இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அது வந்து, நான் பாத்துட்டேன், அவங்கதான் என்ன சொல்வாங்க தெரியலை”
“ஓ பொண்ணு பாத்துட்டு வந்தாச்சா? பிடிச்சிருந்தா ஓகே சொல்லிட்டு தாலியை கட்ட வேண்டியதுதானே, என்ன தயக்கம்”
“அவ்வளவு சுலபமில்லையே, அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கானு தெரியாம எப்படி”
“ஓ இப்ப புரியுது லவ்வா? உங்களுக்கா? கஷ்டம் எந்தப் பொண்ணோட வேளையோ, சரி அவ தலையெழுத்து எனக்கென்ன பேசாம தைரியமா புரொபோஸ் பண்ணுங்க, இல்லை ஏற்கனவே பண்ணிட்டீங்களா?”
தலையக் குனிந்து கொண்டு முனகல் குரலில், “பத்மஜாதான், எப்படி சொல்றதுனு பயமா இருக்கு”
“அட பார்றா, பேஷண்டுக்கு அதைப் பண்ணு இதைப் பண்ணுனு விரட்டறப்ப மட்டும் தைரியம் வருது.”
தலையைத் தூக்கி என் கண்களை பாக்கவே இல்லை, எனக்கே பாவமா இருந்தது. “சரி,சரி, வேற யாரும் பண்றதுக்கு முன்னால இப்பவாவது புரொபோஸ் பண்ணலாமே”
சட்னு என்னை நிமிர்ந்து பாத்து நான் கேலி பண்ணலைனு புரிந்து கொண்டு டேபிளை சுற்றுமுற்றும் பாத்து ஸ்டெதஸ்கோப்பை ரெண்டு கையாலயும் எடுத்து என் முன் நீட்டினான்,
“வில் யூ மேரி மீ”
பக்னு சிரித்த நான் அவன் கைகளை பற்றிக் கொண்டேன்.”ஸ்டெதஸ்கோப் கொடுத்து புரொபோஸ் பண்ற முதல் ஆள் நீங்களாதான் இருக்க முடியும்.உன் வாயில இருந்து இது வராதானுதான் காத்திருந்தேன். எஸ் ஐ வில்”
மெதுவே பத்திக்கிச்சு. தீபாவளி லீவ் கான்சல், அக்காவை வேலை பிரஷர் வர முடியலைனு கன்வின்ஸ் பண்ணிட்டேன்.
சினிமால வர மாதிரி லவ் பண்ண வேண்டாம், ஆனா ஒரு கதைல வர மாதிரி கூட பண்ணத் தெரியலை நம்ம ஆளுக்கு. ரொம்ப கூச்ச சுபாவம்.
அவுட்டிங் கூட்டிட்டு போன இடங்களை பாருங்களேன், சொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் கோவில், சேகர் மெஸ், அரசரடி ஆப்பக்கடை இவைகள்தான் ரொமான்டிக் ஸ்பாட்ஸ்.
கார்ல பக்கத்துல உக்காந்து போறப்ப கியர் மாத்தறப்ப தெரியாம கை பட்டா, “சாரி, சாரினு” பதரறான் என்னத்தை சொல்ல. இருக்கட்டும் வச்சிக்கறேன் பர்ஸ்ட் நைட்ல, கடவுள் புண்யத்துல கல்யாணம் ஆனா.
அம்மாதான் முதல்ல கண்டு பிடிச்சா, “என்னடி ஆச்சு, யாரு அவன், உங்கக்கா மாதிரி நீயும் பண்ணிடாதே தானா சிரிச்சிக்கறே, சாமான் கண்ட இடத்துல வச்சு மறந்து போறே. முதல்லயே சொல்லு ஏதாவதுன்னா.”
அண்ணா அடுத்து கேட்டான், ”பத்துகுட்டி யாரு அது யானைக்கல் பக்கம் கார்ல பாத்தேனே.”
“ஆமாம்ண்ணா என் பாஸ், டாக்டர் சவுந்தரபாண்டியன் எம்.டி”
என் வார்த்தைல கொஞ்சம் பெருமை தெரிஞ்சதோ, அண்ணா என்னை ஒரு மாதிரியா பாத்தான்.
“ஆள் நல்லா ஹீரோ மாதிரிதான் இருக்கார். நம்ம ஆள்களா”
போண்ணா உனக்கும், அம்மாக்கும் வேற வேலையில்லைனு சொல்லி பேச்சை வளக்காம கட் பண்ணிட்டேன்.
ஆனா நம்ம ஆளு இந்த விஷயத்துல கொஞ்சம் ஃபாஸ்ட்தான். அவரோட அப்பா, ராமபத்திரனுக்கு (என் அப்பாங்க, பேரை மறந்துருப்பீங்களே) ஃபோன் பண்ணி ராமபத்திரன் பர்வதத்து (என் அம்மா பேராவது ஞாபகம் இருக்கா) கிட்ட சொல்லி ஞாயித்துக்கிழமை சாயந்தரம் குடும்பமே பொண்ணு பாக்க வந்துட்டாங்க.
எனக்கு சர்ப்ரைசாம் இந்த முசுடு என்கிட்ட கூட சொல்லலை. அம்மா ஞாயித்துக்கிழமை காலைல சொல்றா உன்னை பொண்ணு பாக்க வரானு. நான் யாரோ என்னவோனு பயந்தேன்.
எப்படியோ தமிழ் சினிமால வர மாதிரி வில்லன், கத்திச் சண்டை மலைமேல துரத்தற சீன்லாம் இல்லாம நல்ல படியா முடிஞ்சது.
முசுடுனு நினைச்ச நம்ம ஆளு அவரோட பேரண்ட்ஸ் முன்னால தைரியமா கேக்கறான், பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமானு. நானும் தைரியமா சொன்னேன் தெரியாதுனு சொன்னா பொண்ணை பிடிக்காதானு. இல்லை தெரியாதுன்னா நான் கத்துக்கலாமேனு தான் கேட்டேன்றான். நான் எல்லாம் தெரியும் பயப்படாதீங்கன்னேன். இந்த டிராமாவை பெரிசுகள் ரசிச்சு சிரிக்குதுங்க.
ஒரே மாசத்துல கல்யாணம், செல்வி அக்கா, அத்திம்பேர் அந்த சின்னக் குட்டி அனுஷா எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாலயே வந்தாச்சு. அண்ணாவை எல்லாரும் கிண்டல் பண்றா.
அக்கா, “என்னடா உனக்கு ஒண்ணும் மாட்டலயா, படிப்புல மட்டும் உஷாரா இருந்தா பத்தாது“
அண்ணா “போங்கடி போங்க கல்யாண பந்தத்துல மாட்டிக்கற உத்தேசம் இல்லை இப்ப எனக்கு”
அம்மா, “டேய் அப்படிச் சொல்லாதேடா, இந்த சின்னவளும் கல்யாணம் பண்ணி போயிட்டா இந்த வீட்ல தனியா ஆயிடுவேன்டா”
நான், “அதெல்லாம் பயப்படாதேம்மா அண்ணா என் கல்யாணம் ஆகட்டும்னு காத்திருக்கான், பாரு உடனே டிக்ளேர் பண்ணுவான்”
அண்ணா சட்னு எழுந்து “என்னடி உளறரே”
நான், “அய்யா இராசேந்திர சோழரே, அந்த உங்க பழைய டயரில ஏதோ பேர் கூட பின்னால எழுதி ஒரு ஃபோட்டோ, ஹாங் வித்யாலக்ஷ்மிதானே”
“ஏய், ஏய் நான் இல்லாதப்ப என் டேபிளை கள்ளச்சாவி போட்டு திறந்தயா, பாரு உன்னை என்ன செய்யறேன்னு” துரத்தி வந்தான், நான் அம்மானு அம்மா பின்னால ஒளிஞ்சிண்டேன்.
என்ன மக்களே என் கதை ரொம்ப இழுக்கறேனா பயப்படாதீங்க அவ்வளவுதான்.
கல்யாணம் ஆச்சு. என் ஹப்பியோட கலந்து பேசி சேலம் மாமாவோட பரிபூரண சம்மதத்தோட சேலம் அக்ரகாரம் வீட்டை ஒரு அழகான ஹாஸ்பிடலா மாத்தினோம்.
“வேதம் மகப்பேறு மருத்துவமனை”.
எங்க மாமாதான், தன் வேலையை விட்டுட்டு ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் பாத்துக்கறார். பழையபடி அந்த வீட்ல பிரசவ வலி சத்தம், குழந்தை அழற சத்தம். ஆனா நாங்க ரீசனபிளா ஃபீஸ் வாங்கறோம் .பாட்டி மாதிரி வச்சுக் கொடுக்கற புடவை மட்டும் வாங்கிக்கறது இல்லை. அம்மாவுக்கு தன் அம்மாவோட பேர்ல டிஸ்பென்சரி வச்சதுல பரம சந்தோஷம்.
இன்னும் நிறைய குட்டி தேவதைகள் இங்கே இருந்து வரும்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings