in

தேவன் வருவாரா (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர்

நூலின் பெயர்: தேவன் வருவாரா

நூலின் ஆசிரியர்: ஜெயகாந்தன்

கற்பு என்பது என்ன?

 கற்பு மனிதகுலத்தின் இருபாலருக்கும் சமமானதா?

 ஆணுக்கும் கற்பு உண்டு என்றால் அரசன் முதல் ஆண்டி வரை பல பெண்களை மணப்பது ஏன்? அவர்களை இந்த சமூகம் குறை கூறாதது ஏன்?

 கற்பு மனம்  சம்பந்தமானதா? உடல் சம்பந்தமானதா ?

 மனம் சம்பந்தமானது என்றால் 3 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார் என்று கூறுவதும்  மனநிலை பாதித்த பெண் கற்பழிக்கப்பட்டு குழந்தை பெற்றார் என்று கூறுவதும் சரியான கூற்றா? சிறுமியோ மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணோ இதில் மனம் ஒத்தா இருந்தினர். இல்லைதானே அப்பொழுது அவர்கள் கற்பழிக்கப்பட்டனர் என்று கூறுவது எவ்வாறு சரியாகும்?

 பிணவறையில் பெண் பிணத்தை ஒரு காமுகன் பயன்படுத்துகிறான் என்றால் பிணத்திற்கு கற்பு போய்விட்டது என்று அர்த்தமா?

 சில இடங்களில் ஆண்கள் செய்யும் தவறுக்கு கூட அவரின் தாய் பெண்ணைப் பற்றிய இழிவான வார்த்தைகளை பயன்படுத்தப்படுகிறது. தவறு செய்தவர் ஆண் என்றாலும் நாம் குறை சொல்வது என்னவோ அவரைப் பெற்ற  பெண்ணை மட்டும் தான்.

ரோட்டில் பயணம் செய்யும்போது காரை ஓட்டும் ஓட்டுநர் சரியாக ஓட்டவில்லை என்றால் கூட அவரின் தாயை மையமாக வைத்தே கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் சமுதாயத்தின் வழக்கமாக உள்ளது. ஏன் ?  இந்த பாகுபாடு ஏனெனில் இந்த சமுதாயம் ஆணாதிக்கம் உடையதாக உள்ளது.

தன்முனைப்பு திருமணம் செய்து கொண்டால் கூட பெண்ணையே இழிவான சொல்லை பயன்படுத்துகின்றனர். அவன் ஆண்மகன் இவளுக்கு எங்க போச்சு புத்தி என்று கேட்கும் சமூகம் தான் நம் சமூகம்.

 கற்புக்கரசி என்றால் வாழை மரத்தை எரிக்க வேண்டும். மழை பெய் என்றால் பெய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்களே ஒருவேளை அடுப்பங்கரையில் இருந்து வானிலை அறிவிப்பு வரை பெண் கற்றிருக்க  வேண்டும் என்பதாலா ? இல்லை இல்லை. இவளை அடிமைப்படுத்தும் திட்டம்

 ஏன் இந்த கேள்வி எல்லாம் தேவன் வருவாரா கதையில் மனோநிலை பாதிக்கப்பட்ட அழகம்மை என்ற  பெண் * அவ்வப்போது சித்தம்* *தெளிந்து* *சித்தாள்* வேலை செய்கிறாள். இவளுக்கு ஆரோக்கியம் என்ற  கிழவி  அடைக்கலம் தருகிறாள்.

ஆரோக்கியம் என்ற கிழவிக்கு இசபெல் என்ற மகள் இருந்து வயது கோளாறு காரணமாக பிரிந்து சென்றுவிட்டாள். அதனால் அந்தக் கிழவி அழகம்மை தன் மகள் போல் வளர்க்கிறாள்

ஒருநாள் தெரிகிறது கர்ப்பமாக இருப்பது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இவ்வாறு செய்தவன் யார் என்று தெரியாமல் கிழவி குழம்புகிறார் அப்பொழுது தனக்கு நடந்த அநீதி தெரியாமல் தேவன் வருவாரா என்று கேட்கிறாள் அழகம்மை அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அருகில் இருப்பவர்கள் பேசிக்கொள்வதை கேட்டு குழந்தையின் தந்தை யார் என தேடுகிறாள்.

 தேவனே தகப்பன் இல்லாதவர் தானே எத்தனை தேவன் வந்தாலும் இந்த மானுடத்தை மாற்றுவது மிகவும் கடினம்.

நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், அரிசி,முட்டை,இறைச்சி  வகைகள் உடுத்தும் உடை வீடு கட்ட பயன்படும் கல் மண் சிமெண்ட் இவை எப்படி கிடைக்கின்றன (நமக்கு தெரிவதில்லை ஏனெனில் சுகியில் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு காண்ட்ராக்டில் வீடுகட்டிவிட்டு வாழ்க்கை நடத்துகிறோம் ) எனவே இவை எப்படி கிடைக்கின்றன  என்பதை பற்றி நம் குழந்தைகள் கற்றுக்கொள்ள செய்வோம். தாய் தந்தை அற்றவர்களை பார்த்து உன் தாய் தந்தை யார் என்று கேட்டு சிலுவையில் அறைய கற்றுத் தர வேண்டாம்  வேண்டாம்……. தேவன் வருவாரோ இல்லையோ நம் எதிர்கால குழந்தைகளை தேவன் ஆக்குவோம்.

 ஆணும் பெண்ணும் சமம் என்று கற்றுத் தரவோம்.

“” நீக்க வேண்டாம் கர்ப்பப்பை நீக்க வேண்டியது ஒரு சாரருக்கான அநீதி குப்பை “””

நன்றி

 ச.பூங்குழலி,

வடசேரி,

தஞ்சாவூர் மாவட்டம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறந்து போனாளே (சிறுகதை) – சுஶ்ரீ

    கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 3) – ராஜேஸ்வரி