்டன்றோ ஜல்லிக்கட்டு! எருமையுடை யாவர்க்கும் பெருமை சேர்க்கும் உரிமையுடைய விளையாட்டு. கட்டிளங்காளைகளாக ஊரில் திரியும் இளைஞர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வீர தீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.     

தைத்திங்கள் வந்தாயிற்று மாட்டுப்பொங்கலும் வந்தாயிற்று.

“இன்னிக்கு நமக்கு ராஜமரியாதை தான்! மாலையை போடுங்க. நம்ப அழகான கொம்ப வண்ணம் பூசி இன்னும் அழகாக்கராங்களே… நல்லாருக்கு. அடுத்து மஞ்சளா…… ஆ இங்கே பூசு ஆ இங்கே பூசு ஆ பின்னாடி பூசு முடிஞ்சிடுச்சா…. ஐ! தோபார்ரா நமக்கு வெற்றித்திலகமிட வராங்க.. ஆகா இன்னிக்கு நம்ம தான் ராஜா! அடநமக்கு ஆராத்தி வேற எடுக்கறாங்க! எல்லாரும் நல்லா இருங்க எனக்கு நல்லா சோறு போடுங்க…….. நல்லா வருவீங்கடா இப்போதான் என்னக்கு நல்லா சோறுபோடுங்கனு சொன்னேன் அதுக்குள்ள ஊற்றீங்களேடா பாசக்கார பயபுள்ளைங்க ம்ம்ம்ம்….”    

ஜல்லிக்கட்டு நாள் வந்தது. சுப்பையா ‘சென்று வா வென்று வா’ என்று கூறியதே காளையனுள் ரீங்கரித்து கொண்டிருந்தது.

“வாங்கடா எல்லாரையும் குத்தி கிழிச்சிடறேன் முட்டித்தள்ளிடறேன். எனெக்கென்ன ஆனாலும் சரி அகப்படவே மாட்டேன். சரியான வெறில இருக்கேன் மோதி பாக்கலாம் வாங்கடா” வாடிவாசல் திறந்தது காளையன் முறையும் வந்தது.

வெறிகொண்ட வேங்கையாய் சினம் கொண்ட சிங்கமாய் சீறினான். தன் மீது குதித்த ஒருவனை தரையில் தள்ளி பிறைநிலவான தன் இருகொம்புகளாலும் குத்தி அவன் வயிற்றை கிழித்தான். அனைத்தவனை ஆணையாக வீசி எறிந்தான். இழுத்தவனை ஏறு இவன் ஏறிமிதித்தான். தான் களம்கண்ட இருநிமிடங்களில் இருபது பேரை எதிர்கொண்டான், அதில் இருவர் படுகாயம், மயிலிழையில் உயிர் தப்பினர். வெற்றி பெற்றான் காளையன். சுப்பையாவின் குடும்பத்துக்கே ஆனந்தம்.

“எத்தனை பேரு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகள் போல ஒவ்வொருத்தரா தான் வராங்க. வெறும் கையோடு நம்மள அடிக்காம அணைக்க மட்டும் தான் செய்றாங்க. அவங்க கொத்துகொத்தா செத்தாலும் நம்ம மேல ஒரு கீறல் கூட விழாம பாத்துக்குறாங்க. அதாண்டா நம்ம பண்பாடு. தமிழ் காளைன்னு சொல்ல எவ்ளோ பெருமையா இருக்கு!”

காளையன் தனது ஸ்பெயின் நண்பனனை எண்ணி பார்க்கிறான். அங்கே “கோரிடா டி டோரோஸ்” என்ற பெயரில் காளைச்சண்டை நடைபெறும். அது அந்நாட்டின் தேசிய விளையாட்டு. அங்கே ஆயுதங்களை கொண்டு காளையை கொல்பவனே வீரன். அரிதிலும் அரிது மேலைநாடுகளில் மாடுகள் வெல்வதரிது, அப்படியே வென்றாலும் வென்ற மாட்டை தின்றால் வீரம் வருமென கொன்றுவிடுவர். அப்படி உண்ணப்பட்ட தன் நண்பனை எண்ணி வசனப்பட்டான் காளையன்.

அதோடு தன் தமிழகத்தை எண்ணி கர்வம் கொண்டான். காளையன் தன் அருகில் அமர்ந்திருந்த இளைஞனை நோக்கி “அண்ணே… வாங்கண்ணே செத்துச்செத்து விளையாடலாம்” என்று பார்க்க, அதை உணர்ந்தவனாய் அவனும் “சரி வாடா காளையா நான் ஏறுதழுவுறேன்” என்றான்.

இத்துடன் நிறைவடைகிறது நம் காளையனின் கதை.  

எழுத்தாளர் சஞ்சிதா பாலாஜி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கருப்புருவம் (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி

    மறுபக்கம் (சிறுகதை) – அர்ஜுனன்.S