2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“எந்தன் நண்பியே.. நண்பியே ..” செல்போன் சிணுங்க, ஆழ்ந்த தூக்கத்தில் கையால் படுக்கையை துளாவினாள் நந்தினி. போனை கிடைத்ததும் அதை காதில் பொருத்தி “ஹலோ” என்றாள்.
” குட் மார்னிங் நந்தினி மேடம்! இன்னும் எந்திரிக்கலையா?” என்றாள் லீனா ..
” ஏண்டி ராட்சசி தூக்கத்தை கெடுத்துட்டு எந்திரிக்கலை யான்னு கேக்குற…?”
“அடிப்பாவி மணி ஒன்பதை தாண்டியாச்சு..அதிசயமா மூணு நாள் சேர்ந்தாப்ல காலேஜ்ல லீவ் விட்டிருக்காங்க. அதை இப்படி தூங்கியே வேஸ்ட் பண்றியேடி .. தீனா ,திலீப், அப்புறம் அந்த நெட்ட பையன் மோகன் ..குட்ட கத்திரிக்கா ஸ்டெல்லா …மலரு புள்ள, அழுமூஞ்சி அருணா எல்லாரும் இன்னைக்கு சிட்டி சென்டர் போலாம்னு இருக்கோம் .. நீ வர்றியாடி நந்தினி? “
” ஓகே பா வந்துடறேன்..”
குளித்துவிட்டு மஞ்சள் நிற லெக்கின்ஸ் …மெருன் கலர் டாப்ஸ்க்கு மாறினாள். கீழே வந்து டிபன் சாப்பிட்டவளிடம் அம்மா…
“என்ன நந்தினி.. வெளிய போறியா?”
“ஆமாம்மா.. சிட்டி சென்டர் போறோம் . லஞ்ச் அங்கேயே சாப்பிடுவோம் ..வர்றதுக்கு ஆறு மணி ஆயிடும்.அப்பா கிட்ட சொல்லிடுமா ..” என்றவள் நினைவாக கூலர்ஸ்ஸை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பினாள்.
காரை சிட்டி சென்டரில் பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்திவிட்டு வெளியே வந்தவள் கண்ணில் அவன் தென்பட்டான்.
சிகப்பு நிற கட்டம் போட்ட சட்டையும், கருப்பு பேண்டும் …
யார் இவன்..ஒரு வாரமாக எங்கே போனாலும் கண்ணில் தென்படுகிறான்.
பின்தொடர்கிறானா ..என்ன காரணம் இருக்க முடியும் யோசித்தாள். அவன் இன்னும் அதே இடத்திலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பேசாமல் லீனாவிடம் சொல்லுவோமா? வேண்டாம் அருணா தான் சரி …
நந்தினி அருணாவின் கையை அழுத்தினாள்.
” அருணா அந்த ரைட் சைடுல டூவீலர் பார்க்கிங் என்டுல ஒரு கட்டம் போட்ட சட்டை பையன் நிக்கிறான் பாரு..”
அருணா நைசாக திரும்பிப் பார்த்தாள்.. ..
“அவன் ஒரு வாரமாகவே என்ன பாலோ பண்றான் “
” உன் சொந்தக்கார பையனா இருக்குமா?”
” சொந்தக்காரனா இருந்தா இப்படி ஒளிஞ்சிருந்து பார்க்க மாட்டான் ..”
அதற்குள்” வாங்க உள்ள போவோம்” என்று ப்ரண்ட்ஸ் நகர, அதற்கப்புறம் நண்பர்களின் ஜாலியான அரட்டையில் ‘அவனை’ சுத்தமாக மறந்தே போனாள். கொஞ்சம் ஷாப்பிங், நிறைய விண்டோ ஷாப்பிங் பண்ணிவிட்டு, ..ஃபுட் கோர்ட் வந்து சாப்பிட்டனர் .
தன் கூலர்ஸ்ஸை கழட்டி விட்டு கண்களை டிஷ்யூ பேப்பரால் துடைத்துவிட்டு, திரும்ப போட்டுக் கொண்டாள் நந்தினி.
லஞ்ச் முடித்துவிட்டு, படத்துக்கு போலாம் என்று முடிவு செய்தனர். எல்லோரும் கிளம்பிவிட, புட்கோர்ட்டில் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ‘அவனை’ நந்தினி பார்க்கவில்லை .. தியேட்டரிலும் அவன் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான்.
இரவு 7 மணிக்கு வீடு திரும்பியவள், அப்பா கம்பெனி யிலிருந்து வந்திருக்க …
“டாடி வந்துட்டீங்களா? செம ஜாலியா இருந்தது. சிட்டி சென்டர் என் பிரண்ட்ஸோட போயிட்டு வந்தேன் .நாளைக்கு எங்க ஆபீஸ் டீம் அவுட்டிங் இருக்கு. ஓ.எம் ஆர் ரோட்ல உள்ள ரிசார்ட்க்கு போறோம் ..காலையில போயிட்டு ஈவினிங் ரிட்டன் ஆயிடுவோம்.”
நந்தினி, திலீப், மோகன், மூன்று பேர் காரிலுமாக சேர்ந்து எல்லோரும் கிளம்பினார்கள். ..ஏற்கனவே ஹாலும் மதிய லஞ்ச்சும் ஏற்பாடு பண்ணி விட்டார்கள்.
காலையில் எல்லோரும் ஹாலில் கேம்ஸ் கான்டெக்ட் பண்ண செம ஜாலியாக நேரம் போனதே தெரியாமல் போனது. லஞ்ச்கு பிறகு பீச்சுக்கு கிளம்பினர்..பீச்சில் சிலர் குளிக்க, மற்றவர்கள் அலையில் விளையாடி கொண்டிருந்தனர் .
அருணா தண்ணிய எடுத்து தெளிக்க, நந்தினி ஓடினாள். அருணா துரத்த, ரெண்டு பேரும் மூச்சிறைக்க நின்றார்கள்.
தன் கூலர்ஸ்ஸை கழட்டி, தண்ணீரை துடைத்து விட்டு போட்டுக் கொண்டு நிமிர்ந்த நந்தினி அதிர்ந்தாள்
“அருணா ‘அவன் ‘ இந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரன் நிற்கிறான்.அந்த படகுக்கு பின்னால நின்னு நம்மளையே பார்த்துகிட்டிருக்கான்.”
” ஆமாண்டி. அவனுக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கு.”
“ஒருவேளை என்ன கடத்துவதற்கு பிளான் பண்றானா?”
” யார் கண்டா காதலிக்க கூட பிளான் பண்ணுவான்!”
பின்னால் நின்று கொண்டிருந்த லீனா கூறிவிட்டு சிரித்தாள்.
“சிரிக்காத லீனா அவன் கொஞ்ச நாளா நந்தினிய பாலோ பண்றான்.நேத்திக்கு சிட்டி சென்டர்ல கூட பாத்தோம் .”
“ஏய் இதெல்லாம் டூ மச் ..என் பின்னால எவனும் வரமாட்டேங்கறானேன்னு ஏங்கிகிட்டு இருக்கேன் .உன் பின்னாடி ஒருத்தன் சுத்தினா அவனப் போய் க்ரைம் லிஸ்ட்ல சேர்த்து கடத்த போறாங்கறியே… .
பிரெண்ட்ஸ் எல்லோரும் வந்து சேர ” என்னாச்சுப்பா?”
“ஒன்னுமில்ல நந்தினிய ஒருத்தன் டாவடிக்கிறான்.
இந்த ரெண்டு லூசுகளும் அவன் என்னமோ டெம்போ ட்ராவலர் வச்சு கடத்தப் போற ரேஞ்சுக்கு பேசுறாங்க”
” ஒரு வாரமா ஃபாலோ பண்றான்னா .. ஒரு பயம் வரத்தானே செய்யும் . அவனை பார்க்க சற்று தொலைவில் தன் டூவீலரில் போய்க் கொண்டிருந்தான். உங்களையெல்லாம் பார்த்ததும் நழுவிட்டான்”
” நந்தினி ஒன்னு செய்வோம். நாளைக்கு நீ எப்போதும் போல கிளம்பி எங்களப் பாக்கவா ..என் அண்ணன் இன்ஸ்பெக்டர் தானே அவரிடம் சொல்லி, அவன் பாலோ பண்ணும் போது கையும் களவுமாக பிடிச்சு விசாரிக்கச் சொல்லுவோம்”
என்றான் திலீப் .
அது நல்ல பிளானாக எல்லோருக்கும் தோன்ற ..
“அப்ப நாம ரெகுலரா சந்திக்கிற காபி ஷாப்ல சந்திப்போம். இப்போதைக்கு அப்பா, அம்மாட்ட சொல்லாத. அவங்க டென்ஷனாயிடுவாங்க… நாம பாத்துக்கலாம்.”
மறுநாள் நந்தினி தன் வீட்டை விட்டு காரை வெளியே எடுத்து தெரு முனைக்கு வரும்போதே பார்த்து விட்டாள் …
” திலீப் அவன் என்னை ஃபாலோ பண்ணுகிறான் ” என்று மெசேஜ் கொடுத்தாள்.அவள் காபி ஷாப்பில் வண்டியை நிறுத்த… அவன் சற்று தொலைவிலிருந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் பின்னால் வந்த போலீஸ் ஜீப், அவன் அருகே நிற்க, கொத்தாக அவனை தூக்கி உள்ளே போட்டு கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்தனர் .
” சொல்லுடா… எதுக்காக அந்த பெண்ண பாலோ பண்ணின. அவ பணக்கார வீட்டு பொண்ணு கடத்தினா காசு கேட்கலாம்ன்னு தானே .காரணத்தை சொல்லலேன்னா தோல உரிச்சிடுவோம்”
“ஐயோ சார்… நான் நல்ல குடும்பத்து பையன் சார் .. அப்படிப்பட்டவன் எல்லாம் இல்ல .”
அவன் அழ ஆரம்பிக்க, கான்ஸ்டபிள் லத்தியால் அவனை வெளுக்க தொடங்கினார் .
” சார் நான் சும்மா பார்க்கத்தான் செஞ்சேன். கடத்தனும்னு நினைக்கல ..சார் என்ன விட்டுடுங்க அவன் கதறிய கதறல் ஸ்டேஷன் வெளியே வரை கேட்டது.
“அந்த பெஞ்சில் உட்காருடா இன்ஸ்பெக்டர் வருவாரு.”
நந்தினியும் அவள் நண்பர்களும் வந்து சேர ..
” மேடம் எவ்வளவு கேட்டாலும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான். அடி நொறுக்கியாச்சு ..பார்த்தா அப்பாவி பயலாத் தான் தெரியுறான்,”
” சார் நான் அவன்கிட்ட பேசுறேன் ..”
பரிதாபமாக சட்டை எல்லாம் கிழிந்து, உதட்டின் ஓரத்தில் ரத்தம் சொட்ட, உடம்பெல்லாம் அடி வாங்கிய காயத்துடன் அழுது கொண்டிருந்தவன் அருகில் சென்றாள் நந்தினி ..
” நீ… நீங்க ..யாரு எதுக்காக என்ன பின் தொடர்றீங்க? உங்களுக்கு என்ன வேணும்? “
“எனக்கு அபி.. அபி ..வேணும்… என்னோட அபி வேணும் ..”
“நீங்க பயப்படாம உண்மைய சொல்லுங்க .?”.அவன் அருகில் சென்றவள், அவன் முகத்தை சரியாக பார்க்க தன்னுடைய கூலர்ஸை கழட்டினாள்.
ஒரு நிமிடம் தன் அழுகையை நிறுத்தி விட்டு, அவளுடைய கண்ணையே உற்றுப் பார்த்தான்.
திடீரென்று அவன் ” நான் அபியை பாத்துட்டேன்… அபி..அபி… என்ன விட்டுட்டு ஏம்மா போன? ‘அண்ணா.. அண்ணா’ன்னு ஆசையாக கூப்பிடுவியே ..நீ என்னையே பார்த்துகிட்டு இருந்தும் கூட கூப்பிட உனக்கு வாய் வரலையே?” என்ற கதறினான்.
நந்தினி ” சொல்லுங்க ஏன் என்ன பார்த்ததும் இவ்வளவு டிஸ்டர்ப் ஆகுறீங்க?”
” நான் உங்களப் பார்க்க உங்க பின்னாடி வரலைமா.. உங்க கண்ண பாக்கத்தான் இவ்வளவு தூரம் அலைந்தேன்.. இப்ப பாத்துட்டேன் …என்னோட தங்கச்சி அபியோட கண்ண பாத்துட்டேன்…” என்று தேம்பிதேம்பி அழுதான் .
” என்ன மன்னிச்சிடுங்க.. நான் உங்கள தப்பா நினைச்சுட்டேன் .நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ..?”
” உங்களுக்கு கண் கொடுத்த அபிராமியோட அண்ணன்தான் நான்.அபிக்கு தான் ஒரு மருத்துவராகனும்னு அவ்வளவு ஆசை.மெடிக்கல் சீட் கிடைச்சா எல்லாரும் சாமிக்கு வேண்டிக்குவாங்க .ஆனா அவ என்ன வேண்டிக்கிட்டா தெரியுமா? ‘ தன்னுடைய கண்ணையும், உடல் உறுப்புகளையும், தானமாக எழுதி வைச்சிடுவேன்னு சொன்னா’. அத மாதிரி எழுதி வச்சா..
என் கண் முன்னாடியே ரோட கடக்கும்போது லாரில அடிபட்டுட்டா.. ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு போனோம். எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாற்ற முடியல ..அவ ஆசைப்பட்டபடி அவளுடைய உறுப்புகளையும், கண்களையும் தானமா வழங்கினோம்”
அவ உறுப்ப தானமா பெற்றுகிட்ட எல்லாரையுமே நான் பாத்துட்டேன் . ஒரு விபத்துல கண்களை இழந்த உங்களுக்கு தான் அவள் கண்களை பொருத்தி இருக்குன்னு சொன்னாங்க. உங்களுடைய கண்களை பாக்கனும்ங்கிற ஆர்வத்துல தான் உங்க பின்னாடியே தொடர்ந்தேன்.
ஆனா நீங்க கண் ஆபரேஷன் ஆன காரணத்தினால எப்போதும் கூலர்ஸ் போட்டிருந்ததால உங்க கண்ண பாக்க முடியல. அதுக்குத்தான் சுத்தி சுத்தி வந்தேன். இப்ப உங்க கண்ண… என் தங்கையுடைய கண்ண பாத்துட்டேன் … இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் . அவ கண்களை நேரடியா பார்த்த திருப்தி போதும் .
நந்தினியின் கண்களில் கண்ணீர் வர” ப்ளீஸ் அழாதீங்க.. என் தங்கை கண்ணிலிருந்து கண்ணீர் வரக்கூடாது. நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் ..”
கேஸை வாபஸ் வாங்கிட்டு, அவனை வெளியே கூட்டிக் கொண்டு வந்தனர் நண்பர்கள் ..
நந்தினி ” இனி உங்கள் தங்கையை எந்த நேரமும் வீட்டிற்கு வந்து பார்க்கலாம் அண்ணன்ங்கிற உரிமையோடு … என் நல்லது, கெட்டது எல்லாத்துக்குமே நீங்கள் தான் முன் நிற்கனும் .. ” என்றாள் நெகிழ்வோடு ..தங்கையைப் பா ர்த்த நிம்மதியோடு நடந்தான் முத்துக்குமார் .
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings