தன்னைப் பார்த்து சிரிப்பவர்களை கூட பார்த்து சிரிக்காது தன் வேலையை தானே செய்து கொள்ளும் ஒரு அதிசய மனிதனோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்…..
இவனை தினமும் நடக்கும் சாலையில் தன்னை அழகாய் கொஞ்சி கூப்பிடும் அழகிய பெண்களை பார்த்து கூட மயங்காது அமைதியாக ஒரே இடத்தில் நிப்பான் தன்னை சுற்றி பெரும் கூட்டம் இருந்தாலும் தன்னுடைய குரலில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் இவனுக்கும் உண்டு……
மனிதநேயம் இவனுக்கும் உண்டு நன்றி உணர்ச்சி மனிதனைத் தாண்டிய ஒரு மாபெரும் மனிதநேய பண்பில் சிறந்தது என்று இவனை குறிப்பிடலாம்…..
தன்னை யாரும் பார்க்காத போது பிறரிடம் போய் அடிக்கடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான் ஆறறிவு படைத்த மனிதனும் இவனைப் பார்த்தால் சற்று ஏளனத்துடனும் பயத்துடனுமே பார்ப்பான்….
ஆனால் இவனை அதிக நபர்கள் ரசித்து வளர்ப்பது உண்டு இவனிடம் அதிக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்ட ஒரு சில நபர்கள் வைத்திருக்கின்றனர்…..
ஆனால் அதை பெரிதும் விரும்ப மாட்டான் இவன் நடிகனா? இல்லை முக்கிய பிரமுகர்? என்று நீங்கள் யோசிக்கும் வேளையில் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்… “மை நேம் இஸ் மணி”…..
இதைப் பார்க்கும் அனைவருக்கும் நகை பூட்டி சிரிக்கத் தோன்றும் ஆனால் இது முற்றிலும் ஆன உண்மை….
உண்மைதான்….
“நாய்” என்று கூறுவதற்கு கூட நான் கூசுகிறது அதுவும் நம் குடும்பத்தில் ஒரு நபர் தான் என்று அதற்கும் நமக்கு பிரியமான பெயர்களின் பெயரை அதற்குச் சூட்டி மகிழ்வதும் உண்டு…..
தனிமையின் நலம் விரும்பியே இந்த மணி எத்தனையோ பொழுதுகளை தனிமையில் கடித்த ஒரு சில நபர்களுக்கு உற்ற துணையாய் இருப்பது அவர்கள் வளர்க்கும்…..
செல்லப் பிராணிகளை அவற்றில் முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் நாயை அதிகம் விரும்பி வளர்க்கின்றன…… ஒவ்வொரு வீட்டிலும் இச் இச் என்று கொட்டுவதும் கூப்பிட்ட குரலுக்கு வாலை ஆட்டிக் கொண்டு தன் முன்னாள் வந்து நிற்பதும் தனது வாடிக்கையான வழக்கமாக கொண்டிருந்தது மணி…..
அதற்கும் ஒரு படியாக ஒரு சில நபர்கள் தன்னுடைய அனைத்து நேரங்களிலும் மணி “யை வைத்துக் கொள்ள விரும்புவர்……. ஆனால் அவனும் யாரையும் கண்டு கொள்ளாது தனக்குரிய கம்பீரமான நடையில் நடந்து வருவான் இப்படியே எல்லா மனிதர்களிடமும் அன்பையும் பரிவையும் பரிமாறிக் கொள்வான்….
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அனுபவங்களுடனே பயணித்துக் கொண்டிருக்கிறான்……
தெருவில் இவனை எரிச்சலுடன் காண்பவர்களும் உண்டு ஆனால் இவனோ பதிலுக்கு அவர்களது பின்னாடி வாலை ஆட்டிக் கொண்டு செல்வது இவனுடைய தனித்துவக் குணமாகவே இருக்கும்….
ஒரு பெரிய விழாக்களிலோ அல்லது திருமண சடங்குகளிலோ அனைவரும் உண்டு அளித்தபின் இருக்கும் இடத்தை தூக்கி எறிவார்கள் அதை அதையும் தனக்குரிய பொது விருந்தோம்பல் முறை என்று தெருவோரமாய் வீசப்பட்ட வாழை இலையில் உள்ள எச்சில் சாதனங்களை எடுத்து உண்பான்…..
தன்னை ஆசையோடு வளர்ப்பவர்களுக்கு எப்பொழுதும் நன்றி உணர்வுடனே இருப்பான் இதனால் இவனை அனைவரது இல்லங்களிலும் பார்க்கலாம் இவனை “காவல் தெய்வமாக” தன்னுடைய சொந்த “பிள்ளையாக” பாவித்து வளர்ப்பர்….
இரவு முழுவதும் தூங்காமல் அங்கும் இங்குமாய் ஒரு சில மணிகள்(நாய்கள்) தெருவில் விளாத்திக் கொண்டுதான் இருக்கிறது…
வழியெங்கும் கூட்டம் கூட்டமாக இருந்தாலும் தன்னுடைய கூட்டத்தை கண்டவுடன் ஆனந்தம் அடையாது தனக்குரிய குரலில் உயர்த்தி கத்துவதும் இவனுடைய வழக்கமான ஒன்று…..
அதிகாலையில் “வாக்கிங்” வரும் பெரியவர்கள் கைகளிலும் சிறியவர்கள் கைகளிலும் மணியின் கழுத்து பிடி அவர்களிடமே இறுகப் பற்றி இருக்கும் இவர்களுடன் சேர்த்து மணியும் “வாக்கிங்” வருவது ஒரு வழக்கமாக ஒன்று….
தன்னை வளர்ப்பவர்களிடம் மட்டும் இது பாசத்தையும் பரிவையோ காட்டாது அதையும் தாண்டி அவர்களது குடும்பத்தோடு ஒரு அங்கமாய் உடன் இருக்கும்…..
அவர்களுக்கு, ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே முந்திக்கொண்டு ஓடிவரும் ஏதாவது ஒரு வேலை சொன்னால் அடுத்த நொடியே ஓடி வந்து நிற்கும் இது மனிதர்களுக்கு உரிய குணங்கள் கிடையாது அதையும் தாண்டி ஒரு சிறந்த குணமாகவே இது இருக்கும்….
நன்றி என்ற சொல்லுக்கு முதலில் வாலை ஆட்டி கொண்டு வருவது இந்த மணி மட்டும் தான் அது அனைவரது பார்வைக்கும் தெரியும் ஒருவர் தன்னிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும் எவ்வளவு வெறுப்பை காட்டினாலும் அவரிடமும் தொடர்ந்து பாசத்தையே காட்டக்கூடிய பண்பு இதுக்கு மட்டும் தான் உண்டு…..
இதை பயத்துடன் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான மிருகமாகத்தான் தெரியும் ஆனால் பாசத்துடன் தூக்கி வளர்ப்பவர்களுக்கு தான் தெரியும் இது ஒரு செல்லப்பிராணி என்று…..
இது குட்டியாக இருக்கும் போதே அனைத்து குழந்தைகளின் மனதையும் கவர்ந்திழுக்கும் அவ்வளவு ஒரு வசீகரப் பார்வையை கொண்டது இந்த மணி…..
நகர்ப்புறங்களில் அக்கம் பக்கம் வீடுகளில் கூட பேசிக் கொள்ள விரும்ப மாட்டார்கள் அனைவரது வீட்டு கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்ட நிலையில்தான் இருக்கும்……
யாரும் யாரிடமும் பேசுவதையோ, பழகுவதையோ அதிகம் விரும்புவதில்லை ஆனால், சிலரது வீட்டின் முன்னால் இவனை காணலாம்.,.. சிலரது கைகளில் இவனை காணலாம்….
சிலரது கார்களின் இவனை காணலாம்….
இவன் இல்லாமல் எந்த ஒரு இடமும் இல்லை……
பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் முன்னாலும் இவன் அழகாக ஓடி வலம் வருவான் இவனை விரட்டவோ அடிக்கவோ மனம் இருக்காது இதுவும் ஒரு காவலுக்கு தான் என்று சொல்லி செல்வர்…..
கிராமப்புறங்களில் இவன் இல்லாத வீடுகளே கிடையாது இவனை கூட்டிக்கொண்டு தான் வயல்வெளிகளுக்கோ காடுகளுக்கோ மலைகளுக்கோ பயமின்றி மக்கள் செல்வர்…..
இப்படியே இவனது பெருமைகளை கூறிக் கொண்டே போகலாம்….. ஊருக்கு வெளியே வெட்டருவாள் வேல் கம்பு உடன் வீற்றிருக்கும் காவல் தெய்வமான அய்யனாரு,சுடலைமாட, கருப்புசாமி, முனிசாமி, சின்னையன் கல்லானை,அதிகருப்பு, போன்ற காவல் தெய்வங்களிடம் இவன் அழகாக வாகனமாய் நின்று கொண்டிருப்பான்…..
பாரி வேட்டைக்குச் செல்லும் ஒவ்வொரு கருப்புசாமிகளும் இவனுடைய துணையில் தான் செல்கிறது…..
இப்படி இவனுடைய பெருமைகளையும் சிறப்புகளையும் கூறிக் கொண்டே செல்லலாம்….. இன்று முதல் இவனைப் பார்த்தால் அறிவை காட்ட விடிலும் பரவாயில்லை வெறுப்பை காட்ட வேண்டாம்……
ஒவ்வொரு வீடுகளிலும் இவனை வளர்த்து நம்முடைய தனிமையை போக்கிக் கொள்ளலாம் இவனும் ஒவ்வொருவருக்கும் சிறந்த நண்பனாக தான் இருப்பான்……பழகுவோம் அனைத்து உயிர்களுடனும் நேசிப்போம் அனைத்து பறவைகளையும் விலங்குகளையும் இவற்றுடன் சேர்த்து மதிக்கவும் செய்வோம்…
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings