இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முன்றைய பகுதியில் எப்படி மலரை சுகுமாரன் மணந்தான்… என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்தோம்..
.அவர்கள் பேசிய எல்லாவற்றையும் கேட்ட வேலுசாமி முதலில் கோபப்பட்டாலும், பிறகு மன்னித்து அவர்களை மனதார ஏற்றுக் கொண்டு ஆசிர்வதித்தார்🙌🏻 …
அன்று அவர்களுக்கு முதல் இரவு… சுகுமாரன் மலருக்காக அலங்கரித்த அறையில் காத்திருந்தான்…
மலர் தலைநிறைய மல்லிகை பூவை சரசரமாக வைத்து, வெண்ணிற புடவையில் அடர் சிவப்பு பார்டர் சிவப்பு பூக்கள்🌷🌷 தெளித்தார் போல் ஆங்காங்கே சிறு சிறு பூக்கள்🌹🌹, கையில் பால்சொம்புடன் வந்தாள்….
சுகுமாரன் கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தாள்🧚♂️ மலர்…
அவள் உள்ளே வந்ததும் கதவை சாத்திவிட்டு… அருகிலுள்ள மேஜையில் பால் சொம்பை வைத்து விட்டு, சுகுமாரனின் காலை தொட்டு வணங்கினாள்..
ஏய்! மலர்… எதுக்கு இந்த பார்மலிடிஸ் எல்லாம் என்று அவளை தொட்டு எழுப்பி அவன் அருகில் அமர வைத்தான்.
மலரை அணைக்க போன சுகுவை தடுத்து…எப்படியோ ஏதேதோ பண்ணி எங்க அப்பா வைச்ச டெஸ்ட்ல எல்லாம் பாஸ் ஆயிட்டீங்க….
ஆமா! அதுக்கென்ன இப்போ …என்று கேட்ட சுகுவை பார்த்து … அதே மாதிரி.. இப்ப நான் வைக்குற டெஸ்ட்லையும் நீங்க கரெக்டா முடிச்சிட்டீங்கனா …ஐ வில் பி ஸோ ஹாப்பி !😊😊என்றாள்…
ஏது! குடும்பமே எல்லாதுக்கும் ஏதாவது டெஸ்ட் வெச்சிகிட்டே இருப்பிங்களா!😥… ஏன் மலர்! என்ன பாத்தா பாவமா 😔😒தெரியலையா…என்று மலரை கட்டிப்பிடிக்க…
ம்ம்…. அதெல்லாம் முடியாது முதல்ல டெஸ்ட் அப்புறமா தான் மத்ததெல்லாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள்😐 …. அது உன்ன சொல்லி தப்பு இல்ல manufacturing defect அதான் என்ற சுகுவை பார்த்து சும்மா இருங்க என்றாள் மலர்…
இப்ப வரைக்கும் நான் சும்மா தானே இருக்கேன்😏🙄 என்றான் சுகு பாவமாக😥..
நாம முதல் முதல எப்போ சந்திச்சோம், முதல் முதல போட்ட சண்டை, ஏன் ஏதுக்காக, நான் என் காதல சொன்ன தேதி, இப்படி நான் கேக்குறதுக்கு சரியா பதில் சொல்லிறீங்களா பாப்போம்…
சே! இவ்வளவு தானா சொல்றேன் கேளு.. நான் அப்போ 2nd year B.sc. chemistry, நீ B.sc microbiology, என்று சொல்ல ஆரம்பி்தான்…
வாங்க நாமளும் அவங்க லவ் ஸ்டோரீ ப்ளாஷ்பேக் 🕸பாத்துட்டு வரலாம்🤗….
என்னடி! மலர் ….இப்ப வந்து ஹால் டிக்கெட்📰 காணோம்னு சொல்ற, எங்க வச்சனு நல்லா யோசிச்சு பாருடி என்று மலரின் தோழி ரமா சொல்ல , மலர் அழுதுக்கொண்டே தேடினாள்…
பரீட்சைக்கு வேற நேரமாயிடுச்சு சீக்கரம் தேடு என ரமா மலரை அவசரப்படுத்தினாள்….எங்கு தேடியும் ஹால்டிக்கெட் கிடைக்கவில்லை….
எல்லோரும் அவர் அவர் எண்கள் எழுதிய இருக்கையில் போய் உட்கார… மலர் அவள் தோழி ரமா மட்டும் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர்👭…
நீ போ! பரீட்சைக்கு நேரமாச்சு, என மலர் ரமாவை சொல்ல, அவளுக்கு மலரை தனியாக விட்டு செல்ல மனமில்லாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்….
அங்கு சுகு மலரின் ஹால் டிக்கெட்📰 எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்தான் …
இங்க யாராவது ஹால்டிக்கெட் 📰மிஸ் பன்னிட்டீங்களா என கேட்க …ஆமா! சார் இதோ இவளோடது தான் என்று மலரை கைகாட்டினாள் ரமா ..
அப்போது தான் மலரை முதல் முதலாக சுகுமாரன் பார்த்தான்.. இதுவே அவர்களுது முதல் சந்திப்பு😍…
பார்த்த மாத்திரத்தில் அவன் மனதில் ஒரு மின்னல் வெட்டு💫, தலைக்கு மேலே பல்பு 💡எரிவதுப் போல் ஒரு உணர்வு, எங்கோ மணியோசை🔔 வேற கேட்டது அவன் காதுகளுக்கு👂🏻 மட்டும்..
கண்டதும் 😍காதல்💖 என்பார்களே! அதே போல்…
சுகு ஒருபடி மேலே போய் இவள் நமக்கு மனைவியாக வந்தாள் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைத்தான்☺….
மலர் எதுவும் பேசாது, அவன் கையிலிருந்த ஹால் டிக்கெட்டை 📰 வாங்கிக் கொண்டு ரமாவை இழுத்துக் கொண்டு பரிட்சை ஹாலுக்கு விரைந்தாள் …
ஏய்! இருடி… அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிடலாம் என்று ரமா கத்த….
மலர் இருந்த பதட்டத்தில் அவளை பேசவிடாமல் இழுத்துச் சென்றாள்…சார் தாங்க்ஸ் என்று ரமா கத்திக் கொண்டே மலரோடு சென்றாள்.
ஐயோ! அவ பெயரை கேட்க மறந்துட்டோமே…பிறகு அவனே … ஆமா..ஹால் டிக்கெட் கொடுத்தவனுக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்லல🤦 …இதுல பெயரை சொல்லிட போறாளாக்கும்.😏..
மறுபடியும் மணியோசை கேட்க என்ன இது இரண்டாவது முறை மணியோசை கேட்கிறதே என நினைத்தவன்🤔 ஐயையோ! இது பரீட்சை ஆரம்பிப்பதற்கான மணியோசை ஆச்சே! என அவசர அவசரமாக அவன் தேர்வு அறைக்கு ஓடினான்🏃🏻…
தேர்வு எழுதி முடித்தவுடனே ரமா மலரிடம் வந்து, ஏய் ரமா! நீ பண்ணது கொஞ்சம் கூட நல்லாயில்லா ஹால் டிக்கெட் 📰கொடுத்த மனுஷனுக்கு ஒரு தாங்க்ஸ்🙏🏻 கூட சொல்லல நீ , அட்லீஸ்ட் என்னயாவது சொல்லவிட்டியா என கோபப்பட்டாள்….
சாரி டீ🙏🏻 நான் இருந்த பதட்டத்தில 😰எனக்கு எதுவுமே தோணால..எக்ஸமுக்கு வேற டைம் ஆயிடுச்சா அதான் …
ம்க்கும்… என்கிட்ட ஸாரி சொல்லி என்ன பிரியோஜனம் …அவர தேடி கண்டுபிடிச்சு ஒரு தாங்க்ஸ்🙏🏻 ஒரு சாரி சொல்லிடு🙏🏻…
அவர எங்கடி தேடுறது🤔… இரண்டாவது வருட பரீட்சையே எழுத ஆரம்பிச்சிட்டோம்… ஆனா இவர் எப்படி இத்தனை நாள் நம்ம கண்ணுல 👁👁படாம போயிட்டார் என்று யோசித்துக் கொண்டிருக்க அங்கே சுகு🚶🏻 வந்துக் கொண்டிருந்தான்…
வாங்க சார்…என்று ரமா கூற ..ஐயோ! சார் எல்லாம் எதுக்கு. என் பெயர் சுகுமாரன்..எல்லோரும் சுகு என்று கூப்பிடுவார்கள்…நானும் 2nd yr தான், B.sc..chemistry என்று தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டான்… மலர் ஏதாவது பேசுவாளா என்று ஆவலாக பார்த்தான்…
ஓ! என் பெயர் ரமா, இவ பெயர் மலர்கொடி …நாங்க எல்லோரும் மலர்னு கூப்பிடுவோம்… B.sc.microbiology 2ndyear…என்று அவர்கள் இருவரையும் அறிமுகபடுத்திக் கொண்டாள் ரமா..
ஏங்க நீங்க தான் பேசுவீங்களா, உங்க ப்ரண்ட் வாயே😷 திறக்க மாட்டாங்கறாங்க என்று சுகு கேட்க…
சே! சே! அப்படி எல்லாம் ஒன்னுமில்லைங்க அவ கொஞ்சம் கூச்ச சுபாவம்…
ஏய் பேசுடி, தாங்க்ஸ் சொல்லுடி என்று மலரை இடிக்க அவள் இவன் முகம் பாராது தாங்க்ஸ்🙏🏻 என்றாள்…இட்ஸ் ஓ.கே …அப்புறம் எக்ஸாம்📄 நல்லா எழுதுனீங்களா? காலையில ஒரே பதட்டமா இருந்தீங்க என்று கேட்டதும் …ம் என்று தலை ஆட்டினாள் மலர்…
என்ன அப்படி கேட்டீங்க மலர் ஸ்கூல் டாப்பர்🥇🏅🎖🏆 …இப்ப காலேஜ்ல க்ளாஸ் டாப்பர்🏆🎖🥇.. ஒரு பேப்பர் கூட ஹரீயர்ஸ் இல்ல என ரமா மலரை புகழ்ந்து தள்ள…
ஓ! அறிவாளி தான் உங்க ப்ரண்ட் என்று சுகுவும் பாராட்டினான்….
வெட்கம் தாங்காமல் அங்கியிருந்து கிளம்ப எத்தனித்தாள் மலர். அதை பார்த்த சுகு ஓ.கே பை👋🏻 அப்புறம் பாக்கலாம் என்று நகர்ந்தான்…
ஏய்! மலர் என்னடி நடக்குது இங்க கண்டதும் காதலா😍…சுகு உன்ன பாக்குற பார்வையிலே காதல் பொங்குது💖💖…நீ என்னடா னா அவர பாக்காமலே நெளியிற, சிணுங்குற, வெட்கப்படுற …ம்…ஒன்னும் சரியில்லையே🤔 என்று ரமா சொல்லிக் கொண்டிருக்க….
சும்மா இருடி..எங்க அப்பாக்கு அதெல்லாம் பிடிக்காது…
ஆமா! உங்க அப்பாவய லவ் பண்ண சொல்றோம்…அவருக்கு பிடிச்ச என்ன பிடிக்காட்டி என்ன… நீ அவரோட ஒரே செல்ல பொண்ணு அதெல்லாம் கண்டிப்பா ஒத்துக்குவாறு என்று ரமா சொல்ல, மலர் வெட்கப்பட்டாள்.🙈..
அன்றிலிருந்து மலரே! ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று…என்ற பாடல் தான் சுகுவின் கைபேசி 🤳ரிங்டோன்… அது மட்டுமில்லாமல் மலரை பார்க்கும் போதெல்லாம்…மலரே! மெளனமாய் என்ற பாடலை ஒளிக்கவிட்டான் அவன் கைபேசியில்🤳….மலருக்கு கேட்கும் படி…
மலரின் சம்மதத்திற்காக காத்துக் கிடந்தான். அவன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் சம்மதம் சொல்லாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் மலர்……
மலர் எப்படி சுகுவின் காதலை ஏற்றாள் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்….
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings