ஒரு ஊர்ல…. என்ன அப்படி பாக்குறீங்க கதைய கொஞ்சம் நகைச்சுவையா கொண்டு போகலாமுனு…. அதனால தான் ஒரு ஊர்லனு ஆரம்பிச்சேன்….சரி! சரி! கதைக்கு போவோம் வாங்க….
முதல்ல நம் ஹீரோயின அறிமுகம்.
செங்காட்டூர் என்னும் கிராமத்தில் பெரும் செல்வந்தரான பண்ணையார் வேலுச்சாமியின் ஒரே செல்ல மகள் மலர்கொடி.
அவங்க தாங்க நம்ம கதையின் நாயகி.. சுருக்கமா மலர்னு கூப்பிடுவாங்க…பெயருக்கு ஏற்றார் போல் மலர் முகமும் கொடி இடையும் கொண்டவள்😍😘…
கல்லூரியில் B.Sc இறுதியாண்டு படிச்சிக்கிட்டு இருக்கா…மலருக்கு அப்பா மட்டும் தான், இவளுக்கு 3வயது இருக்கும் போதே அம்மா நோய்வாய்பட்டு இறந்துப் போனார்…
அன்றிலிருந்து வேலுசாமி தாயுமானவனாக இருந்து தன் மகளை கண்ணும், கருத்துமாக வளர்த்து வந்தார்…
மலரின் மீது அவர் தந்தை போலவே அதிக பாசம் வைத்திருப்பது அவர்கள் வீட்டு வேலைக்காரன் ஆன 45 வயதுடைய மணிகண்டன்…
வெறும் வேலைக்காரன் மட்டுமல்ல வேலுசாமியின் வலது கை என்று சொல்லலாம். அவ்வளவு நம்பிக்கைக்கு பாத்திரமானவன்…
காதல் தோல்வியால் இன்று வரை கட்ட பிரம்மசாரியாக வாழ்ந்து வருகிறார்..
அவள் தந்தை வேலுசாமிக்கு அடுத்தபடியாக மலருக்கு எல்லாமே இவர் தான்..
ஹீரோயின் இன்ட்ரோடக்ஷன் ஓவர்…🤗
அப்போ அடுத்தது 🤔 அதே தான், நீங்க யோசிக்குறது சரி, நம்ம ஹீரோ இன்ட்ரோடக்ஷன். வாங்க அவர பத்தி பார்ப்போம்…🕵
நம்ம கதாநாயகனின் பெயர் சுகுமாரன், நல்ல வசதி படைத்தவன், வீட்டிற்கு ஒரே வாரிசு..
நல்ல நிறம், மொழு மொழுவென்று மீசை இல்லாமல் வடநாட்டு ஹீரோவைப் போல் இருப்பான்😎…
நம்ம கதாநாயகி மலரோட பக்கத்து ஊரு…
ஊரு தான் வேற வேற… படிக்குறது ஒரே கல்லூரியில் …இப்ப புரிஞ்சிருக்குமே 😜அதே தான்😂😂 லவ்ஸ் தான்💘..அது எப்படி வந்தது? எல்லாம் கேக்காதீங்க🙈 வந்துடுச்சி அம்புட்டுத்தான்…😇
முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்😳நம்ம கதையில இரண்டு ஹீரோ இரண்டு ஹீரோயின்… சொல்லப்போனா மலர், சுகுமாரன விட முக்கியமான ஹீரோ, ஹீரோயின் இவங்கதான்….
ஏன் அப்படி சொல்றேன் யோசிக்கிறீங்களா🤔 மலர், சுகுமாரன் சேர்த்து வைக்கப் போறதே இவங்கதான்…
ஐயோ! பில்டப் போதும்🤚🏻 யாருனு சொல்லு அப்படி நீங்க கோபப்படுறது 😠தெரியுது…
ஆனா இப்பத்திக்கு அவங்க பெயர் மட்டும் தான் சொல்லுவேன் அவங்க யாருனு நீங்களே கதைய படிச்சு தெரிஞ்சுக்கோங்க….
அவங்க பெயர் காளையன், கண்ணம்மா…
மலர் கல்லூரியில் சோகமாக அமர்ந்திருக்க அவளது காதலன் சுகுமாரன் அவள் அருகில் வந்து கண்ணைப் 🙈பொத்தினான்…
இவள் அவன் கையை கண்களிலிருந்து எடுத்து விட்டு திரும்பவும் சோகமானாள்…
எப்போதும் இன்று பூத்த மலர் போல் இருக்கும் என் மலரின் முகம் இன்று வாடியிருக்க என்ன காரணமோ? 🤔 என்று கவிதை நயத்தோடு சுகுமார் கேட்க 😍
மண்ணாங்கட்டி என்றாள்👊🏻 மலர்…👿
என்ன நீ ….நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கவிதையாக காதல் மொழி பேசுறேன் நீ ஈஸியா மண்ணாங்கட்டினு சொல்றீயே😪😢என்று வருத்தப்பட்டான் சுகு…. இனி சுகுமாரை சுகு என்றே சுருக்கமாக குறிப்பிடுகிறேன்…
உங்க வருத்தத்த அப்படி தள்ளிவச்சிட்டு நான் சொல்றத கேளுங்க… எங்கப்பாகிட்ட எப்படியோ நம்ம காதல் விஷயத்த சொல்லிட்டேன். அவரும் ஒ.கே சொல்லிட்டாரு என்று மலர் சொல்லவும்…
உண்மையாவா 😀சொல்ற மலர் என்று சந்தோஷத்தில்😄😃😅 குதித்தான் சுகு..
அவனை முறைத்தப்படியே😡 …ரொம்ப சந்தோஷபடாதீங்க… அவர் இந்த கல்யாணத்துக்கு சம்மத்திக்கணும்னா 2 கண்டிஷன் இருக்காம்… அதுக்கு சரினு சொன்னா தான் கல்யாணம்னு சொல்லிட்டார்…
இப்போது சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்த சுகுவின் முகம் வாடியது 😔…
அதானே பாத்தேன் இவ்வளவு சீக்கிரம் ஹீரோ, ஹீரோயின சேர வச்சிடுவாங்களா👿…
அந்த கண்டிஷனும் சொல்லு தாயே! என்று பாவமாக கேட்டான்..
அத உங்ககிட்ட தான் சொல்வாறாம்… நம்ம இறுதியாண்டு பரீட்சை முடிஞ்சதும் வந்து பாக்க சொன்னாரு என்று மலர் சொன்னதும்…
ம் சரி என்று பெருமூச்சு விட்டவாரே தலையாட்டினான் சுகு…
தேர்வுகள் முடிந்து கல்லூரி வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுக்க👋🏻👋🏻….ஒரு வாரம் கழித்து மலரின் தந்தை வேலுசாமியை சுகு என்கிற சுகுமாரன் சந்திக்க வந்தான்…
வேலுசாமியை பார்த்ததும் சுகுமாருக்கு சிரிப்பு சிரிப்பாக 😂😂வந்தது…அதற்கு காரணம் வேலுசாமியின் தோற்றம் அப்படி…
இந்த காலத்துலையும் மனுஷன்.. கெட்டப்ப மாத்தாம, அந்து காலத்து நாட்டமை விஜயகுமார் மாதிரியே பெரிய மீசை, மேல் சட்டை போடாமல் அங்கவஸ்தரம் மட்டும் போட்டுக் கொண்டு, உடலில் சந்தனத்தை பூசிக்கிட்டு, வெற்றிலை பாக்கை மென்றுக் கொண்டு… நல்லவேள மண்டைமேல 🤕கொண்டையில்ல😅😅 பார்க்க செம காமடிப் போ 🤣🤣பக்கத்துல ஒரு எடுபுடி நிக்கணுமே என்று யோசித்தவாறே🤔 சுகு நிற்க….🕴
ம்….என்ற வேலுசாமியின் உருமல் கேட்டு நிகழ் காலத்திற்கு வந்தான் சுகு
சுகுமாரனை பார்த்ததும் முகம் சுளித்தார் வேலுசாமி😖
நான் நேரா விஷயத்திற்கு வரேன் என் பொண்ண கட்டிகணும்னா 3 கண்டிஷன் இருக்கு…
என்னது 3 ஆஆஆஆஆ … என்று மலரும், சுகமாரனும் அலற 😲😲…
ஆமா! முதல 2.நிபந்தனை தான் வச்சியிருந்தேன்…உன்ன பாத்த பிறகு 3னா மாத்திட்டேன் என்றார் வேலுசாமி …
ஏன்? என்று புரியாமல் அவரை பார்த்தாள் மலர்….
சுகுமாரனோ அது ஒண்ணுமில்ல என் முகராசி அப்படி என்று மனதில் நொந்துக் கொண்டான்😪
நிபந்தனை:1 என்ன போல பெரிய மீசை வச்சிக்கணும்…
ஏது விட்டா… நம்மளையும் இவர் கெட்டப்க்கு மாத்தி ஒரு சொம்ப கொடுத்து நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு ரேன்ஜுக்கு ஆக்கிடுவார் போல இருக்கே🤦(சுகுவின் மைண்ட் வாய்ஸ்)
உடனே மலர்…. அப்பா என்ன பா .இது! மீசை வச்சிக்குறதெல்லாம் ஒரு கண்டிஷனா என்று அவரை உலுக்க🙆…
என்ன தாயி! அப்படி சொல்லிபுட்ட ஆடவரின் வீரத்தை உணர்த்துவது மீசை, ஆணுக்கு அழகு சேர்ப்பது மீசை …என்று தன் மீசையை வருடி விட்டாரே ஏக வசனத்தில் பேச…
சுகுவிற்கோ… ஆமா! உதட்டுக்கு மேல காட்டு மரவெட்டை🐛 போல நெளிஞ்சிக்கிட்டு இருக்கு இவரு மீசை…இத அழகுனு வேற சொல்லுது பெருசு …என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டான்🙄..
நிபந்தனை: 2 என் தோட்டத்தில் இருக்குற இளவட்ட கல்லை தூக்க வேண்டும்…என்று வேலுசாமி சொல்ல….
அட! பதறுங்களா! இன்னும் இவங்க 70ம் நூற்றாண்டையே தாண்டலையா..😤😞(மறுபடியும் சுகுவின் மைண்ட் வாய்ஸ்)
நிபந்தனை:3 ஏலே! மணியா என்று வேலுசாமி கம்பீர குரல் கொடுக்க…அது யாரு என்று முணுமுணுத்தவாறே எட்டி பார்த்தான் சுகு.
.6.2 அடி உயரத்தில் ஆஜானுபாகுவானாய் வந்து நின்றான் மணிகண்டன் என்கிற மணியன்…
அதானே பாத்தேன் இன்னும் எடுபுடிய காணோமேனு…. நீ தானா😏 அது (சுகு மனதில் முணுமுணுத்தவாரே அவரை வியப்புடன் பார்க்க…😲
நம்ம தோட்டத்தில இருக்குற இளவட்ட கல்லையும், காளையனையும் இந்த தம்பிக்கு காட்டு என்று கட்டளையிட்டார்..
அங்கிள் இளவட்டு கல்லு ஓ.கே யார் இந்த காளையன்? உங்க ப்ரண்டா 🤓என்று கேட்ட சுகுவை… ஏற இறங்க பார்த்துவிட்டு😏 அத நீங்க பாக்கத்தானே போறீங்க தம்பி அப்போ தெரிஞ்சிக்கோங்க என்றார்…
அப்புறம் இப்போ ஏதோ சொன்னீங்களே அங்கிள். என சுகு ஏதோ சொல்ல எத்தணிக்க அதெல்லாம் போட்டில ஜெயிச்சு என் பொண்ண கட்டிக்கிட்ட பிறகு முறை வச்சு கூப்பிடுங்க என்றார் கறாராக😕….
மணியனோடு தோட்டத்தில் காளையனை பார்க்க சென்ற சுகுவிற்கு.. சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.😫..அங்கே பழுப்பு நிறத்தில், ஒரே குத்தில் வயிற்றை கிழித்து குடலை வெளியே எடுக்கும் கூர்மையான கொம்புகளுடன், நன்றாக திண்ணு கொழுத்திருக்கும் காளைமாடான 🐂காளையனை பார்த்ததும் சுகுமாரின் இதயம்❤ கண்ணா பிண்ணா என்று எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் அடித்துக் கொண்டது…
அடபாவிங்களா ஏது எனக்கு கல்யாணம் பண்றதுக்கு பதிலா கருமாதி பண்ணிடுவாங்க போல இருக்கே😩😩…
அவன் மிருளுவதை பார்த்த மணியனுக்கு சிரிப்பாக 😅😅வந்தது…
ஏன்யா! சிரிக்க மாட்ட .உனக்கென்ன எடுபுடி. அதுலையும் ஒண்டிக்கட்ட (மலர் ஏற்கனவே தன் குடும்பத்தை பற்றி சொல்லியிருக்கிறாள் சுகுவிடம்) வேல பாத்துகிட்டு காலத்த ஓட்டிடுவ…
நான் என் வீட்டுக்கு ஒரே பிள்ளையா என்று மனதில் நினைக்க சுகுவின் முகம் அஷ்டகோணலாக😣 மாறுவதை பார்த்து கிளம்புலாமா தம்பி என்று உலுக்கினான் மணியன்…
பூம் பூம் மாடு போல் தலையாட்டி கொண்டே அவன் பின்னாடி சென்றான் சுகுமாரன்..
என்ன தம்பி நம்ம காளையன பாத்திருப்பீங்க என் 3வது நிபந்தனை என்னனு…நான் சொல்லாமலேயே உங்களுக்கே புரிஞ்சிருக்கும்…
இருந்தாலும் சொல்லிடுறேன் என் 3வது நிபந்தனை காளையன அடக்குறது தான்..
உங்களுக்கு 1 மாசம் அவகாசம் அதுக்குள்ள நான் சொன்ன 3 நிபந்தனையும் என் கண் முன்னாடி நிரூபிச்சிட்டு என் பொண்ண கல்யாணம் பண்ணிங்கோங்க என்றார்…
வாய் பேச வாராமல்😷… சரி என்று வெறும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு தொங்கிய தலையுடன் சென்ற சுகுமாரனை பார்த்த மலருக்கு அழுகையாக 😓😭வந்தது..
அவள் தந்தையின் மீது கோபம்😡 கொண்டு அவள் அறையில் போய் கதவை சாத்திக் கொண்டாள்…
பார்ப்போம் மலர், சுகுமாரனின் காதல் கைகூடுமா? சுகு 3 போட்டிகளிலும் ஜெயித்து மலருடன் கைக்கோர்ப்பானா?
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings