மார்ச் 8 உலக மகளிர் தினம். வாட்ஸ்அப் குரூப்பிலும், ஸ்டேடஸ்ஸிலும் முகநூலிலும் மகளிர் தின வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. உண்மையில் மகளிர் தினம் கொண்டாடும் நிலைமையிலா பெண்களின் நிலை இருக்கிறது?
ஏன் இல்லை? இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக ஏன் ஒரு படி மேலாகவே சம்பாதிக்கும் அளவகற்கு பெண்களின் நிலை உயர்ந்து இருக்கிறது. தனக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கிறது இதற்கு மேல் என்ன வேண்டும்?
உண்மைதான் வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் பிறகு எதற்கு இன்றும் #justice for என்று எதோ ஒரு பெண்ணின் பெயரையோ அல்லது பெண் குழந்தையின் பெயரையோ சமூக வளைதளத்தில் குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். குமரி ஆனாலும் கிழவி ஆனாலும் பிஞ்சு குழந்தை ஆனாலும் ஆள் அரவமற்ற இடத்தில் இருந்தால் ஆபத்து தான். அவள் கிழிந்த நாறாகவோ சாக்கு மூட்டையில் பிணமாகவோ தான் வீடு திரும்புகிறாள்.
பிறகு எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டம்? தன் உடைமைகள் இன்றி தனக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் எதற்கு இந்த கொண்டாட்டம். தவறுகளை தடுக்க முடியவில்லை என்றாலும் தவறு செய்தவர்கள் ஆவது தண்டிக்க படுகிறார்களா? இல்லை எனில் மகளிர் தின கொண்டாட்டம் மட்டும் எதற்கு?
சிந்தியுங்கள்!
பெண்ணே! கவிஞர்கள் வர்ணிப்பது போல் ரோஜா மலராக இருக்காதே! கசக்கி எறியப்படுவாய்
முட்களாக இரு! முகர்ந்து பார்க்க கூட பயப்படுவார்கள்.
தேயும் நிலவாக இருக்காதே! சுடும் நெருப்பாக இரு! உன்னிடம் நெருங்க அஞ்சுவார்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings