in ,

இக்கரைக்கு அக்கரை பச்சை (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஹோட்டல் மேனேஜ்மென்ட்தான் படிப்பேன்னு நான் முடிவெடுத்தது எப்பன்னா, 12 வது முடிச்சிட்டு வெகேஷன்ல யு.எஸ் போனப்பதான்.என் அண்ணா அத்வைத் நியூயார்க்ல வேலை பாக்கறானே.அண்ணா அங்கே போய் 7 வருஷம் ஆச்சு, ஏதோ ஒரு விக்டோரியாவோ, பாக்டீரியாவோ அவளை கல்யாணம் பண்ணிண்டு அங்கே செட்டில் ஆயிட்டான்.என்னை லீவுல கூப்டான், அப்பா, அம்மாக்கு பிடிக்கலை ஆனாலும் பிடிவாதமா போயிட்டேன்.

என் அண்ணி அங்கே ஸ்டார் ஹோட்டல்ல வேலை பாக்கறா.அவ பேசற இங்லீஷ் எனக்கு புரியாது ஆனா பேசிப்போம் எப்படினு கேக்காதிங்க.ஒரு நாள் லன்ச்சுக்கு என்னை அவங்க ஹோட்டலுக்கு கூப்டாங்க. மெனுல கலர் கலரா கண்கவரும் வண்ணம் உணவு வகைகள் யானை விலையுடன்.

15 நாளில் என் அண்ணி சமையலில்( சமையல் என்ன பிரெட் சாண்ட்விச், மைக்ரோ வேவ்ல சுட வச்ச கேன்ட் ஃபுட் தான்) வாய் வரண்டு போன நான், நல்ல சவுத் இண்டியன் ஃபுட் ஏதாவது சொல்லுங்க அண்ணின்னேன். செஃப் தானே வந்தான் ஆர்டர் எடுக்க.அண்ணி என் சாய்ஸ் சவுத் இண்டியன் ஃபுட்ன்னா.

வாய் கிழியும் புன்னகையுடன் ,”எஸ் வி ஹேவ் நியூ டிஷ் இன்டரொட்யூஸ்ட் டுடே.”

நான் ஆர்வத்துடன் என்ன அது?

“ செலக்டட் இண்டியன் பாஸ்மதி ரைஸ் குக்ட் அண்ட் சோக்ட் இன் ஃபிரெஷ் ஸ்பிரிங் வாட்டர் , சீசன்ட் ஃபார் 12 ஹவர்ஸ் இன் வெல் புரொடக்டட் எர்தன் பாட், அலாங் வித் செலக்டட் ஷேலட் ஆனியன் பிராபர்லி பீல்ட், அண்ட் கோல்டன் சீசன்ட் சிட்ரன் பீசஸ் கோட்டட் வித் மவுத் டிக்ளிங் ஸ்பைசி இன்கிரேடியண்ட்ஸ் சார்”சொல்லிட்டு மூச்சு வாங்கினான்.

ஓகே கெட் இட் னேன் புரியாம. அடுத்த 20 நிமிஷத்துல டேபிள்ல வந்தது பழைய சாதம், உரிச்ச சின்ன வெங்காயம், நார்த்தங்கா ஊறுகாய்.

அண்ணியோட பிரெட், கேன்ட் ஃபுட் பரவாயில்லையோ? பாட்டி சொல்ற பழமொழி ஞாபகம் வந்தது அசந்தர்ப்பமா.

இக்கரைக்கு அக்கரை பச்சை

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 15) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை