2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் என பாடலை பாடிக் கொண்டிருந்தான் ரகு.
என்னப்பா? காலையிலேயே சோகமான பாட்டு பாடிட்டு இருக்கீங்க என்று கேட்டான் மகன் ஸ்ரீதர்.
உங்க அம்மாவை திருமணம் செய்த நாளிலிருந்து இப்படித்தான் பாட வேண்டியதாக இருக்கிறது என்றார் ரகு.
அம்மா, அம்மா என கூப்பிட்டான் ஸ்ரீதர்.
எதுக்குடா உங்க அம்மாவ கூப்பிடுற என்று அப்பா கேட்க நீங்க சொன்னது அம்மா கிட்ட சொல்லனும் இல்ல அதற்காக தான் கூப்பிட்டேன் என்றான் மகன் ஸ்ரீதர்.
ஏற்கனவே அவள் ஏதாவது ஏடாகூடமா பேசிக் கொண்டிருக்கிறாள். நீ வேற போட்டு கொடுத்தேன் வச்சுக்க, என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிடுவாள் உங்க அம்மா என்றார் ரகு.
எதுக்குடா கூப்பிட்ட என்று சமையலை முடித்துவிட்டு கையை துடைத்த வாரே மகனிடம் அம்மா கேட்க
உங்களுக்கு கல்யாண நாள் வருகிறது, எங்க போகலாம் என்று சொல்லுங்கள். உங்களை அழைத்துப் போகிறேன் என்றான் ஸ்ரீதர்.
உங்க அப்பா கல்யாணம் முடிஞ்ச நாளிலிருந்து இன்று வரை எங்கேயும் அழைத்துப் போனதில்லை. ஊட்டி கொடைக்கானல் போகலாம் என்று சொன்னால் பேப்பர்ல ஊட்டி கொடைக்கானல் என்று எழுதிக் கொடுத்து இந்த இதை பார்த்துக்கொள் என்பார். உங்க அப்பாவை திருமணம் செய்ததிலிருந்து எதையும் நான் அனுபவித்தது கிடையாது. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்ற பாடலை தான் நான் பாட வேண்டும் என்றாள் அம்மா.
எப்படிம்மா இப்படி ஒரே மாதிரி நீங்க ரெண்டு பேரும் பாடுறீங்க என ஸ்ரீதர் கேட்க
ஏன் இப்போ உங்க அப்பா பாடிட்டு இருந்தாரா என கேட்டாள் அம்மா.
ஆமாமா, இப்ப அந்த பாட்டை அப்பாவும் பாடிட்டு இருந்தாரு என்றான் ஸ்ரீதர்.
பாடுவார், ஏன் பாட மாட்டார். எங்க அப்பாவை ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டவர் தானே உங்க அப்பா என்றாள் அம்மா.
கதை ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கு சொல்லுங்கம்மா, நான் கேட்கிறேன் என்றான் மகன் ஸ்ரீதர்.
நாங்களா ஏமாற்றினோம், நீங்க தானடி எங்களை ஏமாத்துனீங்க. கல்யாணம் செலவுக்கு 25,000 ரூபாய் தரேன்னு சொல்லிட்டு வெறும் பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை பிறகு தருகிறேன் என்று சொல்லி விட்டு இன்று வரை தரவில்லை உங்க அப்பா. நம்ம பையனுக்கு கல்யாண வயசு வந்து விட்டது, இனிமேயா உங்க அப்பா தரப்போறாரு? என்றார் அப்பா ரகு.
ஏம்மா, அப்பாவை ஏமாத்தினீங்களா? என மகன் கேட்க
என்னை பெண் பார்க்க வந்த போது நகை எல்லாம் எதுவும் வேண்டாம் சீர் கூட உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என சொன்னார்கள் உங்க அப்பாவும் தாத்தா, பாட்டியும். நிச்சயம் முடிந்த பிறகு பெண்ணுக்கு பத்து பவுன் நகை போடுங்கள். கல்யாணம் காட்சிக்கு போனால் கழுத்தில் ஒன்றும் இல்லாமலா போவார்கள். உங்க பொண்ணுக்கு தானே போடுகிறீர்கள் என 10 பவுன் கேட்டார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் எங்க அப்பா எனக்காக சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகையை போடத்தான் செய்வார்.எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிச்சயம் முடிந்த பிறகு நகை கேட்டா எங்க அப்பாவுக்கு எவ்வளவு வேதனை இருக்கும். பேசினால் மீண்டும் பிரச்சனைகள் தான் வரும். விட்டு தள்ளு டா, எங்கடா? இங்க உக்காந்து இருந்தா உங்க அப்பாவ காணோம் என அம்மா கேட்க
நீங்க பேச ஆரம்பிக்கும் போதே எந்திருச்சு வெளியே போயிட்டாரு என்றான் மகன் ஸ்ரீதர்.
இப்படித்தான் ஏதாவது பேசினால் நைசா ஓடி விடுவார் உங்க அப்பா. எங்க மாமனார் குடும்பம் நல்ல குடும்பம் டா. திருமணம் ஆகி முதல் முதலில் அவங்க வீட்டுக்கு சென்ற போது மாமியார் உடைய 13 பவுன் காசு மாலையை எடுத்து கொடுத்து இதை நீ வச்சுக்கோமா என என் மாமியார் கழுத்தில் போட்டு விட்டார். சும்மா, உங்க அப்பாவா அப்பப்ப சீண்டி பார்க்கிறது தான். உன் அப்பா மாதிரி ஒரு நல்ல கணவர் எனக்கு கிடைத்தது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றாள் அம்மா.
உங்க ரெண்டு பேரையும் என்னால புரிஞ்சுக்க முடியலை, இருந்தாலும் நீங்கள் இப்படி பேசிக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றான் மகன் ஸ்ரீதர்..
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings